822 ஒற்றைக்குளம்பி
822 ஒற்றைக்குளம்பி குடும்பம் - 2 ட்ப்பீரிடே (tapiride). மெக்சிகோ, தென் அமெரிக்கா, மலேயா ஆகிய நாடுகளில் உள்ள இக் குடும்பத்தில் 1 பேரினமும், 4 இனங்களும் உள்ளன. பேரினம் -டப்பிரஸ் (tapirus). இதன் மேலுதடு, மூக்கு இணைந்து சிறிய துதிக்கையாக மாறியுள்ளது. இது நுகரவும், இலை தழைகளை இழுக்கவும் பயன் படும். பல் வாய்பாடு 3-1-4-3 3-1-4-3 புலி, சிங்கம், சிறுத்தை ஆகியவை இதன் எதிரி களாகும். தலை, உடல் நீளம் - 180-250 செ.மீ. வால் நீளம்.5-10. செ. மீ; எடை 225-300 கி.கி. பெண்டபீர் இரண்டு மாதத்திற்கொருமுறை இனக் கலவிக்குத் தயாராகும். கனைத்துக்கொண்டே கலவி நடனம் புரிந்தபின்னர் புணரும். சூல் காலம் 400 நாள்கள். வாழ்நாள் 30 ஆண்டுகள் ஆகும். டப்பீர்கள் மலேயாவில் ரப்பர் பயிர்களை வெகு வாக நாசம் செய்கின்றன; அவற்றின் தோலுக்காக வும், இறைச்சிக்காகவும் அவை வேட்டையாடப்படு கின்றன. எனவே தற்போது அவை பாதுகாக்கப்பட வேண்டிய சூழலில் உள்ளன பிரேசில் டப்பீர் (tapirus terrestris), மலை டப்பீர் (t.pinchaque), பயர்டி டப்பீர் (t.bairdi), மலேய டப்பீர் (t.indicus) என வகைப்படும், குடும்பம் - 3 டப்பீர்கள் பல ரைனோசெராட்டிடே(rhinocerotidae). ஆப்பிரிக்கா, இந்தியா, ஜாவா ஆகிய நாடுகளில் காணப்படும் இவற்றில் 4 பேரினங்களும், 5 இனங்களும் உள்ளன. இவை டெர்சியரி (teritiary period) காலத்தில் மிகு எண்ணிக்யிைல் வாழ்ந்தன. தற்போது பெரும் பான்மையான காண்டாமிருகங்கள் மறைந்தொழிந்து விட்டன. இவற்றின் அழிவுக்கு மனிதனே காரணம். மறைந்தொழிந்தவற்றுள் புகழ் பெற்றது மயிரடர்ந்த காண்டா மிருகம் ஆகும். இது 15,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றது. சுமத்தரா காண்டாமிருகம் சிறியது (தலை-உடல் நீளம் - 250 செ.மீ. 800 கி.கி.) வெள்ளைக் காண்டாமிருகம் உருவில் பெரியது. (தலை-உடல் நீளம் - 400 செ.மீ. எடை 2300 கி.கி.) கால்கள் சிறியவாகத் தடித்து இருப்ப துடன், 3 குளம்புள்ள விரல்களும் இருக்கும். தடித்த தோலில் தெளிவான அல்லது தெளிவற்ற மடிப்புகள் இருக்கும். மேலுதடுகள் செயலுக்கேற்ற மாறுபாடு பெற்றுள்ளன. பல் வாய்பாடு = 1-0-3-3 1-1-3-3 எடை இதன் கொம்பு நாரிழைகளால் ஆக்கப்பட் டுள்ளது. கண்டாமிருகத்தின் கொம்புக்காசு அவை வேட்டையாடப்படுகின்றன. வட இந்தியா, சோமா லியாவில் சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டும் பொரு ளாகவும். சீனாவில் சுரம், தலைவலி. இதயக் கோளாறு, கல்லீரல் கோளாறு, தோல் நோய் முதலிய வற்றைக் கட்டுப்படுத்தும் பொருளாகவும் காண்டா மிருகத்தின் கொம்பைக் கருதுகின்றனர். வட ஏமனில், இக்கொம்பை ஜாம்பியா என்னும் குத்துவாள் கைப்பிடியாகப் பயன்படுத்துகின்றனர். து தகைமையின் சின்னமாகக் கருதப்படுகிறது. இதனால் 1969-77 இல் 8000 கொம்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் பொருளாதார மேம்பாடு ஏற் பட்டது. காண்டாமிருகத்தின் குளம்பு சிறுநீர் இரத்தம் முதலியவையும், கீழ்த்திசை நாடுகளில் (ஆப்பிரிக்கா நீங்கலாக) மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை. சோமாலி லியாவில், தோல் சாட்டைக் கைப்பிடியாகவும், இறைச்சி உணவாகவும் பயன்படுகின்றன. இப்பயன் காரணமாக இவை பெருமளவில் வேட்டையாடப் பட்டமையால், மறைந்தொழியும் அச்சநிலையை எதிர்நோக்கியுள்ளன. இதைத் தவிர்க்க 'காண்டா மிருகப்பாதுகாப்புத்திட்டம்' நிறைவேற்றப்படுகிறது. இதன்பயனாக 1982 ல் தென் ஆப்பிரிக்கா 1200 வெள்ளைக்காண்டாமிருகங்கள் காணப்பட்டன. மங்கிய பார்வையும், கூரிய செவிப்புலனும், கூரிய நுகர்ச்சிப்புலனும் பெற்றது. ஆண் காண்டா மிருகத்தில், ஆண்கலவி உறுப்பு சுருங்கிய நிலையில். பின்னோக்கி இருப்பதால், சிறுநீர் பின்னோக்கி விடப் படும். ஏறத்தாழ ஒரு மணிநேரம் புணரும். சூல் காலம் 510-570 நாள்கள். ஒரு கன்றுக்கும், அடுத்த கன்றுக்கும் இடைவெளி 22 மாதங்கள் ஆகும். வில் 1. பேரினம் டைசீரோஸ் (diceros) எ.கா. கறுப்புக் காண்டாமிருகம் (diceros bicorris), கொக்கி உதட்டுக் காண்டாமிருகம் என வழங்கப்படும். இதன் இரு கொம்புகளில் முன்கொம்பு பெரியது. ஏறத்தாழ 1300 கி.கி. சூல்காலம் - 15 மாதம், வாழ்நாள் 40 ஆண்டுகள் ஆகும். காண் 2. பேரினம்-செரட்டோதீரியம். வெள்ளைக் டாமிருகம் (c. simum), சதுர உதட்டுக் காண்டா மிருகம் என்றும் குறிக்கப்படுகிறது. நிலவாழ்பாலூட்டி களில், யானையை அடுத்து இதுவே பெரிய (2300 கி.கி.) சூல் காலம் 16 மாதங்கள், 45 ஆண்டுகள் ஆகும். 3. பேரினம் . து வாழ்நாள் ரைளோசிரோஸ் (rhinoceros). இந்தியக் காண்டாமிருகம் (runicorris) ஒற்றைக் கொம்புடையது: எடை 2200 கி.கி. யானையையே தூக்கி எறியும் ஆற்றல் கொண்டது. சூல்காலம் 19 மாதங்கள், வாழ்நாள் 50 ஆண்டுகள் ஆகும்.