உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/824

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800 ஒளிவட்ட மின்னிறக்கம்‌

800 ஒளிவட்ட மின்னிறக்கம் பொருள்களுக்கு ஒரு மஞ்சள் நிற வடிகட்டி பயன் படுத்தப்படுகிறது. அத்தகைய பொருளைக் கடந்து வரும் நீலக் கதிர்களை உட்கவர்ந்து கொண்டு, மாதிரிப் பொருளின் மஞ்சள் நிற ஒளிர்வை மட்டும் கண்ணுக்கு அனுப்புகிறது. மாதிரிப் பொருள் மிகச் சிறந்த முறையில் கண்ணுக்குத் தெரிவதற்காகக் குறுக்கு வடிகட்டிக் கூட்டமைப்புப் பயன்படுத்தப் படுகிறது. அவை நோயுண்டாக்குகிற வைரஸ், கிருமி போன்றவை யும் பிற எதிர்ச்செனிகளும் (antigens) புரதங்களால் ஆனவை. உடல் திசுக்களில் புகும்போது கரையக்கூடிய பொருள்கள் உண்டாக்கப்படுகின்றன. அந்தக் கரையும் பொருள்கள் குறிப்பாக வைரஸ், கிருமி, எதிர்ச்செனி ஆகியவற்றுடன் வினைபுரி கின்றன. இவை எதிர்ப்பொருள்கள் (antibodies) எனப்படும். அவற்றின் பெருக்கத்தைத் தூண்டும் பொருள்கள் எதிர்ச்செனிகள் எனப்படுகின்றன. கரை சல் நிலையிலுள்ள எதிர்ப்பொருள்கள் கரையும் எதிர்ச்செனிகளைச் சந்திக்கும்போது ஏற்ற சூழ் நிலைகளில் ஒரு வீழ்படிவு உண்டாகிறது அல்லது எதிர்ச்செனிகள். குறுநொய் வடிவமுள்ளவையாக இருந் தால், அவை ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு திரள்கின்றன. இவ்வாறான மூலக்கூறு இடைவினை கள் சில குறிப்பிட்ட விதங்களில் மட்டுமே நிகழும். மூலக்கூறுகள் தமக்குள் இட்டு நிரப்பும் தன்மையும், ஒன்றோடொன்று ஒட்டிப் பொருந்தும் வகை வடிவ மைப்பும் கொண்டிருந்தால்தான் இத்தகைய இடை வினைகள் நிகழும். எதிர்ப்பொருள்கள் எதிர்ச்செனிகளுடன் நிகழ்த் தும் குறிப்பான வினைகளைக் குலைத்துவிடாத வகையில் மென்மையான வேதி முறைகளில் எதிர்ப் பொருள்களை ஒளிரும் வண்ணங்களுடன் இணைத்து விட முடியும். ஃபுளோரசீன் என்னும் வண்ணம் இத் தகைய நோக்கங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படு கிறது. இவ்வாறு ஒளிரும் வண்ணங்கள் இணைக்கப் பட்ட எதிர்ப்பொருள்கள் ஒளிரும் எதிர்ப்பொருள்கள் எனப்படும். அவை குறிப்பான நோயெதிர்ப்புக் குறி காட்டும் நிறமிகளாகப் பயன்படுகின்றன. செல்களி லும் திசுக்களிலும் உள்ள எதிர்ச்செனிகளை அடை யாளம் காண அவை உதவும். ஒரு திசு வெட்டுப் பரப் பின் மேலோ செல் கலலையின் மேலோ அவற்றைத் தடவிவிட்டால், குறிப்பான எதிர்ச்செனிகளுடன் ஒளிர் எதிர்ப்பொருள்கள் கூடி வீழ் படிவாகிவிடும். ஓர் ஒளிர்வு நுண்ணோக்கியின் மூலம் பார்க்கும்போது இத்தகைய வீழ்படிவுப் பரப்புகள் தனிச்சிறப்பான