ஒளிப்படப்பொருள் 719
வடி துணைக் கருவி. பல ஒளிப்படக்கருவிகள் தமக் குள்ளேயே ஒளி அளக்கும் கருவிகளைக் கொண்ட போதும், தனியான ஒளியளக்கும் கருவி தேவை யாகும். சில புதுமைப்படக் கருவிகளில் குறுகிய வில்லைக் கோணங்களையும், மின்னொளியில் அள வையும் அளக்க முடியும். சிலவற்றில் ஒளியின் நிறத் தையும், வெப்பத்தையும் கூட அறியலாம். மின்ன ணுவால் இயங்கும் பல மின்னொளிக் கருவிகள், சிறு அளவும் தானாகவே ஒளியைக் கட்டுப்படுத்தும் வசதியும் கொண்டுள்ளன. ஒளிப்பட வண்ண கட்டிகள், வண்ணங்களைக் கட்டுப்படுத்தவும், சிறப்பு விளைவுகள் தரவும் பயன்படுகின்றன. வில்லை மூடி மற்றும் சூரியத்தடுப்பு முதலியவை பளிச்சிடும் ஒளியைக் குறைக்கின்றன. மிக அருகில் படம் எடுக்க உதவும் வில்லை, விரிவாக்கக் குழல், துருத்தி முதலியன உள்ளன. முக்காலிகள் மற்றும் படக்கருவி தாங்கிகள்,படக்கருவியை நிலையாக வைக்கின்றன. படக்கருவியைச் சிறிதும் அசைக்காமலே சாளரத் திரையைத் திறக்கக் கம்பி மூலம் இயங்கும் சாளரத் திரைத் திறப்பான் அமைப்பு உள்ளது. சலனப் படக் கருவி. சலனப்படச் சுருள் பல அசையாப் படங்கள் கொண்டதாகும். சலனப் படச் சுருள். படக்கருவியினுள் நகரும்போது, இதன் இயக்கம் தொடர்ச்சியாக இல்லை. இதற்கு மாறாக, ஒவ்வொரு படத்தாளும் வில்லைக்குப் பின்னால் முழுதும் நின்று விடுகிறது. பிறகு சாளரத் திரை திறக்கப்பட்டு, படம் பிடிக்கப்பட்டு, படச் சுருள் அடுத்த இடத்துக்கு நகர்கிறது. ஊமைப் படங்களுக்கு ஒரு நொடிக்கு 18 பட வேகத்திலும், பேசும் படங்களுக்கு ஒரு நொடிக்கு 24 பட வேகத் திலும் படச்சுருள் நகர்கிறது. ஒளிப்படப்பொருள் இரா. வேங்கடசுப்பிரமணியன் ஒளிப்படத் துறையில் ஒளிப்படத்தட்டு (photographic plate), ஒளிப்படச்சுருள் (photographic film), ஒளிப் படத்தாள் (photographic paper) போன்றவை பயன் படுகின்றன. இப்பொருள்களில் முறையே கண்ணாடி. ஞெகிழி (plastic), தாள் முதலியன தாங்கிகளாக உள்ளன. இத்தாங்கிகளின் மேல் ஒருவித பால்மம் (emulsion) பூசப்பட்டுள்ளது. இப்பால்மங்கள், வெள்ளி ஹாலைடு படிகத்தை ஜெலாட்டினில் கரைத்துப் பெறப்படும் திண்குழைமக் (suspension) கரைசல் களாகும். இவற்றைப் பூசுவதன் மூலம் ஒளிப்படப் பொருள்களின் மேல் ஒளி நுண்ணுணர்வுள்ள படிவு கிடைக்கிறது. இப்படிவில்தான் பொருளின் முதல்படி உண்டாகிறது. தாங்கி ஒளிப்படப்பொருள் 719 ஒளிப்படத்தட்டு. ஒளிப்படத்தட்டுகளில் கண்ணா டியைத் தாங்கியாகத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் அவற்றின் ஒளித்தெளிவுத் தன்மையும் தட்டைத் தன்மையும் ஆகும். கண்ணாடித் தாங்கிகளின் பருமன் ஒளிப்படத்தட்டின் அளவிற்கேற்ப மாறுபடுகிறது. வழக்கமாக இவற்றின் பருமன் 1.0 - 4.8 மி.