உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720 ஒளிப்படமுறை (நிலவியல்‌)

720 ஒளிப்படமுறை (நிலவியல்) இது அதன் மேல் பூசப்படும் மேற்பூச்சு நன்றாக ஒட் டிக்கொள்ள உதவி புரிகிறது. கீழ்ப்பூச்சுகள் பொது வாக ஒளிப்படத் தாள்களுக்குப் பூசப்படுவதில்லை. ஆனால் சில தனிவகைத் தாள்களுக்குப் பூசப்படுகின் றன. சான்றாக, நீர் எதிர்க்கும் (water repellant) தாள்களுக்குச் செயற்கைப் பல்லுறுப்புச் சேர்மங் களாலான பூச்சுகள்' பூசப்படுகின்றன. (வெள்ளி வெள்ளி பால்மம். ஒளிப்படவியலில் பயன்படும்பால்மங்கள், ஜெலாட்டினில், வெள்ளி ஹாலைடு குளோரைடு, வெள்ளி புரோமைடு, அயோடைடு) சேர்ந்து உண்டாகும் திண் குழைமக் இவற்றின் சுரைசல்களாகும். உற்பத்தியின்போது முதிர்ச்சி குறிப்பிடத்தக்கது. மேலும் இவற்றோடு பல வேதிப்பொருள்களைச் சேர்ப்பதால் ஜெலாட்டின் கடினமாகும். மேற் பூச்சுகளின் பருமனில் சீரான நிலை உண்டாகும். பால்மத்தை ஒரு குறிப்பிட்ட அலை நீளமுள்ள ஒளிக்கு உணர்வுடையதாக்க வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. தாங்கிகளின் மீது பால்மம் பூசப்பட்டு அவை குறிக்கப்படுகின்றன. தனால் பால்மம் தாங்கிகளின் மீது நன்றாகப் படிகிறது. அதன்பின் தாங்கிகளின் ஈர அளவு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு உலர்த்தப்படுகின்றது, பல்வகைப்படச்சுருள் களுக்கும், ஒரு சில தட்டுகளுக்கும் ஒன்றுக்கு மேற் பட்ட மேற்பூச்சுகள் (0.0002 அங்குலம்) தரப்படுகின் றன. பெரும்பாலான ஒளிப்படச் சுருள்களில் ஒரு புறமே மேற்பூச்சுப் பூசப்படுகிறது. சில கறுப்பு- வெள்ளைப் படச் சுருள்களுக்கு ஒரே பக்கத்தில் இரு முறை மேற்பூச்சுப் பூசப்படுகிறது. சில வண்ணப்படச் சுருள்கள் ஆறுமுறைக்கும் மேல் மேற்பூச்சுப் பெறுகின் றன். படச்சுருள்களின் வெளிப்புறத் தேய்வைக் குறைக்க கூருணர்வற்ற (non- sensitized) பூச்சுகள், பால்மப் பூச்சுகளின் மீது பூசப்படுகின்றன. மேற் படச்சுருள்களின் முன்புறம் பூசப்பட்ட ஜெலாட் டின் பால்மத்தால் ஏற்படும் சுருள் விசையைப் போக்கு வதற்குப் படச்சுருளின் பின்புறமும் ஜெலாட்டின் பூசப்படுகிறது. மறிநிலைப்படிவம் (negative) செய்யப் பயன்படும் படச்சுருள்களில் இருக்கும் பால்ம மேற் பின்புறமாகவோ பூச்சுக்குப் பால்ம பூச்சுக்கும் தாங்கிகளுக்கும் இடையிலோ எதிர்க்கும் ஹாலைடு (antihallation) பூச்சுகள் பூசப்படுகின்றன. சில படச் சுருள்களுக்கு உராய்வால் ஏற்படும் மின்னேற்றத்தைக் குறைக்கச் சில முறைகள் கையாளப்படுகின்றன. ஒளிப்படத் தாள்களுக்குக் கொடுக்கப்படும் மேற்பூச் சின் பருமன் ஒளிப்படச்சுருள்களுக்குப் பூசப்படும் மேற்பூச்சின் பருமனைவிடப் பல மடங்கு குறைவு. ஆனால் அவை மிகுதியாகக் கடினமாக்கப்பட்டவை ஆகும். - கி.