உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிப்படக்கருவி 713

தோற்றம் தெரியும். இதிலிருந்து நேர் உருத்தோற்றம் அச்சிடப்படுகிறது. ஊசித்துளை ஒளிப்படக் கருவியில்,வில்லை(lens) இருக்குமிடத்தில், இதற்கு மாற்றாக ஓர் ஊசித் துளை உள்ளது. இதனால் ஏற்படும் உருத்தோற்றம் தெளிவாக இருப்பதில்லை. அனைத்துப் புதுவகை ஒளிப்படக் கருவிகளிலும் படச்சுருளில் தெளிவான உருத்தோற்றத்தைக் குவியச் செய்யும் திறனுள்ள கண்ணாடி அல்லது ஞெகிழி வில்லை, படச்சுருள் வெளிப்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்த உதவும் வில்லை. துளைக் கட்டுப்பாட்டமைப்பு, படம் பிடிக்கப்படும் பொருளைக் காட்டும் காட்சிக்காட்டி, படச் சுருளைத் தாங்குவதற்கும். படப்பிடிப்புகளுக் கிடையே படச்சுருளைச் சுற்றுவதற்கும் உதவும் கருவி, உருத்தோற்றத்தின் வெளிச்சத்தை ஒழுங்குபடுத்த உதவும் வில்லைத் துளை, அளவை மாற்றும் கருவி ஆகிய பல துணைக் கருவிகள் ஒளிப்படக்கருவிகளில் உள்ளன. மின்னொளி அளவு வண்ணங்களைக் கட்டுப் படுத்தும் வடிகட்டிகள், முக்காலிகள், பொருளை மிக அருகில் குவியச் செய்யும் கருவிகள் முதலியனவும் பொதுவாக ஒளிப்படக் கருவிகளில் பயன்படு கின்றன. ஒளிப்படக்கருவியின் பகுதிகள் ஒளிப்படக்கருவிப்பெட்டி. இது ஒரு முனையில் ஒரு நிலைத்த இடத்தில் வில்லையையும், மறுமுனையில் ஒளி புகாநிலையில் படச்சுருளையும் கொண்டுள்ளது. சாதாரண ஒளிப்படக் கருவிகளில் வில்லைக்கும் படச்சுருளுக்கும் இடையேயுள்ள தொலைவு நிலை யாக உள்ளது. ஆனால் புதிய படக்கருவிகளில் மிகச் சரியாகப் படம் பிடிக்க, இவ்விடைப்பட்ட தொலைவை மாற்ற முடியும். 2.5 செ.மீ. அளவே யுள்ள மிகச் சிறியது முதல் வரைபடம் மற்றும் செதுக்கு வேலைகளில் பயன்படும் மிகப் பெரியது வரை, பல்வேறு அளவுகளில் ஒளிக்கருவிப் பெட்டிகள் உள்ளன. வில்லை. ஒளியை வாங்கிப் படச்சுருளில் குவிப் பதே இதன் செயலாகும். இதன் குவியத் தெலைவை யும், படச் சுருளின் பொறுத்துப் அளவையும் பொருளைப் பார்க்கும் கோணம் அமைகிறது. விரிகோண மற்றும் தொலைநோக்கி வில்லை. படச் சுருளில் அளவுக்கேற்ப இருக்க வேண்டிய குவியத் தொலைவைவிடக் குறைவான குவியத் தெலைவைக் கொண்ட வில்லை. அப்படச் சுருளின் விரிகோண வில்லை எனப்படுகிறது. பொருளிலிருந்து ஒரு குறிப் பிட்ட தொலைவிலுள்ள ஒரு சாதாரண வில்லை யால் ஏற்படும் உருத்தோற்றத்தை விட இதே தொலைவில் இருக்கும் விரிகோண வில்லையால் உண்டாகும் உருத்தோற்றம் சிறியதாக இருக்கும், எனினும், இது விரிந்த கோணமுள்ள காட்சியைத் ஒளிப்படக்கருவி 713 தருகிறது. தொலைநோக்கி வில்லை சாதாரண வில்லையைவிட நீண்ட குவியத் தொலைவுள்ளது. பொருளிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருக்கும் சாதாரண வில்லை தரும் உருத்தோற்றத்தைவிட இதே தொலைவிலிருக்கும் தொலைநோக்கி வில்லை பெரிய உருத்தோற்றத்தைத் தருகிறது. ஆனால் இதன்மூலம் குறுகிய கோணமுள்ள காட்சியே கிடைக்கும். அணுக்கல் வில்லை (zoom lens). இது ஒரே வில்யிைலேயே பல்வேறு குலியத் தொலைவுகளைத் தருகிறது. வில்லையின் வெளிப்புறத்திலிருக்கும் கட்டுப்பாட்டு அமைப்பு, வில்லையின் பகுதிகளுக் கிடையேயுள்ள அளவுகளை மாற்றுவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட குவியத் தொலைவைத் தேர்ந் தெடுக்க உதவுகிறது. நோக்கி. எப்பொருள் படம் பிடிக்கப்படுகிறது என்பதைக்காட்டப்பயன்படும் உறுப்பு, நோக்கி (view finder) ஆகும். காட்சி எதிரொளிக்கும் படக்கருவி களில், பொருளின் உருத்தோற்றம், தேய்க்கப்பட்ட கண்ணாடித் திரையில் கொண்டுவரப்படுகிறது. பிற படக்கருவிகளில், காட்சி நோக்கிகள் பலவகை களில் உள்ளன. எளிய அமைப்புள்ள, கம்பிச் சட்டம் கொண்ட நோக்கி விளையாட்டுத் தொடர்பான படங்கள் எடுக்கப் பயன்படுவதால் விளையாட்டு இது எனப்படுகிறது. நோக்கி தற்சமயம் பெரும்பாலும் ஒளிக்காட்சி நோக்கிகள் பயன்படுகின்றன. படக்கருவியின் பின்னே உள்ள கண்நோக்கி மூலம் படமெடுப்பவர் பார்க்கும்போது, இவை, பெரிய தெளிவான உருத்தோற்றங்களைத் நோக்கிகள் படக்கருவியின் தருகின்றன. வில்லையிலிருந்து சிறிது விலகி உள்ள காரணத்தால் பொருள்களைப் படம் எடுக்கும் மிக அருகிலுள்ள நேரம் தவிர, பிற சமயத்தில், இடமாறு தோற்றப் பிழை ஏற்படுகிறது.சில காட்சி நோக்கிகள் இதையும் சீர் செய்து விடும் அமைப்பில் உள்ளன. காட்சி சாளரத்திரை. இது படச்சுருளில் ஒளி விழுவதற்கு ஒளிவிழும் நேரத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. பழைய முறையில், படம் எடுப் போர், வில்லை மூடியைத் தமக்கு வேண்டிய நேரத் திற்குத் திறந்து பின்னர் மூடிப் படம் எடுத்தனர். மிகக் குறைந்த நேரமே சாளரத் திரையைத் (shutter) திறக்குமாறும். சிறிது நேரமே திறந்து மூடுமாறும் பல சாளரத்திரைகள் உள்ளன. சில வளியாலும், சில ரப்பர் வளையங்களாலும் இயங்கின. பின்னர் வந்தவை பெரும்பாலும் சுருள் கம்பியின் விசையால் இயங்குகின்றன. சாளரத் திரைகள் படுகின்றன. ஒளிப்படக் மாறாத ரு வகையில் தயாரிக்கப் வில்லையைக் கொண்ட கருவிகளில், பொதுவாக வில்லை