மீ. இருக்கும். ஒளிப்படச்சுருள். பலஆண்டுகளாக எளி தில் எரியும் தன்மையுள்ள செல்லுலோஸ் நைட்ரேட் என்னும் பொருளே ஒளிப்படச்சுருள்களில் தாங்கியாகப் பயன் பட்டு வந்தது. ஆனால் தற்போது இதற்கென்றே சில பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை செல்லுலோஸ் ட்ரை அசெடேட், செல்லுலோஸ் அசெடேட் ஆகும். இவை பாதுகாப்பானவை; மென்மையானவை; ஒளிஊடுருவக் கூடியவை; வண்ண மில்லாதவை; ஒளிச்சமச்சீரானவை; மெதுவாக எரியும் தன்மையுடையவை. மிகு உறுதி வாய்ந்த தாங்கிகளுக்கும் பிற பல்லுறுப்புச் சேர்மங்கள் பயன் படுகின்றன. அவற்றுள் வினைலேட், பாலிஸ்டைரின், பாலி கார்பனேட், பாலிஎஸ்ட்டர் ஆகியவை குறிப் பிடத்தக்கவை. இப்பொருள்களில் பாலிஎஸ்ட்டரில் குறிப்பாக டெரிப்தாலிக் அமில எஸ்ட்டரும், எத்தி லீன் கிளைக்காலும் சேர்ந்து கிடைக்கும். இவ்வகைப் பாலிஎஸ்ட்டர் பெரும்பாலான படச்சுருள்களில் தாங்கிகளாக உள்ளது. செல்லுலோஸ் எஸ்ட்டர்கள் தாங்கிகளாகப் பயன்படும்போது அவற்றில் வளையும் தன்மையை உண்டாக்க ஞெகிழ்விப்பிகள் (plasticizer) சேர்க்கப்படுகின்றன. படச்சுருள் தாங்கிகளின் பருமன் பொதுவாக 0.06 -0.23 மி.மீ. உள்ளது. 1.5 மீ. நீளமுள்ள தொடர் சுருளாகவும் செய்யப்படும். கூ ஒளிப்படத்தாள்.ஒளிப்படத்தாள்கள் நிறம் நீக்கப் பட்ட - செல்லுலோஸ் மிகுந்துள்ள தாளின் கூழிலி ருந்து தயாரிக்கப்படுகின்றன. இவ்வகைக் கூழில் வேதி யியல் மாசும், மரத்துகளும் இருத்தல் கூடா. இக்கூழில் தயாரிக்கப்பட்ட தாள்களில் ஈரவலிமை (wet strength) மிகுதியாக உள்ளது. இவற்றின் மேல் ஜெலாட்டினில் பேரியம் சல்ஃபேட் திண் குழைம மேற்பூச்சுப் பூசப்படு கிறது. இவ்வாறு பூசுவதன் மூலம் ஒளிபடத்தாளின் எதிரொளிப்புத் தன்மை (reflectance) மிகும். வெண் மைத்தன்மையைப் பெருக்க, தன்னொளிர் ஒளிர்விப் பிகள் ( fluorescent brightners) சேர்க்கப்படுகின்றன. வை மிக நீண்ட சுருள்களாகவும் கிடைக்கின்றன. பால்ம மேற்பூச்சு. ஒளிப்படப்பொருளான தட்டு, சுருள், தாள்களின் மேலும் ஒருவகை மேற்பூச்சுப் பூசப்படுகிறது. இவை பெரும்பாலும் வெள்ளி ஹாலைடு படிகங்களை ஜெலாட்டினில் கரைத்துப் பெறப்படும் திண் குழைமக் கரைசல்களாகும். இவ் வகையான பால்மங்கள் ஒளிப்படத்தட்டின் (சுருள்) மீது பூசுவதற்கு முன்பு ஒரு முறை பூசப்படுகிறது.