உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/845

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒற்றைக்குளம்பி 821

விரலாக மாறியுள்ளன. காலில் பிளவுபடாத குளம்பு உள்ளது. வாவில் நீண்ட மயிர் உள்ளது. புறச்செவி பெரிய பதாகவும், கூர்மையாகவும் உள்ளது. பெண் குதிரையின் வயிற்றுப் பகுதியில் 2 பால் காம்புகள் உள்ளன. பல் வாய்பாடு 3-1-3-3 3-3-3-3 ஆசியக்குதிரை (equus przewalski). மங்கோலியா வில் காணப்படும் இவ்வினம் அழியும் தறுவாயில் உள்ளது. வளர்ப்புக்குதிரை (e.cabalus). இவை அமெரிக்கா. ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இயற்கைச் சூழலில் வாழ்ந்தவை. இவை தற்காலத்தில் வளர்ப்பு விலங்கு களாக மட்டுமே உள்ளன. 2. துணைப்பேரினம் அசைனஸ் (assinus) எ.கா. கழுதை. பாறைகள் உள்ள பாலைவனத்தில் இவை வாழ்கின்றன. குறைவான உணவு உண்டாலும். 110 கி.கி. வரை எடை தூக்கும் திறன் காரணமாகச் சுமை தூக்கும் விலங்குகளாகப் பயன்படுத்தப்படு கின்றன. இவை பின்கால்களால் உதைக்கும் பண்புடையவை. தலை உடல் நீளம் 200 செ.மீ. வால் நீளம் 45 செ.மீ. எடை 250 கி.கி. சூல்காலம் 348-377 நாள்கள். ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறக்கும் கோவேறு கழுதை, பெண் கழுதைக்கும், ஆண்குதிரைக்கும் பிறக்கும் கோவேறு கழுதை இரண்டும் மலட்டுத் தன்மை கொண்டவை. ஒற்றைக்குளம்பி 821 ஆசியக் கழுதை (e.hemioms). இது அழியும் நிலை யில் உள்ளது. ஆப்பிரிக்கக் கழுதை (e.africamus). இதுவும் விரை வில் அழியலாம். 3. துணைப்பேரினம்-ஹிப்போடைக்ரில் (hippotigris) எ.கா. வரிக்குதிரை. கிழக்கு, தெற்கு ஆப்பிரிக்காப் புலியின் தோல் மீது காணப்படும் வரிகளைப்போல் வரிக்குதிரையிலும் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது. சுறுசுறுப்புடனும், ஒலி எழுப்பிக் கொண் டும், பிறவிலங்குகளுக்கு அஞ்சாமலும் வாழ்கிறது. மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் ஓடும். சிங்கங்கள் இதை விரும்பி உண்ணும். தலை-உடல் நீளம் 220 செ.மீ. வால் நீளம் - 50 செ.மீ. எடை 250 கி.கி. சூல்காலம் 345-390 நாள்கள். வாழ்நாள் 28 ஆண்டு கள் ஆகும். இது கிழக்கு, தெற்கு ஆப்பிரிக்கா நாடு களில் பரவியுள்ளது. சமவெளி வரிக்குதிரை (e.burchelli) குட்டையான கால்களுடன் கொழுகொழுவென இருக்கும். மலைவாழ் வரிக்குதிரை (mountain zebra). இது முரட்டுத்தனம் கொண்டது. . 4. துணைப்பேரினம்-(டோலிகோஹிப்பஸ்) (dolicho- hippus). இது எத்தியோப்பியா, சோமாலியா, வட கென்யா ஆகிய நாடுகளில் நீள்புல்வெளி, அடர் புல்வெளிப் பகுதிகளில் வாழ்கிறது. தலை - உடல் நீளம் 275 செ.மீ. வால்நீளம் 49 செ.மீ. எடை. 405 கி.கி. எ.கா: கிரேவி வரிக்குதிரை. கால்கள்