உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ்‌ கதிர்‌ படிகவியல்‌ 73

பட வேண்டும். நீர்மமாகவும் கையாளலாம். எக்ஸ் கதிர் ஒளிர் கதிர்கள், குறை கடத்திப் (Si, Li) பகுப் பான் மீது பட்டு, பல்வழிப் பகுப்பான் மூலம் ஆராயப் படுகிறது. ஒளிர்வு நிறமாலையின் செறிவு ஆற்றல் வரிசைப்படி பதிக்கப்படுகின்றது (படம்-8 ஆ). இம் முறையின் உதவியால் குறைந்த அடர்வுள்ள மாசைக் கண்டறியலாம். எடுத்துக்காட்டாகக் காற்று, புகை யிலை, தேயிலை போன்றவற்றில் உள்ள மாசை ம் முறை கொண்டு விரைவாகக் கண்டறியலாம். எக்ஸ் கதிர் படிகவியல் -பா. வேங்கடரமணி. படிகக் கட்டுமானங்களை எக்ஸ் கதிர் விளிம்பு விளைவைக் கொண்டு கண்டறியலாம். படிங்களை இயற்கை விளிம்பு விளைவுக் கீற்றணிகளைப் (gratings) போல் பயன்படுத்தலாம் என்ற முன்னறி விப்பினை ஜெர்மானிய அறிவியலார் மாக்ஸ் வான் லாவே 1912 இல் அறிவித்தார். அதே ஆண்டில் இதைப் பயன்படுத்தி டபுள்யூ. பிரெடரிக், பி. நிப்பிங் என்போர் ஓர் எக்ஸ் கதிர் விளிம்பு விளைவு ஒளிப்படம் எடுத்தனர். இது லாவே முறை படுகிறது. 1913 இல் டபுள்யூ. லாரன்ஸ் பிராக் என்பார் NaCl, KCI ஆகியவற்றின் படிக அமைப்பு களை லாவே ஒளிப்பட முறையில் வெற்றிகரமாக ஆய்வு செய்தார். இதன் மூலம் சிக்கலான லாவே முறைக்கு மாற்றாக எளிய ஒளிப்பட முறையைப் எக்ஸ் கதிர் படிகவியல் 73 பிராக் எடுத்துரைத்தார், இவர் தம் தந்தை வில்லியம் எச். பிராக் உருவாக்கிய முதல் எக்ஸ் கதிர் நிறமாலை அளவியில் (x-ray spectrometer) ஒற்றை நிற ஒளியைப் பயன்படுத்தி எளிய படிக அமைப்பைக் கண்டறிந்தார். துத்தநாக சல்ஃபைடு. புளூர்ஸ்பார் இரும்பு பைரைட்டுகள், வைரம் ஆகிய வற்றின் அமைப்பைக் கண்டறிந்தார். விளிம்பு விளைவு. படிகம் என்பது அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை ஒழுங்கான வடிவமைப்பில் முப்பரிமாணத்தில் கொண்டதாகும். இந்த ஒழுங் கான வடிவமைப்பு எடுத்துக்கொண்ட ஒரு சிறு துண்டுப்பொருள் முழுதும் காணப்பட்டால் இதை ஒற்றைத் தனிப்படிகம் (single crystal) எனலாம். முப்பரிமாணத்தில் மூலக்கூறுகளின் அமைவிடங் களை ஒழுங்கான வடிவமைப்பைக் கொண்ட ஒற்றை அல்லது அடிப்படைக் கூடு (unit cell) பற்றித் தெளிவாகக் கூறினால் படிக அமைப்பை எளிதில் கண்டறியக் கூடும். மிக நெருக்கமான ஒழுங்கான வடிவமைப்புக் கொண்டுள்ள அணுக்களின் அமைப்பு, படிகத்தை ஒரு விளிம்பு விளைவுக் கீற்றணியாகச் செயல்பட வழிசெய்கிறது. பிராக், எக்ஸ் கதிர்களின் குறுக்கீட்டு விளைவை (inter- ference) எக்ஸ் கதிர்கள். படிகங்களின் சமதொலை வில் அமைந்த அடுத்தடுத்துப் பிளவுறு தளங்கள் lattice planes) ஒவ்வொன்றிலிருந்தும் வரும் எதி ரொளிக்கப்பட்ட கதிர்களால் நிகழ்கிறதெனக் கருதினார், இவருடைய மிக முக்கியமான சமன்பாடு 2d sinÜ = n ஆகும்.இதில் d அடுத்தடுத்த தளங் களின் இடைத்தொலைவு, 1 எதிரொளிக்கப்பட்ட படிகத் தனங்கள் 001க்குச் செங்குத்துக்கோடு b3 படிக அடிப்படைச்செல் படிகத் * தளங்கள் 400 க்கு செங்குத்துக்கோடு bl n=1 n=20=30=4 n=S 100 200 300 400 500 தொடங்கு நிலை 1= 1 001 1=2 002 1=3 003 1=4 004 402 தலைகீழ் ணிக்கோவை படம் 1: தலைகீழ் அணிக்கோவையை இருபரிமானத்தில் வடிவியல் முறையில் காட்டுகிறது.