உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ்‌ கதிர்‌ நிறமாலை 71

மாதிரி எக்ஸ் கதிர்க் குழாய் ஒருங்கிணைப்பான் பகுப்பான் பகுப்புப்படிகம் 28 பகுப்பால் சுற்றும் கோணியோமானி பாதை நேருக்கு எக்ஸ் கதிர் நிறமாலை 71 KBz Kobz Kai KBI தோணம் 0 படம் 7. எக்ஸ் கதிர் ஒளிர்வு பகுப்பாய்வு - அலைநீள நிறப்பிரிகை முறை (அ) பகுப்பாய்வு அமைப்பின் விளக்கக் கோட்டுப்படம் (ஆ) பதிக்கப்பட்ட லிருந்து வெளிவரும் முதன்மை எக்ஸ் கதிர்கள் மாதிரி கதிரூட்டப் பயன்படுகின்றன. எக்ஸ் கதிர் களுக்கு மாதிரியைச் சீராகக் காட்ட மாதிரி பொது வாகச் சுழற்றப்படும். இதனால் மாதிரியில் உள்ள தனிமங்கள் தத்தம் சிறப்பு ஒளிர்வு வரிகளை வெளி யிடும். இவ்வாறு வெளிவரும் ஒளிர்வுக் கற்றைகளின் ஒரு பகுதியை இணையாக்கிப் பகுப்புப் படிகப் பரப்பின் மீது பாய்ச்சும் படிகம் கோனியோ அளவி மீது பொருத்தப்பட்டிருக்கும். இந்த அளவி சுழலும் தன்மை கொண்டது. இதனால் படிகமும், பகுப்பானும் சுழலமுடியும். படிகத்தின் மீது படும் கதிர்கள் பிராக் விதிப்படி ஒளி விலக்கப்படுகிறது nA = 2dsin8). ஒளிவிலகிய கதிர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுப் பகுப்பானில் விழுகின்றன. இங்கு ஒளிர்வுக்கதிர்களின் ஆற்றல் மின் துடிப்பாகவோ எண்ணிக்கைகளாகவோ மாற்றப்படுகின்றன. முன்பு நிறமாலையைப் பதி வாக்கப் புகைப்படப் படலம் பயன்பட்டு வந்தது. ஆனால் விரைவாகவும், நுட்பமாகவும் நிறமாலை யின் செறிவை அளக்க கைகர் முல்லர் எண்ணிக் எக்ஸ் கதிர் ஒளிர்வு நிறமாலை (மாதிரிப்படம்) விகித எண்ணிக் ஒளிர்வு எண்ணிக் கருவி (geigermuller counter). கருவி (proportional counter), கருவி (scintillation counter) ஆகியவை பயன் படுகின்றன. பகுப்பானின் நிறமாலை உணர்வு நுட்பம் எக்ஸ் கதிரின் அலை நீளத்தைப் பொறுத்தது. கண்டறிய வேண்டிய எக்ஸ் கதிரின் இயல்பைப் பொறுத்துப் பகுப்பானைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கோ குறிப்பிட்ட எண்ணிக் கைக்கோ ஒளிர்வுக் கதிரின் செறிவு அளக்கப்படுகிறது. இவ்விரு ஆளியக்கு முறைகளும் அளவறி பகுப்பிற்குக் கையாளப்படுகின்றன. பண்பறி பகுப்பிற்கும் சிற்றளவு அளவறி பகுப்பிற்கும் கோனியோ அளவி மாறாத் திசைவேகத்தில் சுற்றப்படுகிறது. ஒளிர்வு வரிகள் பகுக்கப்பட்டுத் தொடரான உச்சிவரைவிகளாகப்பதிக்கப்படுகின்றன (படம்-7ஆ). தனிமத்தைப் பற்றிய தகவல்கள் உச்சி வரைவிகளை ஆராய்வதன் மூலம் தெரியவரும். பகுப்பானில் பதிவான எண்ணிக்கைகளைக் கொண்டு தனிமத்தின் அடர்வைக் கணக்கிடலாம். இதற்கு அளவறி மாதிரி