714 ஒளிப்படக்கருவி
714 ஒளிப்படக்கருவி பகுதிகளுக்கிடையே சாளரத்திரை இருக்கும். இவை நடு அல்லது வில்லைகளுக்கிடையேயுள்ள சாளரத்திரை எனப்படுகின்றன. இவை 1/500 நொடியில் திறந்து மூடும் திறனுள்ளவை. வில்லையை மாற்றும் வசதி கொண்ட படக் கருவிகளில் ஒவ்வொரு வில்லை யுடனும் ஒரு சாளரத்திரை வைக்க வேண்டியதைத் தவிர்க்க, படக்கருவியிலேயே சாளரத்திரை அமைக்கப் படுகிறது. படச்சுருளின் தளத்திற்கு நேர் எதிராக வைக்கப்பட்டுள்ள இவை 1/1000 அல்லது 1/2000 நாடி வேகத்தில் திறந்து மூடுகின்றன. பல சாளரத் திரைகள் நீண்ட நேரம் திறந்திருக்குமாறு கையால் யக்கப்படுகின்றன. தற்சமயம் அனைத்துச் சாளரத் திரைகளுமே மின்னொளியுடன் (flash) இணைந்து இயங்கும்படி அமைந்துள்ளன. பழங்காலச் சாளரத் திரைகள் சலனமுறையில் இயங்கின. சாளரத்திரை எவ்வளவு நேரம் திறந்திருக்க வேண்டுமோ, அந்த நேரத்திற்கேற்றவாறு, சுருள் கம்பியால் இயங்கும் நேரங்காட்டியின் அமைப்புக் கொண்ட இயக்கம் இதைச் செய்கிறது. நெம்பு . படச்சுருளை முன்னால் செலுத்தும் கோலைச் சுற்றினால் இது சுருள் கம்பியைத் தூக்கி நிறுத்துகிறது. சாளரத் திரையைத் திறக்கும் பொத் தானை அழுத்தினால், அது குறித்த நேரம் திறந்து மூடுகிறது. பிற்கால வடிவமைப்பில் சிறிய. மின்னணுவால் இயங்கும் நேரங்காட்டி அமைப்பு உள்ளது. இதை நேரடியாகப் படக்கருவியிலேயே உள்ள ஒளியளக்கும் கருவியுடன் இணைத்தால், பட மெடுக்கும் நேரம் தானாகவே கட்டுப்படுத்தப்படும். மின்னணுவால் இயங்கும் சாளரத் திரையை, தேவைப்பட்டால் மிகுநேரம் திறந்திருந்து மூடும்படிச் செய்யலாம். மின்னணுவால் இயங்கும் கருவிகள் பெருகியுள்ளமையால் வை கொண்ட படக்கருவி களைத் தயாரிப்பது, நுட்பமிகு பொறிகள் கொண்ட படக்கருவிகளைத் தயாரிப்பதைவிட எளிதாகி விட்டது.எதிர்காலத்தில் சாளரத்திரை, வில்லைத் துளைப்படச்சுருள் முன்னால் நகர்வது முதலிய வற்றைக் கட்டுப்படுத்த நுண் கணிப்பொறிகள் பயன்படலாம். படமெடுத்தல். குவியச்செய்தல். ஒரு பொருளைத் தெளிவாகப் படம் பிடிக்க ஒளிப்படக் கருவியிலுள்ள வில்லை தெளிவான உருத்தோற்றத்தை ஏற்படுத்தும் திறன், ஒளிபுகும் திறன் இவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் உருத்தோற்றத்தைப் படச்சுருளில் சரியாகக் குவியச் செய்ய வேண்டும். படச் சுருளுக்கு அருகிலோ தொலைவிலோ வில்லையை நகர்த்துவதன் மூலம் உருத்தோற்றம் குவிக்கப்படுகிறது. நெடுந் தொலைப் பொருள்களை நோக்கிக் குவியச் செய்யும் போது, வில்லை படச்சுருளுக்கு மிக அருகில் செல் கிறது. அருகிலுள்ள பொருள்களைக் குவியச் செய்யும் வில்லை போது, வில்லை படச்சுருளிலிருந்து தள்ளி அமை கிறது. நோக்கு