உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ்‌ கதிர்‌ படிகவியல்‌ 75

(sphere of reficction) கொண்டு விளக்க முடியும். (படம் 2). ஆரம் 1/A கொண்ட கோளம் ஒன்று வரையப்பட்டுள்ளது (1=1). இதில் படு எக்ஸ் கதிர் மீள் எக்ஸ் கதிர் இரண்டும் ஓரலகுத் திசையம் S. எனக் குறிக்கப்படுகிறது. கோள விட்டத்தின் திசையில், படு எக்ஸ் கதிரும், மீள் எக்ஸ் கதிரும் செல்கின்றன. படிகம் C ஐக் கோளக எதிரொளிப்பின் மையத்தில் அமைந்துள்ளதாக எடுத்துக் கொள்ள லாம். கோளக எதிரொளிப்பிலிருந்து மீள் கதிர் வரும் புள்ளியில் தலைகீழ் அணிக்கோவைபின் தொடங்குநிலை 000 இருப்பதாக வைக்கப்படுகிறது. கோளக எதிரொளிப்பின் பரப்பைத் தலைகீழ் வெளி யில் உள்ள புள்ளி வெட்டுமானால் விளிம்பு விளைவுக் கதிர் உருவாகிறது. எக்ஸ் படம் 2 இல் தலைகீழ் அணிக்கோவைப் புள்ளி P கோளக எதிரொளிப்புப் பரப்பில் அமைந்துள்ள தைக் காணலாம். இதிலிருந்து இரு முக்கிய முடிவு கள் பெறப்படுகின்றன. தொகுப்பான படிகத் தளங் கள் (hki) க்குத் தலைகீழாக உள்ள புள்ளி பிராக் விதிக்கு உட்படுவதுடன் படு எக்ஸ் கதிரை எதிரொளிக்கிறது. கோளத்தின் மையம்C இலிருந்து வெளிவரும் விளிம்பு விளைவுக்கதிரின் திசையில், கோளகப் பரப்பில் புள்ளி P அமைந்துள்ளது. முதன்மைக் கதிர் S. க்கும் விளிம்பு விளைவுக் கதிர் S க்கும் இடைப்பட்ட கோணம் 20 ஆகும். தலைகீழ் அணிக்கோவை, நேரடி அணிக்கோவை யுடன் அமைப்பு வகையில் தொடர்புடையது என்று அதன் வரையறையிலிருந்தே கூற முடியும். படிகத் தின் சுழற்சி அச்சைப் பற்றிச் சுழற்றி, அதே கோண அளவிற்குத் தலை கீழ் அணிக்கோவை தொடங்கு நிலை 0 வழியே இணையான அச்சு ஒற்றைப்பற்றிச் சுழற்றினால் அது கோளக எதிரொளிப்பின் வழிச் செல்லும். படிக சுழற்று முறையில், 1 அலை நீளங் கொண்ட எக்ஸ் கதிர்களைக் கொண்டு பதிவு செய்யப்படும் விளிம்பு விளைவின் பெருமங்களை, கோளக எதிரொளிப்பை வெட்டும் தலைகீழ் அணிக் கோவையை hkl என்னும் புள்ளிகளால் குறிக்க வேண்டும். 2/1 ஆரங்கொண்ட கோளத்தினுள் அமையும் விளிம்பு விளைவு பெருமங்களைக் கொண்ட புள்ளிகளை உடைய அக்கோளம் வரம்புக்குட்பட்ட கோளம் எனப்படும். பதிவு செய்யும் முறை. எக்ஸ் கதிர்கள் அணுக் களில் உள்ள எலக்ட்ரான்களால் சிதறடிக்கப்படுவ தால் ஒவ்வொரு விளிம்பு விளைவுக் கதிரின் செறி வும் அடிப்படைச் செல்லில் உள்ள அணுக்களின் அமைவிடங்களைச் சார்ந்துள்ளது. அச்சுத் தொலை வில் மாறுபாடு ஏற்பட்டால் கதிர்களின் செறிவும் மாறுபடக்கூடும். படிகக் கட்டுமானத்தைச் சரியாக அறிய வேண்டுமானால், ஒவ்வொரு தலைகீழ் அணிக் எக்ஸ் கதிர் படிகவியல் 75 கோவைப் புள்ளியிலிருந்தும் வெளிவரும் விளிம்பு விளைவுக் கதிர்களின் செறிவைத் தக்க வகையில் பதிவு செய்தல் வேண்டும். பிராக் எக்ஸ் கதிர் நிறமாலைஅளவு முன்பு ஓர் அயனியாக்கும் கலத்தைப் பயன்படுத்தி எக்ஸ் கதிர் எதிரொளிப்பினால் ஏற்படும் செறிவை அளக்கப் பயன்பட்டது. பின்பு ஒளிப்படவியல் முறையில் பதிவு செய்தல் சிறந்ததெனக் கருதப் பட்டது. 