உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 எக்ஸ்‌ கதிர்‌ நிறமாலை

மாதிரி 72 எக்ஸ் கதிர் நிறமாலை களைப் பயன்படுத்தி அளவு குறித்தல் வரைபடம் ஒன்றைத் தயார் செய்து கொள்ளவேண்டும். பகுப்பாயும் உத்தியில் மாதிரிகளைப் பொடி யாகவோ திண்மப் பொருளாகவோ நீர்மமாகவோ எடுத்துக் கொள்ளலாம். மாதிரியைத் தயார் செய்தல் அம்மாதிரியான சீர்மை ஆகியவை இம்முறையின் நுட்பத்தை நிர்ணயிக்கின்றன. மாதிரிகள் கரைப் பானில் கரையுமானால், நீர்ம நிலையில் மாதிரியைப் பயன்படுத்துவது ஏற்புடையது. கரைநிலை வேதிப் பகுப்பாய்வைவிட எக்ஸ் கதிர் ஒளிர்வுப் பகுப்பாய்வு முறை மிகவும் நுட்பமானதும் திட்பமானதும் ஆகும். உலோகமல்லாத தனிமங்கள், பெரிய ஆக்கக்கூறு தனிமங்கள் ஆகியவற்றை ஆராய எக்ஸ் கதிர் ஒளிர்வுப் பகுப்பாய்வு முறை ஒளி வெளியீடு நிறமாலையியலுக்கு உதவியாக அமையும். இம் முறையில் பகுத்தாராய ஒரு கிராம் மாதிரியில் குறைந்த அளவு 10-5 கிராம் தனிமம் இருக்க வெளியீடு வேண்டும். பொதுவாக, பரும மாதிரிகளைப் பகுத் தாராய இம்முறை பயன்படுகிறது. ஒரே சமயத்தில் பல தனிமங்களைத் தானியங்கு கருவிகளால் ஆராயலாம். நிறமாலையைக் கதிர்களின் ஆற்றல் வாரியாக வும் பதிவு செய்யலாம். இந்த ஆற்றல் நிறப்பிரிகை முறைக்கு எக்ஸ் கதிர் ஆற்றல் நிறமாலை அளவியல் என்று பெயர். இம்முறையின் அமைப்பு படம்-8 இல் காட்டப்பட்டுள்ளது. பொதுவாக முதன்மை எக்ஸ் கதிர்களுக்கென, எக்ஸ் கதிர்களை வெளியிடும் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன. சிவ எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன. இக்கதிரியக்க ஐசோடோப்புகளின் அரை ஆயுட்காலம், எக்ஸ் கதிர்களின் ஆற்றல் ஆகிய பண்புகளைப் பொறுத்து எக்ஸ் கதிர்மூலம் தேர்ந் தெடுக்கப்படுகிறது. பகுத்தாராய வேண்டிய மாதிரி மெல்லிய படலமாக ஆக்கப்பட்டுக் கையாளப் அணுக்கரு Fe - 55 அரை ஆயுள்காலம் Cd -109 Am -241 2.7ஆண்டு 452 நாட்கள் 458 ஆண்டு ஆற்றல் 5.9. KeV 22.1Kev 59. 57 Key கனிம எக்ஸ் கதிர் Mn எக்ஸ் கதிர் Ag எக்ஸ் கதிர் Np எக்ஸ் கதிர் குறைகடத்தி எக்ஸ் கதிர்க் குழாய் எக்ஸ் கதிர் ஆற்றல் KeV படம் 8. எக்ஸ் கதிர் ஒளிர்வுப் பகுப்பாய்வு-ஆற்றல் நிறப்பிரிகை முறை (அ) பகுப்பாய்வு அமைப்பின் விளக்கக் கோட்டுப்படம் (ஆ) பதிக்கப்பட்ட எக்ஸ் கதிர் ஒளிர்வு நிறமாலை (மாதிரிப்படம்)