உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/917

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓய்வு நிறை 893

சுரம், சளி தொடர்பான நோய்களுக்கு மோருடன் ஓமத்தைச் சேர்த்துச் சுடவைத்து உணவுடன் உட்கொள்வர். ஓமலேகியம், இங்கு வாஷ்டகசூர ரணம், பஞ்ச தீபாக்கினி லேகியம், பிள்ளைப்பேறு மருந்து, தீபாவளி மருந்து முதலிய நாட்டு மருந்துகளின் தயாரிப்பில் ஓமம் அதன் செரியாமை நீக்கப் பண்புக்காகிச்சிறப்புப் பெறுகிறது. கனியின் உட்கூட்டுப் பொருள் விதையிலிருந்து 3% ஆவியாகக்கூடிய எண்ணெய் கிடைக்கிறது. இந்த எண்ணெயில் காரவோன் எனப்படும் வேதிப் பொருள் உள்ளது. இது ஓர் ஆல்டிஹைட் ஆகும். ஓமத்திற்கே உண்டான இனிமையான மணத்திற்கும் அதே சமயத்தில் சற்று விறுவிறுப்பான சுவைக்கும். காரவே எண்ணெயே காரணமாகும். டச்சு நாட்டு ஓமத்தில் நறுமண எண்ணெய் மிகுதியாகக் காணப் படுகிறது. அண்மைக் காலத்தில் ஓம எண்ணெயைச் செயற்கையாகத் தயாரிப்பதால் ஓம் குறைந்து வருகிறது. ஓய்வு நிறை ய உற்பத்தி தி,ஸ்ரீகணேசன் ஒரு பொருள், சார்பு இயக்கமற்ற ஓய்வு நிலையில் பெற்றிருக்கும் நிறையை ஓய்வு நிறை (rest mass ) என்பர். ஒரு பொருளின் நிறை அதன் திசை வேகத் திற்கு (velocity) ஏற்ப மாறுபடுகிறது என்பதால் ஓய்வு நிறையை வரையறுக்க வேண்டியுள்ளது. அடிப் படைத் துகள் இயற்பியலில் (elementary particle physics) ஓய்வு நிறை ஓர் இன்றியமையாத இயற் பியல் பண்பாகக் கருதப்படுகின்றது. அடிப்படைத் துகள்களுக்கு ஓய்வு நிறையே சிறப்புக் கூறாகும். எடுத்துக்காட்டுகளாக எலெக்ட்ரானின் ஓய்வு நிறை 9.109×10-31 கி.கி. புரோட்டானின் ஓய்வு நிறை 1.6725x10-2 கி.கி. நியூட்ரானின் ஓய்வு நிறை 1.6748×10-27 கி.கி. போன்றவற்றைக் கூறலாம். -27 அறிவியலின் பழங்கொள்கைகளில் (classical physics) ஒரு பொருளின் நிறை என்பது அதன் இயக் கங்களைப் பொறுத்து மாறாத அளவாகக் சுருதப் பட்டது.ஒரு பொருளின் திசைவேகம் புறக்கணிக்கக் கூடிய அளவில் குறைவாக இருந்தால் மேற்கூறிய கருதுகோள், அப்பொருளின் இயக்கவியல் பண்பு களைக் குறிப்பிடும் கணிதவியல் சமன்பாடுகளில் எத்தகைய பிழையையும் ஏறபடுத்துவதில்லை. பொது வாக இந்நிலை, சார்பியக்கத்தால் பொருள்களின் இயற்பியல் பண்புகளில் ஏற்படும் தாக்கங்களைப்புலப் படுத்துவதில்லை. மிகக் குறைந்த வேகங்களில் இயங் கும் பொருள்களைப் பற்றியே பார்த்துவந்ததால், தொன்மைக் கால அறிவியல் கூறிய கருத்தை நீண்ட ஓய்வு நிறை 893 காலமாக உண்மை என்றே கருதி வந்தனர். இக் கருத்து சார்பியல் கொள்கையால் தவறெனச் சுட்டிக் காட்டப்பட்ட பின்னர், பொருளின் வேகம் மிக அதன் நிறையும் மிகுந்து கொண்டே போகின்றது எனும் உண்மை நிலை பெற்றது. வேகத்திற்கு ஏற்ப நிறையில் ஏற்படும் மாற்றம் ஓய்வு நிறையைப் பொறுத்தது என்றாலும், வேகம் ஒளியின் திசை வேகத்தை எட்டும்போது, பொருளின் நிறை, அதன் ஓய்வு நிறை எந்த அளவில் இருந்த போதும் எல்லை யற்றதாகிவிடுகின்றது. பார்த்துணரக்கூடிய எளிய இயக்கங்களையே மனிதனின் புலன்களாலும், அளந்தறியக்கூடிய நுணுக் கமிலா ஆய்கருவிகளாலும், எளிய வேகங்களாலும் பொருள்களின் நிறையில் ஏற்படும் மிக நுண்ணிய மாறுதல்களைக் கண்டறிய இயலாது. ஒளியின் வேகத்தை ஒட்டிய திசை வேகத்தில் பொருள் இயங் கும்போது, அதன் நிறை மாறுதல் உணரக்கூடிய வகையில் உயர்ந்து விடுகின்றது. வேகத்திற்கு ஏற்பக் குறையும் எலெக்ட்ரானின் மின்னூட்ட நிறை தகவு (e/m), வட்டினத் துகள் முடுக்கும் பொறியில் முடுக்கப்படும் துகளின் வேகம் உயர அதன் போக்கு ஒழுங்கில் காணப்படும் கட்ட வேறுபாடு (phase change) போன்றவை வேகத்திற்கு ஏற்ப நிறை உயரும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கையின் அடிப் படையில் ஒரு பொருளின் நிறைக்கும் (m), அதன் வேகத்திற்கும் (v) உள்ள தொடர்பைக் கீழ்க்காணு மாறு நிறுவலாம். m= m. இதில் m. என்பது அப்பொருளின் ஓய்வு நிறையாகும். c என்பது ஒளியின் திசைவேகமாகும். பொருளின் வேகம் சுழியாகவோ மிகக் குறைந்த அளவாகவோ இருந்தால் /c இன் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக என்பது நொடிக்கு 1 கி.மீ என்று கொண்டால் (1 × 103) (3× 10* ≈10-1 இந்த எண் சுழிக்குச் சமமெனக் கொள்ளலாம். இந் நிலைகளில் m m. என்பது சரியாக உள்ளது. இது சாதாரண வேகங்களில் தொன்மைக் கால அறிவியலின் பழங்கொள்கைகளை ஏற்றுக் கொள்ள லாம் என்பதைத் தெரிவிக்கின்றது. ஆனால் பொருளின் வேகம் ஏறக்குறைய ஒளியின் வேகத் திற்குச் சமமாகும்போது "c" என்னும் பின்னத்தின் மதிப்பு ஒன்றுக்கு அருகில் வந்து விடுகின்றது.