ஒளிப்படக் கருவியிலும், எதிரொளிக் கும் ஒளிப்படக் கருவியிலும். குவியச் செய்தல் நேரிடையாக உள்ளது. இவற்றில், தேய்க்கப்பட்ட கண்ணாடித் துண்டில் பொருளின் தெளிவான உருத் தோற்றம் ஏற்படும் வரை குவியத்தொலைவு சீர் செய்யப்படுகிறது. இத்தகைய தேய்த்த கண்ணாடி இல்லாத படக்கருவிகளில் படக்கருவியின் மேல் அல்லது பொருத்தப்பட்ட இடத்தில் குவியத் தொலைவு அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. படமெடுப்பவர்கள் படக்கருவியிலிருந்து பொருள்கள் இருக்கும் தொலைவையறிந்து, அதற்கேற்றபடி வில்லையை அமைக்க வேண்டும். சில கருவிகளில் படக்குறிகள் மூலம் இவை தெரிவிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மார்பளவு மனித உருவப்படம் அருகிலுள்ள பொருள்களையும் மலையின் படம் தொலைவிலுள்ள பொருள்களையும் குறிக்கும். புலத்தின் ஆழம். ஒரு பொருளை நோக்கி ஒளிப் படக் கருவி குவிக்கப்பட்டிருக்கும்போது, பொரு ளுக்கு அருகிலோ, தொலைவிலோ உள்ளவற்றைத் தெளிவாகக் காணஇயலாது. பொருள்களின் உருத் தோற்றங்களில் ஏற்படும் இத்தெளிவு மாற்றம் சிறிது சிறிதாகக் குறைகிறது. குவியப் புள்ளிக்கு முன்னும் பின்னும், பொருளின் உருத்தோற்றத்தின் தெளிவு சிறிது மாறுபட்டபோதும், இது கண்ணுக்குத் தெரியா மலிருக்கும் பரப்பே புலத்தின் ஆழம் எனப்படும். புலத்தின் ஆழம், வில்லையின் துளை குவியத் தொலைவு மற்றும் ஒளிப்படக் கருவிக்கும் பொரு ளுக்கு மிடையிலுள்ள தொலைவு இவற்றைச் சார்ந் துள்ளது. ஒளிப்படக்கருவியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் பொருள் இருக்கும்போது வில்லையின் துளையும், குவியத் தொலைவும் சிறியவாக இருப்பின் புலத்தின் ஆழம் மிகுதியாக இருக்கும். பொருள் படக்கருவியிலிருந்து எவ்வளவு தொலைவிலிருந்தா லும் புலத்தின் ஆழம் மிகுதியாக இருந்தால் படத்தி லுள்ள அனைத்தும் தெளிவாக இருக்கும். குறை புல ஆழம், தெளிவற்ற மங்கிய பின்புறக் காட்சி கொண்ட, பொருள் மட்டும் தெளிவாக உள்ள படத்தைத் தரு கிறது. பல ஒளிப்படக் கருவிகளில் வில்லைத் துளை யின் ஒவ்வோர் அளவுக்கும், படம் பிடிக்கப்படும் பொருள் எவ்வளவு தெளிவாக இருக்கும் என்பதைக் காட்டப் புல ஆழ அளவு கோல்கள் உள்ளன. பெட்டிப்படக் கருவிகளிலும், சாதாரணப் படக்கருவி களிலும், நிலைத்த குவியத் தொலைவு உள்ளதால் இவை நிலைத்த குவியத் தொலைவுள்ள படக் கருவிகள் அல்லது அனைத்துத் தகுதி வாய்ந்த படக் கருவிகள் எனப்படுகின்றன. இவற்றின் வில்லைகள் நடுத்தரத் தொலைவில் குவியத் தொலைவு உள்ள வாறும், படக்கருவியிலிருந்து சில மீட்டர் தொலைவி லிருந்தும் நெடுந்தொலைவில் உள்ள பொருள்களின் உ ருத்தோற்றங்கள் ஓரளவு தெளிவாகத் தெரியுமாறும் புல ஆழம் தயாரிக்குமிடத்திலேயே அமைக்கப்படும்.