742 ஒளி மறைப்பு
742 ஒளி மறைப்பு அவ்வாறு இயங்கும் கோள்களில் ஒன்றான புவியும் அதன் துணைக்கோள் சந்திரனும் தத்தம் பாதை களில் செல்லும்போது, சிற்சில சமயங்களில் சூரிய ஒளி ஒன்றன் மேல்படுவதை மற்றொன்று மறைக்கும். இதை ஒளி மறைப்பு எனலாம். சூரியனுக்கும் புவிக்குமிடையே சந்திரன் வரும் போது புவியின் மேலுள்ள பார்வையாளர்களுக்கு, சூரியனின் ஒரு பகுதியோ முழுச் சூரியனோ மறைக் கப்பட்டால் அதைச் சூரிய மறைப்பு (solar eclipse) என்றும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புவி யிருக்கும்போது, சூரிய ஒளி புவியின் மேல்பட்டு அத னால் புவியின் நிழல் சந்திரனின் மேல்பட்டு ஒளி யிழந்து தென்படுவதைச் சந்திர மறைப்பு (lunar eclipse) என்றும் கூறுவர். சந்திரன் சூரியனுக்கும் புவிக்குமிடையில் வரும் நாளை அமாவாசை என வும், புவி சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் வரும் நாளைப் பெளர்ணமி எனவும் குறிப்பிடுகின்றனர். படம் 1 இல் S, E.M முறையே சூரியன், புவி, சுந்தி ரனைக் குறிக்கின்றன. M. Ma, M, சந்திரன், புவி யைச் சுற்றும் பாதையாகும். Vயை முனையாகக் கொண்ட கூம்புப் பகுதியான V C D இல் சூரிய ஒளி படாததால், அப்பகுதி இருண்டிருக்கும். இது கருநிழற் பகுதி (umbra) யெனவும், VC L, VDM இல் ஒளிக் கதிர்கள் பகுதியாக விழுவதால் ஒளி குறைந்து காணப்படுவதால் இவை குறை நிழல் அல்லது புற நிழல் பகுதி (penumbra) எனவும் குறிக் கப்படுகின்றன. சந்திரன் மறைப்பு. சந்திரன் கருநிழற்பகுதியில் செல்லும்போது பௌர்ணமி நாளானால் சந்திரன் மறைப்பு ஏற்படும். ஆனால் ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் சந்திரன் மறைப்பு ஏற்படாது. ஏனெனில் சந்திரனின் பாதையும் சூரியனின் பாதையும் ஒன்றை யொன்று 5:2 இல் வெட்டிக் கொள்கின்றன. வெட்டும் 5:2இல் புள்ளி N N, கோள் சந்திகள் (nodes) எனப்படும். பௌர்ணமி நாளன்று சூரியனுக்கும் அவற்றின் நெட்டாங்குகளுக்கிடையே (longitudes) உள்ள வேறு பாடு180° ஆக இருக்கும். ஒன்று கோள்சந்தி N, க் கருகிலிருந்தால் மற்றொன்று 180° தொலைவில் கோள் சந்தி N, க்கருகே இருக்கும். இவ்வாறு கோள் சந்திகளுக்கருகில் சூரியனும், சந்திரனும் இருக்கும் போது பௌர்ணமி நாளானால் சந்திரன் மறைப்பு ஏற்படும். பிற பௌர்ணமி நாள்களில் ஏற்படாது. அதாவது சந்திரனின் அகலாங்கு (latitude) ஏறக்குறைய 57'க்குக் குறைவாக இருக்க வேண்டும். மேலும் அதன் அகலாங்கு ஏறக்குறைய 27' க்குக் குறைவாக இருந்து பெளர்ணமி நாளாயிருப்பின், முழுச் சந்திரன் மறைப்பும் 27' க்கு மிகுதியாகவும் 57' க்குக் குறைவாகவும் இருப்பின் குறைச் சந்திரன் மறைப்பும் ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சந்திரன் பாதை N2, சூரியப்பாதை படம் 2. இதைத்தவிர, சூரியனின் தொலைவையும் கணக்கிடும் போது. பௌர்ணமி நாளன்று சூரியன், தன் பாதையில் ஒரு கோள் சந்தியிலிருந்து ஏறக்குறைய 9°,5 தொலைவில் இருந்தால் சந்திரன் மறைப்பு உறுதியாகஏற்படும் என்றும் 12°30 தொலைவிற்கு அப்பால் இருந்தால் மறைப்பு ஏற்படாது என்றும் 9°5க்கும் 12°30 க்குமிடையிலிருப்பின் மறைப்பு ஏற் பட வாய்ப்புண்டு என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொலைவு9° 5 சந்திரன் மறைப்புக்குரிய மீச்சிறு மறைப்பு வரம்பு (minor ecliptic limit) என்றும். 12°30 மீப்பெருமறைப்பு வரம்பு (major ecliptic limit) என்றும் வரையறுக்கப்படுகின்றன. சந்திரன் மறைப்பு ஏற்படக் கூடிய சூழ்நிலை களாவன: அன்று பௌர்ணமி நாளாக இருக்க வேண்டும். சந்திரனின் அகலாங்கு மிகச் சிறியதாக இருக்க வெண்டும். சந்திரனின் அகலாங்கு. பௌணர்மி நாளன்று 27' க்குக் குறைவாக இருப்பின் சந்திரன் மறைப்பு முழுமையாகவும் 27' க்கும் 57. க்குமிடையிலிருப்பின் குறை மறைப்பாகவும் இருக்கும். 57' க்கு மேலிருப்பின் மறைப்பு ஏற்படாது. சூரியன் ஒரு கோள் சந்தியிலிருந்து முழுமதி நாளன்று மீச்சிறு மறைப்பு வரம்பான 9°5 க்குள்ளிருந்தால் சந்திரன் மறைப்பு உறுதியாக ஏற்படும். 12°30க்குமேலிருந்தால் மறைப்பு ஏற்படாது. இரண்டிற்குமிடையிலிருந்தால்