உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/916

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

892 ஓமம்‌

892 ஓமம் மார்க், போலந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் மிகுதி யாகப் பயிரிடப்படுகிறது. நெதர்லாந்தின் ஈரப்பசை யுள்ள காற்றும், கனமான களிமண் நிலமும் ஓமம் மிகுதியா.க வளரத்தக்க வாய்ப்புடைய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன. பல ஆண்டுகள் ஹாலந்து ஓம உற்பத்தியில் சிறப்பு வகித்தது. வை இலை. மாற்றிலையடுக்கு அமைப்புள்ளவை. லையடி அகலமாகப் பட்டை போன்று இருக்கும். சிறகமைப்புக் கூட்டிலைகள்; தனி அல்லது கூட்டிலைகள்; சில இலைகள் 4 அல்லது 5 முறை பிளவுபட்டிருப்பதைக் கூடக் காணலாம். சிற்றிலைகள் நீண்டு உருண்டையாக இருக்கும். வளரியல்பு. கேரம் இனம் ஒரு பருவ அல்லது பல பருவச் செடியாகும். ஓமம் இரு பருவச் செடி யாகும். வேர் தடித்துக் கிழங்குடன் காணப்படும். மஞ்சரி. இக்குடும்பச் சிறப்பு மஞ்சரி கூட்டுக் குடை மஞ்சரி ஆகும். குடை மஞ்சரிகளில் முதல் இரு காம்புகளின் நுனியில் பூவடிச் செதில்கள் வட்டமாக அமைந்திருக்கும். மலர். மிகவும் சிறியவை; வெள்ளை நிறமானவை: பொதுவாக இருபால் முழுமையான ஒழுங்குமலர்கள் ஆகும். சில மஞ்சரிகளில் ஒருபால் அல்லது மலட்டு மலர்களையும் காணலாம். பொதுவாகக் கூட்டு மஞ்சரியின் விளிம்பில் அமைந்திருக்கும் மலர்கள் ஒருபால் அல்லது மலட்டு ஒழுங்கற்ற இருக்கும். மலர்களாக புல்லிவட்டம். 5. தனித்தவை, சூலகத்தோடு ணைந்தவை, பல்போல் சிறுத்தவை. நுனி அல்லிவட்டம், 5, தனித்தவை அகன்று மழுங்கியவை ஒழுங்கற்ற மலர்களில் சில அல்லிகள் பெரியவையாகவும் மற்றவை சிறியவையாகவும் இருக்கும். மகரந்தத்தாள் வட்டம். 5, அல்லிகளுக்கு மாற்ற மைப்பில் இருக்கும். சூலகம். இது இரு சூலக லைகள், இருசூலக அறைகள், கீழ்மட்டச் சூலகம், அறைக்குள் ஒருசூல், தொங்குமுறை அமைப்புடையது. சூல்தண்டு இரண்டு வெளிநோக்கியவை. இவை ஸ்டைலோபோடியம் எனப்படும் சுரப்பிகளின் நடுவே காணப்படும். கனி. க்ரிமோகார்ப் (cremocarp) என்னும் வகையைச் சேர்ந்தது. வெடிக்கும்போது கனி இரண்டாகப் பிளந்து சிறு கனிகள் (mericarp) வெளிப் படும். இந்த விதைகள் உருண்டையாகவோ தட்டை யாகவோ இருக்கும். வகைப்பாடு. கேரம் என்பது பழமையான பேரின மாகும். தற்சமயம் இதிலிருந்து மூன்றினங்கள் பல னங்களாக மாற்றப்பட்டுள்ளன. புது 4 கே.கார்வி (C.Carvi). இதைத் தமிழில் ஓமம் என்பர். கே.நோத்தம் ( C. Notham). இது நீலகிரி மலைப் பகுதியில் 7000 அடி உயரத்திற்கு மேல் காணப்படும். கே. பெட்ரோஸெலீளம் (C.petrose'inum). இது சில சமயங்களில் தோட்டங்களில் வளர்வதைக் காண லாம். . சுே. பல்போகேஸ்டானம் (C. bullbochastamum). இதைக் கருஞ்சீரகம் என்று கூறுவர். இது மருத்து வத்தில் குறிப்பிடப்படும். இச் செடியின் அண்மைக் காலப் பெயர் ப்யூனியம் பர்ஸிகம் (Bunium persicum) கே.காப்டிகம் (C. copticum) என்பதாகும். ட்ராகிஸ்பெர்ம் அம்மி. (irachyspenmuu cmmi) இதைச் சிலர் ஓமம் என்று குறிப்பிடுவதுண்டு. கனி களிலிருந்து ஓமநீர் தயாரிக்கப்படுகிறது. கனிகளிலி ருந்து கிடைக்கும் எண்ணெயைக் கொண்டு தைமால் (thymol) எனப்படும் பூச்சிக்கொல்லி தயாரிக்கப் படுகிறது. பயன். இது ஒரு சிறந்த மருந்துச் செடியாகும். இதன் மருத்துவப் பயன் பற்றி முதலாம் நூற் றாண்டு ரோமானிய மன்னன் நீரோவின் அரண் மனை மருத்துவர் டயஸ்கோரிடஸ் ஓம எண்ணெய் ரத்தச் சோகையுள்ள பெண்களுக்கு ஊட்டப் பயன்படும் என்று கூறியுள்ளார். நீர்மமாக உணவுக் வயிறு தொடர்பான நோய்கள். குழாயில் வளிமம் சேர்ந்து தோன்றும் தொல்லை சிறந்த களுக்கு இது மிகவும் மருந்தாகும். கார் மனேடிக் கலவை என்னும் செரியாமையை நீக்கும் மருந்து இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஓம் எண்ணெய் மருந்துகளில் மணம் சேர்க்கப் பயன்படு கிறது. மேலும் இது மருந்துகளின் அருவெறுப்புத் தன்மையை நீக்கவல்லது. இந்த எண்ணெய் வாய்க் கொப்பளிப்பான்கள் நறுமணப் பொருள்கள் சோப் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. உணவு ஓம நீர்மம் (Caraway water) அல்லது கிரைப் வாட்டர் என்பது குழந்தைகளுக்கு உண்டாகும் செரியாமை வயிற்றுப்பொமல், முதலிய நோய் களுக்குச் சிறந்த மருந்தாகும். து தின்பண்டங்கள் ரொட்டி, பிஸ்கட், கேக், பாலாடைக் கட்டி முதலிய வற்றில் மணம் சேர்க்கப் பயன்படுகிறது. ஓம் எண்ணெயை இறைச்சி, கறி வகை, டப்பா வகை, மணப் பொருள் முதலியவற்றின் தயாரிப்பில் பயன்படுத்துவர். மேலும் ஓம எண்ணெயிலிருந்து கும்மல் என்ற ஒரு வகை மதுபானம் தயாரிக்கப்படு கிறது. குளிர்காலங்களில் சளி பிடிக்காமலிருக்கக் சாம்பிராணியுடன் ஓமத்தைச் சேர்த்துப் புகை போடுவதுண்டு. மேலும் நல்லெண்ணையோடு ஓமம், பூண்டு, மிளகாய் முதலியவற்றைச் சேர்த்துக் காய்ச்சித் தேய்த்துக் குளிப்பர்.