776 ஒளியியல் பொருள்
776 ஒளியியல் பொருள் படம் 4 உலாஸ்டன் பட்டகம் ஒளி செல்லும்போது அது இரு பாதைகளில் பிரிந்து செல்கிறது. இத்தகைய ஊடகங்களை இரட்டை விலகல் படிகங்கள் என்பர்.ஒரு புள்ளி வடிவ ஒளி மூலத்திலிருந்து ஒளி அலைகள் தள முனைவாக்கம் பெற்றுக் கோளக நெட்டுருளை வடிவத்திலும் வடிவத்திலும் பரவும். கோளக இரண்டாம் நிலை அலைகளாகப் பரவும் ஒளி அலைகள் ஒளி விலகலுக் கான விதிகளுக்குட்பட்டு விலக்கமடையும். இது இயல்பான கதிர் எனவும் 0 - கதிர் எனவும் குறிக்கப் படும். ஊடகத்தில் நெட்டுருளை இரண்டாம் நிலை அலைகளாகப் பரவும் ஒளி அலைகள் ஸ்நெல் விதியைப் புறகணித்துச் செல்லும். இக்கதிர்களை இயல்புக்கு முரணான கதிர் (extraordinary) அல்லது E-கதிர் எனக் குறிக்கலாம். இயல்பான கதிர்களின் ஒளி விலகல் எண் I. எனவும், இயல்புக்கு முரணான கதிர்களின் விலகல் எண் nE எனவும் குறிப்பிட்டால் அவற்றைப் பின்வருமாறு வரையறுக்கலாம். i. என்பது வெற்றிடத்தில் ஒளி அலைகளின் திசைவேகத்திற்கும் இயல்பான அலைகளின் திசை வேகத்திற்கும் உள்ள தகவு ஆகும். DE என்னும் மதிப்பை நேர் படிகங்களுக்கும்எதிர்ப் படிகங்களுக்கும் தனித்தனியாக வரையறுக்கலாம். நேர்படிகத்திற்கு IE என்னும் மதிப்பு வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகத்திற்கும் B அலைகளின் சிறும திசைவேகத்திற்கும் உள்ள தகவு ஆகும். எதிர்ப்பக்கத்திற்கு IE என்னும் மதிப்பு வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் E அலைகளின் பெரும திசைவேகத்திற்கும் உள்ள தகவு ஆகும். சோடிய ஒளிக்கற்றைக்கு ( = 589.3nm) கால்சைட் எனப்படும் கால்சியம் கார்பனேட்டிற்கு 18° C வெப்ப நிலையில் I. = 1.65836 எனவும் LO ne = 1.48641 எனவும் காணலாம். குவார்ட்ஸ் படி கத்திற்கு 1. = 1. 54425 எனவும் np = 155336 எனவும் மதிப்புகளைப் பெறலாம். நைக்கல் முப்பட்டகம். ஒரு கால்சைட் படிகம் அதன் மூலைவிட்டத்தில் வெட்டப்பட்டு இருபகுதிகளும் கனடா பால்சம் என்னும் சிமெண்ட்டால் ஒட்டப் படும். இச்சிமெண்ட்டின் ஒளிவிலகல் எண் E மற்றும் 0 கதிர்களுக்கான கால்சைட்டின் ஒளிவிலகல் எண்களுக்கு இடைப்பட்ட மதிப்புடையதாக இருப்ப தால் E கதிர் மட்டுமே ஊடுருவிச் செல்கிறது. O-கதிர் முழுதுமாக உட்புறமாக எதிரொளிக்கப்பட்டுத் திருப்பப்படுகிறது. முப்பட்டகத்தின் பக்கங்களில் பூசப்பட்டுள்ள கரும்பூச்சில் 0 கதிர் உட்கவரப்படு கிறது. கால்சைட் படிகத்தின் வடிவம் 1098, 71 பக்கக் கோணங்களைக் கொண்ட இணை கரமாகும். அதன் முனைப்புகளைத் தேய்த்துப் பின்னர் வழவழப்பாக்கி 719 கோணம் 68 ஆகக் குறைக்கவேண்டும். இப்படிகத்தை முனை முகப்பு களுக்கும் முதன்மைப் பரப்பிற்கும் செங்குத்தான பரப்பில் வெட்டினால் 24° பார்வைக்கோணம் கொண்ட நைக்கல் முப்பட்டகம் கிடைக்கிறது. இரண்டு நைக்கல் முப்பட்டகங்கள் ஒன்றுக் கொன்று குறுக்காக அமையும்போதும் ஓரளவு ஒளிக்கசிவு இருக்கும். ஏனெனில் வெளிப்படும் ஒளிக் கற்றையில் தள முனைவாக்கம் சீராக அமையாது. மேலும் E - கதிர் பக்கவாட்டில் இணைப் பக்கங் களுக்குச் சாய்வாகச் செல்லும். இக்குறையைப் பக்க வாட்டில் உள்ள இணைப் பக்கங்கள் மற்றதற்குச் செங்குத்தாக இருக்குமாறு செய்து நீக்கலாம். இந்த அமைப்பில் செங்குத்துப்படுகை காரணமாக ஒளிச் செறிவில் இழப்புக் குறைக்கப்படும். கால், அரை அலை நீளத் தகடுகள். மற்றும் E கதிர்களுக்கிடையே 7/2 என் னும் கட்டவேறு பாட்டை (1/4 - பாதைவேறுபாடு) ஏற்படுத்தும் படி கத்தகடு கால் அலை நீளத்தகடு எனவும் இது போல படம் 5. பாபினட் சீராக்கி