உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/803

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளியுணர்வி 779

உருவாகிறது. விண்மீன்கள், சூரியன். ஒளிவிடும் விண் பொருள்கள் ஆகியவற்றிலிருந்து வரும் ஒளி, அவற்றின் கூறுகளின் அலைநீளங்களுக்கு ஏற்றவாறு தோன்றும். நிறமாலையைக் காணப் பயன்படும் கருவி நிறமாலைகாட்டி (spectroscope) ஆகும். அதை ஒளிப்படமாகத் தருவது நிறமாலை வரைவி (spectrograph) எனப்படும். இக்கருவிகள் தொலை நோக்கியோடு இணைத்து அமைக்கப்பட்டிருக்கும். விண் பொருள்களின் ஒளி, நிறமாலைகளிலிருந்து அவற்றின் இயக்க வேகம், திசை பற்றி அறியலாம். நிறமாலையின் ஊடே பல கறுப்புக் கோடுகளையும் காணலாம். இக்கோடுகளுக்கு விண் பொருளின் வேதிக் கூறுகள் காரணமாக அமைகின்றன. எனவே நிறமாலை ஆய்வின் பயனால் விண்பொருள்களின் வேதி மூலகங்களைப் பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ளலாம். மேலும் அவற்றின் தட்ப வெப்பநிலை, அழுத்தம் முதலான செய்திகளை அறிந்துகொள்வதற்கு நிறமாலை வரைவி பயன் படுகிறது. விண்வெளியிலிருந்து ஆய்வு. ஒளி, வளி மண்டலத்தை ஊடுருவும் கதிர்வீச்சு முதலியவற்றால் தாக்கமடைந்தும் மங்கியும் விடுவதால் பல வானியல் நிகழ்வுகள் குறைந்தும் சிதைந்தும் கண்ணுக்குத் தோன்றாமலும் போய்விடுகின்றன. இத்தகைய குறைபாடுகளை நீக்குவதற்காக வளிமண்டலத்தைக் கடந்து செல்லக்கூடிய உயர் பலூன்களில் வானியல் கருவிகளை அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ளப்படு கின்றன. விண்வெளி ஏவுகணைகளில் அனுப்பப்பட்ட வானியல் கருவிகளும், செயற்கைக் கோள்களையே வானியல் ஆய்வுக்கூடமாகப் பயன்படுத்தும் முயற்சிகளும் பல புதிய செய்திகளைக் காண வழி வகுக்கின்றன. எளிதில் பெற முடியாத சில முக்கிய செய்திகளை விண்வெளிக்கு அனுப்பும் நிறமாலை வரைவிகளும், ஒளிப்படப் பெட்டிகளும், தொலை நோக்கிகளும் தந்துள்ளன. புவியை வலம் வரும் கோளாக வானியல் ஆய்வுக் கூடங்களையே அமைத்து இடைவிடாது வானியல் செய்திகளைத் தொகுக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. பார்க்க முடியாத சூரியனின் மறுபக்க ஒளிப்படம், வெள்ளி முதலான கோள்களின் அணுக்கத் தோற்றம் முதலிய பல அரிய செய்திகள் கிடைக்க ஒளியிய வானியலும், கதிர்வீச்சு வானியலும் வானியல் ஆய்வுக்கு மிகு பயனுடைவனவாக உள்ளன. கோ. சண்முகசுந்தரம் . ஒளியுணர்வி அனைத்து உயிரினங்களிலும் நரம்பு மண்டலத்தின் துணையோடு சில சிறப்பு உறுப்புகள் உடலுக்கு ஒளியுணர்வி 779 வெளியே அல்லது உள்ளே நடைபெறுவதை அறிய உதவுகின்றன. அவ்வுறுப்புகளுக்கு ஏற்பிகள் (receptors) என்று பெயர். கண் அடுக்குகள். கண் ஒரு பார்வை உறுப்பாகும். முதுகெலும்பிகளின் கண்ணை ஓர் ஒளிப்படக் கருவி யுடன் (camera) ஒப்பிடலாம். இது ஏறத்தாழ உருண்டை வடிவமானது. அது எலும்பாலான ஒரு குழியில் உள்ளது. அதன் அசைவுகள் மூன்று இணை யான பட்டைத் தசை நார்களால் கட்டுப்படுத்தப்படு கின்றன. விழிப்புறப்படலம் (sclerotic coat) விழி யடிக் கரும்படலம் (cheroid coat) பின் விழித்திரை (retina) என கண் மூன்று அடுக்குகளைக் கொண்டி ருக்கிறது. முதல் அடுக்கான விழிப்புறப்படலம் வெளிப்புறத்தில் உள்ளது. இது ஒளியைத் தடை செய்யுமளவு உறுதியான திசுவால் ஆக்கப்பட்டது. வெளிப்பார்வைக்கு இது வெள்ளையாகத் தெரி கின்றது. இது ஒளியை விழிப்பாவையில் (pupil) மட்டும் படுமாறு செய்கிறது. விழிப்புறப்படலம் கண்ணின் முன்புறத்தில் கருவிழிப்படலத்தின் (corna) தொடர்ச்சியாக உள்ளது. இரண்டாம் அடுக்கு. விழியடிக் கரும்படலம் என்னும் மையப்படலமாகும். இது பல இரத்தக் குழாய்களைக் கொண்டுள்ளது. இந்த அடுக்கின் உள்பரப்பு கருமையாக உள்ளது. அதனால் கண் உருண்டையின் உட்புறத்தில் எதிரொளியால் ஒளி சிதறுவதைக் குறைக்கிறது. இவ்விழியடிக் கரும் படலம் குற்றிழைத் தசையோடு (eiliary muscle) தொடர்ச்சியாக உள்ளது. குற்றிழைத் தசைக்கு முன்பகுதியில் ஐரிஸ் என்னும் தசைநார் உள்ளது. இது கறுப்பு அல்லது பழுப்பு அல்லது ஊதா நிறத் தில் இருக்கும். மையத்தில் உள்ள துளை கண்பாவை எனப்படும். இதன் அளவு ஒளிக்கற்றையின் தன்மைக் குத் தகுந்தவாறு சுருங்கி விரியும் தன்மை கொண்டது. மூன்றாம் அடுக்கு, பின் விழித்திரை ஆகும். இந்த அடுக்குதான் பார்வையின் உண்மையான இடம் ஆகும். இது கண் உருண்டையின் உட்புறப்பரப்பில் பரவியுள்ளது. இது ஒளியை அறியக்கூடிய பகுதி யாகும். இது ஐந்து அடுக்குச் செல்களால் ஆனது. விழித்திரையில் கோல் செல்கள், கூம்புச் செல்கள் என இரு வகைச் செல்கள் உண்டு. இவற்றின் மேல் ஒளிபடும்போது அதில் உள்ள நரம்புச் செல் களில் உந்தல்கள் ஏற்பட்டுப் பார்வை நரம்புகள் மூலமாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. விழித்திரையின் பார்வைப்புள்ளி (fovea) விழித்திரை யில் ஒரு பள்ளமாக விழிப்பாவையின் நேராகப் பின்னால் காணப்படுகின்றது. இதில் புகுவாய்கள் நெருக்கமாக உள்ளன. கண்ணிலிருந்து நரம்புச் செல் தொடங்கும் இடத்தில் கோல், கூம்புச் செல்கள் காணப்படுவதில்லை. அதனால் அந்த இடம் ஒளிக் கற்றைகளை உட்கவர முடியாது. வ்விடம்