1960 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை ஒளிப்படவியல் முறையில் செறிவைப் பதிவு செய்து, வழக்கமாகக் கண்களால் பார்த்தே பெரும் பகுதியான படிகங்களின் கட்டுமான அமைப்புகள் தீர்மானிக்கப் பட்டன. முப்பரிமாணப்படத்தில் பதிவு செய்து ஆய்ந்து முடிப்பதற்குச் சில மாதகாலம் பிடிக்கும். காலத்தை மிகுதியாகச் செலவிட வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அளவிடப்படும் சார்புச் செறிவுகள் 15-20% வரையிலான திருத்தமாகவே உள்ளன. இதை முப்பரிமாண வேதியியலுக்கும் அமைப்புவச ஆய்வுகளுக்கும் analysis) பயன்படுத்தலாம். (confirmational 1935 ஆம் ஆண்டுக்குப் பிறகு உயர்ந்த நிலைப் பாடுடைய, உணர்வு நுட்பம் மிக்க, சிறந்த காணி களையும் (detectors) கொண்ட எக்ஸ் கதிர் விளிம்பு விளைவுக் கருவிகள் உருவாக்கப்பட்டன. இதில் கைகர் எண்ணி (Geiger counter) ஒளித்தெறிப்பு எண்ணி (scintillation counter), விகிதமுறு எண்ணி (proportional counter) ஆகியன உருவாக்கப்பட்டன. இப்புதிய கருவிகளின் உருவாக்கம் நுட்பமாகவும், விரைவாகவும் செறிவைப் பதிவு செய்வதற்குப் பயன் பட்டது. தானியங்கி விளிம்பு விளைவுக் கருவிகள் சேர்ப்புச் சுற்றுகளைக் கொண்டவை. படிகங்களின் அசைவிற்கேற்ப இசைந்து செல்வதால் ஒவ்வொருநாளும் ம் 200-1000 விளிம்பு விளைவுக் கதிர்கள் வரை ஒரே சமயத்தில் 5% பிழையோடு பதிவு செய்யலாம். வை படிகக் கட்டுமானப் பகுப்பாய்வு. விளிம்பு விளைவுப் பெருமத்தை அடிப்படைக் கூட்டின் உருவம் அளவு வடிவியல் முறையில் தீர்மானிப்பதாக இருந்தாலும், எதிரொளிப்பின் செறிவு அடிப்படைக் கூட்டினுள் விரவியுள்ள அணுக்களின் எண்ணிக்கை, பண்புகள் இவற்றைக் கொண்டே தீர்மானிக்கப்படும். படிகக் கட்டுமானப் பகுப்பாய்வில், விளிம்பு விளைவுக் கதிர் களுடைய கட்டத் தொடர்பின் தீர்வினின்றும், சரியான கட்டமைப்பைப் பெறமுடியும். விளிம்பு விளைவுக் கதிரின் செறிவு அதன் வீச்சின் இருமடி யுடன் தொடர்புடையது. அதாவது Ihki = k[Fhki]" ஆகும். இதில் Fhkl என்பது வீச்சின் கட்டுமானக் காரணியாகும். ஒவ்வொரு விளிம்பு விளைவுக் கதிரும் செறிவுப் பண்பைக் காண்டதோடு. கட்டப் பண்பு கோணம் உடையதாகவும் @hkl உள்ளது.