உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/825

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி வடிவ இயல்‌ 801

கடத்திக்கு அருகில் வைக்கப்படும் மெழுகு வத்திச் ஒன்றைக் கிடைமட்டமாக்கும் அளவுக்கு வலிமை பெற்றிருப்பதைக் காணலாம். சுவாலை மின்னூட்டம் பெற்ற கடத்தியினின்று ஒதுக்கப் படும் அயனிகள் பிற நடுநிலை மூலக்கூறுகளை எதிர்கொள்ளும்போது அவற்றை அயனியாக்கம் செய்கின்றன. எனவே, மின்னூட்டம் உயரும்போது அதைச் சுற்றியுள்ள காற்றுவெளியின் அயனியாக்கமும் மிகும். ஒரு குறிப்பிட்ட மின்னழுத்தத்தில் கடத்திக்கும் சுற்றுச் சூழலுக்குமிடையே மின்னிறக்கம் ஏற்பட, கடத்தியினின்றும் விரிந்த தூரிகை ஒன்றின் குச்சங் களைப் போன்ற ஒளிவரிகள் தோன்றுகின்றன. இம் மின்னிறக்கமும் அதனால் தோன்றும் ஒளிவரிகளும் பெரும்பாலும் ஓர் ஒளிவட்டத் தோற்றத்தை அளிப்ப தால் அந்நிகழ்ச்சி தொடக்கத்தில் மின்னிறக்கம் எனப்பட்டது. ஒளிவட்ட வளிமண்டலத்தின் வழியே இயங்கும் பொருள்கள் மின்னூட்டம் பெறுமாயின் அவற்றினின்றும் தூரிகை யின் குச்சங்களையொத்த ஒளிவரிகளையளிக்கும் ஒளிவட்ட மின்னிறக்கம் நிகழ்வதும் உண்டு. அத் தகைய மின்னிறக்கம் புனித எல்மனார் தீ (St.Elmo's) fire) எனப்படும். கப்பல்களின் பாய்மரங்கள் விமானங்களின் இயக்கிகள் (propellers), இறக்கைகள், அவை போன்ற வளைவு மிகுந்த விளிம்புகளிலிருந்தும் புனித எல்மனார் தீ நிகழ்வதுண்டு. விமானங்கள், சிலவகை மேகங்கள், இடிமின்புயல்கள் (thunder storms), பனிச் சொரிவுகள் (snow showers), புழுதிப் புயல்கள் (dust storms) ஆகியவற்றின் வழியே செல்லும்போது அவற்றினின்றும் புனித எல்மனார் தீ தோன்றுவது அடிக்கடி நிகழும். மிகு மின்னழுத்தக் கருவிகளின் வடிவமைப்பில் இந்த ஒளிவட்ட மின்னிறக்கத்தைக் கருத்திற்கொள்ள வேண்டும். அக்கருவிகளில் கரிய விளிம்புகளும் நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிமுனைகளும் தவிர்க்கப்படல் வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டிகளில் மிகு மின்னழுத்தப் பகுதிகளில் இவை தவிர்க்கப்பட்டிருப் பதைக் காணலாம். மிகு கட மின்னழுத்தங்களைத் தாங்கிச் செல்லும் கம்பிகளை அலுமினியக் கம்பி களாக அமைப்பதற்கு ஒளிவட்ட மின்னிறக்கமும் காரணமாகும். ஒளிவட்ட மின்னிறக்கம் மின்னாற்றல் டத்தலில் ஒரு குறிப்பிட்ட விட்டங் கொண்ட கம்பிகள் தாங்கிச் செல்லும் மின்னழுத்தத்திற்கு ஓர் உச்ச வரம்பை ஏற்படுத்துகிறது. அதற்கு மேற்பட்ட மின்னழுத்தங்களில் அக்கம்பிகளிலிருந்து ஏற்படக் கூடிய ஒளிவட்ட மின்னிறக்கத்தின் பயனாய் கணிச மான அளவு மின்னாற்றல் இழப்பு ஏற்படும். ஒரு குறிப்பிட்ட மின்தடையை அளிக்கவல்ல செப்புக் கம்பிகளைவிட அலுமினியக் கம்பிகள் தடிப்பு மிகுந்து அமையுமாதலால் அவை குறைந்த வளைவுடைய பரப்புகளைக் கொண்டிருக்கும். அத்தகைய கம்பிகள் அ.