ஒளி மறைப்பு 743
B அ PM M ஆ ஒளி மறைப்பு 743 M படம் 3 அ மறைப்பு ஏற்பட வாய்ப்புண்டு. சந்திரன் மறைப்பு இரு வகைப்படும். கருநிழற் பகுதியில் சந்திரன் ஓரமாகச் சென்று இப்பகுதியைக் கடந்து விட்டால், சந்திரன் மறைப்பு, குறை மறைப்பாகும். (partial eclipse படம் 3அ)கருநிழற்பகுதியின் விட்டத் திற்கருகில் சந்திரன் செல்லும்போது, குறைமறைப் பில் தொடங்கி, (total eclipse) முழு மறைப்பு ஏற்பட்ட பிறகு குறைமறைப்பில் (படம் 3ஆ) முடியும். கருநிழல் விட்டத்தின் வழியாகவே செல்லும்போது முழு மறைப்பாக, மையம் வழியே செல்வதால் இது மைய மறைப்பு (central eclipse) எனக் கூறப்படு கின்றது. (படம் 3 இ). . சந்திரன் குறைமறைப்பாக அமையும்போது மறைப்பின் காலம் குறைவாக இருக்கும். முழு மறைப்புக்காலம் சற்றுக் கூடுதலாகவும் அதைவிட மைய மறைப்புக் காலம் மீப்பெருங்காலமாகவும் இருக்கும். மீப்பெரு சந்திரன் மறைப்புக்காலம் ஏறத் தாழ 4 மணி 15 நிமிடங்கள் என்றும் மீப்பெரு முழுச் சந்திரன் மறைப்புக்காலம் ஏறத்தாழ 2 மணி 8 நிமிடங்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சூரியன் மறைப்பு படம்- 1 சந்திரன் சூரியனுக்கும் புவிக்குமிடையில் தன் பாதையில் PQ வில் செல்லும்போது குறை அல்லது முழுச்சூரியன் மறைப்பு ஏற்படும். சூரிய ஒளி புவியின் ஒரு பகுதியில் படாமல் சந்திரன் மறைக்கும். சூரியன் மறைப்புகளுக்கான சூழ்நிலைகள். அன்று அமாவாசையாக இருக்கவேண்டும். சந்திர மையத்தின் அகலாங்கு 1: 28'.35க்குக் குறைவாக இருக்க வேண்டும். மேலும் சூரியன், சந்திரன் இரண்டின் கோண விட்டங்கள் (angular diameter) மாறிகளாகும். சூரியனின் விட்டம் 31'. 6 - 32'.6 வரை சந்திரனின் விட்டம் 29'.4 33'.6 வரை ஒவ்வொன்றும் இருக்கும் தொலைவை யொட்டி அவை மாறுதலடை யும். அமாவாசை நாளன்று சூரியன் மறைப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கும்போது, சந்திரனின் விட்டம், சூரி யனின் விட்டத்தைவிடப் பெரிதாக இருக்குமானால், முழுச் சூரியன் மறைப்பு (total solar) ஏற்படும்.