மு.மோகன் ஒளிப்படமுறை (நிலவியல்) புவி அமைப்புகளைப் பற்றி தெளிவாக அறிந்து கொள் வதற்கு ஒளிப்பட முறை நிலவியல் படங்கள் (photo geological maps) பயன்படுகின்றன. கடந்து செல்ல முடியாத காடுகள் நிறைந்த நில அமைப்புகளை ஒளிப்பட நிலவியல் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒளிப்படங்களின் நுண் இழைமையும் (texture), துகள் அமைப்பும், ஓரிடத்தின் நிலவியலையும், நிலவியல் அமைப்புகளையும் அறியப் பயன்படுகின்றன. ஒளிப் படமுறையியலின் மூலம் பாறைப்படிவுகளின் அமிழ் கோணம், கண் மட்டம், வான் மட்டத்திற்கு (eye base, airbase) உள்ள விகிதம் ஆகியவற்றை வேறு சில காரணத்தால் ஏற்படுகின்ற மிகை மாறுதலையும் தவிர்த்து நுட்பமான பட்டறிவால் அறியமுடியும். வான்வெளி நில அளக்கையியல் (aerial survey) என்பது ஒரு புதிய அறிவியற் பிரிவாக வளர்ந்துள்ளது. வான்வெளி நில அளக்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அவையாவன: வான் ஒளிப்படம் எடுத்தல் (air photography). வான் ஒளிப்படங்கள் எடுக்கும் பயிற்சி நுண்ணறி வையும், அதற்கு உதவும் கருவிகளையும் குறிக்கும். இதற்குவிமானம், ஒளிப்படக் கருவி, படச்சுருள், கட்டுப்பாட்டுக்கருவி, மேலும் சில வரையறைகள் தேவைப்படும். . வான் ஒளிப்பட இயல் (aerial photography). இது ஒளிப்படம் எடுப்பதில் உள்ள நுண்ணறிவையும். நேர்குத்து வான் ஒளிப்படங்கள் (vertical air photos), சாய்வு வான் ஒளிப்படங்களின் குறைபாடுகளையும், வரையறைகளையும் உணர்த்தும். வான் நில அளக்கை அதன் குறிக்கோள், விமானத்தின் செயலாக்கம், விமானத்தின் நிலத்தடங்களை வகைப்படுத்துதல் என்பன இதில் அடங்கும். ஒளிப்படக் கருவியியல் என்பது (photo grammetry) வான் ஒளிப்படங்கள் மூலம் நில அமைப்புகளின் சரியான தொலைவு, உயரம் அல்லது ஆழம் ஆகியவற்றை நில வரைபடங் களாகத் (contour map) தயாரித்துத் தொகுக்கும் தொடர்புடைய துறையாகும். இவ்வியலில் பரு நோக்கு முறை (stereoscopy). திட்ட வரைமுறைப் படம் குறித்தல் (planimetric plotting), சம உயரக் கோடுகள் வரைதல் (method of contouring) என்பவை அடங்கும். வான் ஒளிப்படங்களின் விளக்கம். இது வான் ஒளிப் படங்களின் மூலம் பெறும் ஓர் அறிவியல் பிரிவு அல்லது ஒரு திட்டத்தின் மிக முக்கிய விளக்கமாகும். எடுத்துக் காட்டாக, நிலஇயல், வனஇயல் (forestry) அல்லது சாலையை ஒழுங்குபடுத்துதல்(road alignment) அல்லது நீர்ப்பாசனத் நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். வான்வெளி அளக்கையியல், வனஇயல்