க. 6-51 ஒளி வடிவ இயல் 801 மிகு மின்னழுத்தங்களைத் தாங்கிச் செல்லும்போது அவற்றிலிருந்து ஏற்படும் ஒளிவட்ட மின்னிறக்கமும் அதனால் விளையும் மின்னாற்றல் இழப்பும் பெரு மளவில் தவிர்க்கப்படுகின்றன. -ரா. நாகராஜன் நூலோதி. G.A. G. Bennet, Electricity and Modern Physics, ELBS, 1974. ஒளி வடிவ இயல் ஒளியியல், ஒளியியல் அமைப்பு இவற்றின் பண்புகளில் ஒளியின் அலைத்தன்மை அல்லது குவாண்டம் தன்மை யைச் சார்ந்திராத கூறுகளை விளக்குவது ஒளி வடிவ யியல் (optical geometry) எனப்படும். இதில் ஒளி ஒரு சீரான ஊடகத்தில் நேர் கோட்டுப் பாதைகளில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்ளலாம். அந்த நேர் கோட்டுப் பாதைகள் கதிர்கள் எனப்படுகின்றன. ஊடகம் சீரற்றதாகவும், மாறும் ஒளி விலகு எண் கொண்டதாகவும் இருந்தால் கதிர்கள் வளைந்து செல்லும்,ஓர் ஒளி புகும் ஊடகத்தில் ஒளியின் திசை வேகம் வெற்றிடத்தில் அதன் திசைவேகத்தைவிடக் குறைவாக இருக்கும். ஓர் ஊடகத்தில் ஒளியின் திசை வேகத்தால் வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்தை வகுத்தால் கிடைக்கும் அளவு அந்த ஊடகத்தின் ஒளி விலகு எண் (refractive index) எனப்படும். காற்றில் ஒளியின் திசைவேகம் நடைமுறையில் வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்துக்குச் சமம் எனக் கருதப்படு கிறது. எனவே காற்றின் ஒளி விலகல் எண் ஒன்றுக் குச் சமம். அனைத்து ஒளியியல் ஆய்வுகளையும் காற் றில்தான் செய்ய வேண்டியுள்ளது. எனவே காற்று ஒரு மேற்கோள் ஊடகமாக எடுத்துக் கொள்ளப்படு கிறது. நுட்பமாகக் கூறினால் காற்றின் ஒளி விலகல் எண் 0.9998 ஆகும். . ஒளியியல் அமைப்புகளில் ஆடி, வில்லை, முப்பட் டகம், துளை ஆகியவை அடங்கும். தேவையேற்படும் போது வடிகட்டிகள், கற்றை பிரிப்பான், முனை வாக்கி, கீற்றணி, கலங்கலாக்கி (diffusers) ஒளியியல் இழைக்கட்டு, இருபுறக் குவி தகடு (lenticular plates) திரை ஆகியவையும் பயன்படும் ஒளித்தோற்றுவாய்க ளும், கதிர்வீச்சுத் துலக்கிகளும் ஒளியியல் அமைப்பில் அடங்கும். வில்லைகளும், உருத்தோற்றம் உண் டாக்கும் ஆடிகளும் பொதுவாகக் கோள வடிவப் பரப்புள்ளவை. ஏனெனில் சாணைபிடித்தல், மெரு கேற்றல் போன்ற செயல்களின் மூலம் கோளப் பரப்பு களை எளிதாக உண்டாக்க முடியும். ஆனாலும் கோள வடிவற்ற பரப்புகளுள்ள வில்லைகளும் வழக் கில் உள்ளன. பர வளைய அல்லது மிகுபர வளைய வடிவமுள்ள ஆடிகள் எதிரொளிப்புத்