780 ஒளியுணர்வி
780 ஒளியுணர்வி 5 21 17 15 14 16 ว 12 13 17 கண்ணின் கிடைமட்டக் குறுக்குத்தோற்றம் 10 1. இமை இணைப்படலம். 2. விழிவெண்படலம். 3. ஐரிஸ் 4.வில்லை. 8. குற்றிழைத்தசை. 6. வில்லையைக் குற்றிழைத் தசையுடன் இணைக்கும் பந்தகம். 7. கண்முன் அறை பி. கண்பின் அறை. 9+10. விழிக்கோளத் தசைகள் 11. விழி வெளிப்படவம். 12. கண்ணின் இரத்தநாள உறை. 13. விழித் திரை 14. பார்வைப்புள்ளி. 15. பார்வைத்தகடு. 18. பார்வை நரம்பு 17. விட்ரியஸ் பகுதி. குருட்டுப்புள்ளி எனப்படும். கோல் செல்கள் மங்க லான வெளிச்சத்திலும், கூம்புச் செல்கள் மிசை ஒளியிலும் வேலை செய்கின் றன. கண்ணாடி வில்லை இருபுறமும் குவிந்த உறுப் பாகும். அவற்றில் இரத்த நாளங்கள் இல்லை. இது ஒளிபுகும் தன்மை வாய்ந்தது. சிலியரித் தசையின் உதவியால் கண்ணாடி வில்லையின் வளைவு மாற்றப் படுகிறது. இதன்மூலம் கண்ணால் பொருள்களைப் பல்வேறு தொலைவுகளில் பார்க்கமுடிகிறது. கண்பள்ளங்களும் நீர்த்தன்மைகளும். கண்ணில் ரு அறைகள் உள்ளன. அவை முன்னும் பின்னுமாக அமைந்துள்ளன. முன் அறை கருவிழிப்படலத்திற்கும் கண்ணாடி வில்லைக்கும், பின் அறை கண்ணாடி வில்லைக்கும் பின் விழித்திரைக்கும் இடையில் உள்ளது. முன் அறை நீர்க்கூறாலும் (aqueous humor) பின் அறை பளிங்கு நீர்க்கூறாலும் (vitreous . humor) நிரப்பப்பட்டுள்ளன. இவ்விரு நீர்க்கூறுகளும் ஒளிக்கதிர்களைப் பின்விழித்திரையின் மையத்தில் விழச்செய்வதில் பங்கேற்கின்றன. கண்ணீர்ச் சுரப்பி கண்குழியின் வெளிப்புற மேல் ஓரத்தில் உள்ளது. அதன் நாளங்கள் இமை இணைச் சவ்வுப்பையின் மேற்புறத்தில் திறக்கின்றன. கண் கோளத்தின் முன் பகுதியில் எப்போதும் கண்ணீர் காணப்படுவதால் விழி வெண்படலம் உலர்வதில்லை. பார்வையின் வேதியியல். கோல் செல்களில் ரொடாப்சின் என்னும் வேதிப் பொருள் உள்ளது. ரொடாப்சினுடன், ரெட்டினைன் என்னும் நிற அணுவும்,ஆப்சின் என்னும் புரதமும் கலந்திருக்கும். ரொடாப்சினில் ஒளி தாக்கும்போது அது மஞ்சள் நிறக் கலவையாகிறது. இக்கலவையில் ரெட்டினை னும் ஆப்சினும் கலந்திருக்கும். ஒளியின் உட்கவர்பு நீடிக்கும்போது ரொடாப்சின் வைட்டமின் A ஆக மாற்றமடைகிறது. ஒளி ஊடுருவல் நின்று இருட் டாகும்போது கரோட்டினாய்டு மீண்டும் ரொடாப்சி னாகிறது. ஒளி புகுவதால் ஏற்படும் வேதி மாற்றங் களைப் பின்வருமாறு குறிப்பிடலாம். ரொடாப்சின் ஒளி லூமி ரொடாப்சின் ரொடாப்சின் மெட்டாரொடாப்சின் ரெட்டினைன் +ஆப்சின்
- வைட்டமின் A
கண் வேலை செய்யும் விதம். பொருளிலிருந்து வரக்கூடிய ஒளி கருவிழிப்படலம், கண்ணாடிவில்லை. + ஒம்மட்டீடியம் படிதக்கூம்பு. கரு விழிப்படலம், செல்கள், ராப்டோம், அடிச்சவ்வு நரம்பு. -7 நிறச்செல் விழித்திரைச்