ஓடும் நீர்ச் சூழலமைப்புகள் 867
படுபவை இறால், நண்டு மற்றும் சில குறிப்பிட்ட வகை மீன்களே ஆகும். . கழிமுகம் மனிதனுக்குப் பல விலையர்ந்த உயிர்ச் செல்வங்களை அளித்திருந்தாலும், குப்பைக் கூளங்கள், மலக்கழிவுகள், ஆலைக் கழிவுகள் ஆகியவற்றைக் கொட்டும் செயல்களால் கழி முகங்கள் மனிதனால் பெரிய குப்பைத் தொட்டி யாக மாற்றப்பட்டு வருகின்றன. கழிமுகங்களைச் சரியான முறையில் பயன்படுத்தினால் உலகம் முழுதிற்கும் தேவையான உணவை மனிதன் அவற்றிலிருந்தே பெற முடியும். ஆனால் இன்று அவை வெறும் அங்கணங்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்பது வருந்தத்தக்கது. ஓடும் நீர், ஓட்டமற்ற நீர், கழிமுகம், கடல் ஆகிய அனைத்து நீரமைப்புகளும் பாகுபாடின்றி மனிதர்களால் பெருமளவு மாசுபடுத்தப்பட்டுவிட்டன. தொடர்ந்து மாசுபடுத்தப்பட்டும் வருகின்றன. பெருகி வரும் மக்கள் தொகையில் அடிப்படைத் தேவைகளை ஓடும் நீர்ச்சூழல் அமைப்புகள் 867 நிறைவு செய்ய முனைவதில் எல்லா நீர் நிலைகளிலும் மலக் கழிவுகளுடன் பல்வேறு வேதிப் பொருள்கள் செயற்கை உரங்கள் பூச்சிக்கொல்லிகள் சாயங்கள் என்று பல தரப்பட்ட பொருள்கள் கலந்து இயற்கை அமைப்பைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவை போதாவென்று அனல் மின்சக்தி மற்றும் அணு மின்சக்தி நிலையங்களிலிருந்து வெளியேற்றப் படும் சூடான நீர் இயற்கை நீரோட்டங்களின் சூழ்நிலை அமைப்பைப் பெரிதும் பாதித்துள்ளது. உயிரினங்களின் வளர்ச்சி வீதம். உணவு கொள்ளும் அளவு, அவற்றின் இட டப்பெயர்ச்சி, நீந்தும் தன்மை, உணவைக் கண்டுணரும் ஆற்றல், இனப்பெருக்கம், நோய் எதிர்ப்பு ஆற்றல் ஆகியவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. காண்க, படம் 5. B உட முதல் அடிப் உணவுச் சங்கிலித் தொடரின் படை நிலை நீரோட்டங்களிலும் நீர் நிலை களிலுமே ஆரம்பிக்கின்றது. என்பதை அறியாமல் படம். 5 சுத்திகரிக்கப்படாத ஆலைக்கழிவு ஆற்றில் விடப்பட்டதால், குவியல் குவியலாக மீன்கள் இறந்துகிடக்கும் காட்சி அ.சு. 6-55அ