நிறவேறுபாடுகளுடன் தென்படும். ஃபுளோரசீன் இணைந்த எதிர்ப்பொருள் எதிர்ச் செனிகளுடன் கூடும்போது ஆப்பிள் பச்சை நிறமுள்ள கூட்டுப்பொருளாக மாறி விடுகிறது. திசு வெட்டுப் பரப்புகளின் உள்ளார்ந்த ஒளிர்விலிருந்து ஆப்பிள் பச்சை நிறப் பகுதிகளைத் தெளிவாகப் பிரித்துப் பார்க்கமுடிகிறது. இம்முறையில் ஆய்வு செய்யப் படும் திசுவெட்டுப் பரப்புகளைத் தயாரிக்கும்போது எதிர்ச் செனியின் குறிப்பான செயல்திறனை அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திசுவின் நுண்கட்டமைப்பு மாறி விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே இத்தகைய ஆய்வுகளில் உறைய வைத்து மிக மெல்லியதாகச் சீவப்பட்ட திசுக்கள், பொருத்தப்படாத நிலையில் பயன்படு கின்றன. ஒளிர்வு ணோக்கியியல் நுண்ணோக்கி முறைகள் நுண் ஆய்விலும், மருத்துவ ஆய்விலும் மிகவும் இன்றியமையாத கருவிகளாக உள்ளன. செல்களிலும் திசுக்களிலும் உள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றை அடையாளங் காண இவை உதவின. ஆய்வு விலங்குகளின் உடல்களுக்குள் கிருமி அல்லது வேறு வகை யான வேற்றுப் புரதங்களையும் பாலி சாக்கரைடு களையும் ஊசி மூலம் புகுத்தி அவற்றின் நடத்தை களைக் கண்டுபிடிக்க இம்முறைகள் பயன்பட்டன. நுண்ணுயிரிகளால் நோய் ஏற்படும் நிகழ்ச்சி நிரல் களையும், ஒவ்வாமை என்னும் மிகு உணர்வு நோய் நிலைகளையும் அறிய இந்த ஆய்வுகள் பெருமளவு உதவியுள்ளன. நோய் எதிர்ப்புத் தன்மைகளையும், நோய்த் தொற்றலை எதிர்க்கும் திறமைகளையும் சிக்கல்களை பற்றிய ஆராய்வதில் அடிப்படை முக்கியத்துவம் உள்ள எதிர்ப்பொருள்களின் செல் உருவாக்கம் பற்றிய ஆய்வுகளிலும் ஒளிர்வு நுண் ணோக்கி பயன்படுகிறது. - கே. என். ராமச்சந்திரன் ஒளிவட்ட மின்னிறக்கம் அதன் ஒரு கடத்தியைச் சுற்றி அமையும் வளிமம் அயனி யாக்கம் பெறுவதால் விளையும் மின்னிறக்கம் ஒளி வட்ட மின்னிறக்கம் (corona discharge) எனப்படும். கடத்தி ஒன்று மின்னூட்டப்படுமாயின் கூர்மையான பகுதிகளில் மின்னூட்ட அடர்த்தி பிற பகுதிகளில் உள்ளதைவிட மிகுதியாக அமையும். எனவே, கடத்தியின் கூர்மையான பகுதிகளுக்கு அருகிலோ, மெல்லிய கம்பி ஒன்றுக்கு அருகிலோ மிகவும் வலிமையாக மின்புலம் இருக்கும். அத்தகைய மின்புலன்கள் அங்குள்ள காற்று மூலக்கூறுகளை அயனியாக்கம் செய்யுமளவுக்குக்கூட வலிமை பெற்றிருக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் அயனிகள் கடத்தியின் மீதான அதே வகையான மின்னூட்டம் பெற்றிருப்பதால் கடத்தியினின்றும் மிகுந்த விசை யுடன் ஒதுக்கப்பட்டு மின்காற்று (electric wind) ஒன்றை உருவாக்குகின்றன. இம்மின்காற்று