கசிவு நீர்க்குட்டைகள் 13
கசிவு நீர்க்குட்டைகள் மக்கள் ஆறுகளின் நீரை நீர்த்தேக்கங்கள், குளங்கள் மூலம்பாசனத்திற்குப் பயன்படுத்துகின்றனர். பெருகி வரும்மக்களின் தேவைகளை இவை நிறைவு செய்ய வில்லை. எனவே நிலத்தடி நீர் பயன்பட வேண்டிய தாயிற்று. நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் முயற்சியில் கிணறுகள் மிக அருகில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டு ஆற்றல் மிக்க இறைவைப் பொறிகள் மூலம் நீர் விரைவாக இறைக்கப்படுகிறது. இதனால் நீர்மட்டம் ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. பருவமழை ஒரே சீராக இல்லாமல் காலந்தவறிப் பெய்வதும் அடுத்தடுத்து நிகழ்கிறது. மழை நீர். நிலத்தில் ஊறிப் பயிர்களின் வளர்ச்சிக்குப் பயன்படு கிறது. நீர் பூரித்த நிலையில் ஓரளவு நிலத்தின் ஆழ் பகுதிக்குச் சென்று நிலநீருக்கு (ground water) ஆக்க மளிக்கிறது. இதில் ஒருபகுதி இடைநீராகவும், மறு பகுதி ஓடு நீராகவும் அமையும். மேலும் பெய்த மழை நீர் நிலத்தில் ஊறுதல் மிகவும் அவசியமாகும். அது பாசனத்திற்கும் பயன்படும். அதை அளவுடன் திட்ட மிட்டுப் பயன்படுத்துவதே சிறந்தது. மழைநீர் நிலத் தவறியதன் தில் ஊறுவதற்கான முயற்சி எடுக்கத் விளைவாகவே கிணறுகளில் நீர் ஊற்றுக் குறைகிறது. எனவே மழைநீர் நிலத்தில் ஊறுவதற்கு ஆவன செய்வது இன்றியமையாதது. குட்டை அமைத்தல். சாகுபடி நிலச்சரிவின் குறுக்கே சமதள வாய்க்கால் படிமட்டம், வரப்புகள் முதலியன அமைத்து மழைநீர் சரிவின் ஊடே. விரைந்து ஓடாவண்ணம் ஆங்காங்கே தடுத்து நிலத் தில் இறங்கும் வாய்ப்பளிக்க வேண்டும். நீர் தரு நிலத் தின் தாழ்ந்த பகுதியில் ஓடும் நீரைக் குட்டைகள் அமைத்துத் தேக்குவது நல்ல பயனளிக்கும். இக் குட்டை நீரைத் தேக்கிப் பாசனத்திற்குப் பயன்படுத் தாமல் இருந்தாலும் இக்குட்டையில் தேங்கும் நீர் சீராக நிலத்தடி நீருக்கு ஆக்கமளிக்கும். குட்டையின் கீழ்ப்பகுதியில் உள்ள கிணறுகளில் பெருகிய ஊற்று நீரைப்பயன்படுத்தலாம். விரைந்தோடும் மழைநீர் தன்போக்கில் நிலத்தில் உள்ள வளமான மண்ணைக் கிளறி மண்ணரிப்பு ஏற்படுத்தும். நிலத்தில் தாழ்ந்த பகுதியில் அமைந்த குட்டையில் மண் படிந்துவிடும். இதனால் இக்குட்டை வண்டல் பாயும் தேக்கமாகவும் அமைகிறது. மண் துகள்களின் உருவமும் அவற்றின் கட்டமைப்பும் மண்ணுள் நீர் இயங்குவதற்கு ஆதாரமாகும். மண் கண்டத்தின் அடியில் உள்ள அடிமண்ணும் அதன் கீழ் உள்ள தாய்ப்பாறைகளும் நிலநீர் ஆக்கமுற உதவும். களிமண் மிகுந்த நிலத்தில் நிலத்தடி நீருக்கு நீர் சேறல் குறையும். ஆனால் மணல், மணல் பாங் கான வண்டல் பகுதிகளில் நிலநீர் பெரிதும் ஆக்க முறும். ஆகவே களிமண் நிறைந்த கரிசல் நிலத்தில் கசிவு நீர்க்குட்டைகள் 13 ஊற்றுக்குட்டை அமைப்பது நிலநீருக்கு ஆக்கம் அளிக்காது. எனவே அப்பகுதிகளில் குட்டைகளை அமைப்பதால் நீரைத் தேக்கலாமேயன்றி ஊற்றைப் பெருக்க முடியாது. நீர் தேங்கும் பகுதியில் உவர்த்தன்மை இல்லாது இருக்க வேண்டும். குறைந்த செலவில் மிகுந்த அளவு நீரைத் தேக்குவதே நோக்கமாக இருக்க வேண்டும். எனவே இதற்கு வாய்ப்பான பகுதியைத் தேர்வு செய்வது குட்டைகள் அமைக்க ஓரளவு உதவும். இங்கு வரப்பு இடுவதற்குத் தேவையான மண்ணும் வழிமுகம் கூட்டுவதற்குக் கல்லும் கடைக்காலுக்கு ஏற்ற மண்ணும் வாய்ப்பாக அமையவேண்டும். இந்தியாவில் ஊற்றுக்குட்டை நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. இதனால் கிணறுகளில் ஊற்றுப் பெருகும் என்பதனை அறிந்தாலும் ஊற்றுப் பெருகும் அளவு பற்றித் திட்டமான முடிவு காணப் படவில்லை. தர்மபுரி மாவட்டத்தில், புளிகுண்டா, செட்டி அள்ளி பகுதிகளில் ஊற்றுக் குட்டைகள் அமைத்து ஆய்வுகள் செய்யப்பட்டன. பெய்த மழை அளவு. நிலத்தடி நீர் நீர் நிறைவு முதலியன கணக்கிடப் பட்டன. குட்டைகள் அமைத்தபின் ஆண்டுமழை, முந்தைய மழை, குட்டைகள் அமைக்குமுன்னும் பின்னும் உள்ள ஊற்று நிலை ஆகியவை ஒப்பு நோக்கப்பட்டன. ஊற்றுக்குட்டைகள் அமைத்த பின்பு பெய்த மழை 69% கிணற்றின் ஊற்று நீர்ப் பெருக்கம் 175% இருந்ததாகக் கணக்கிடப்பட்டது. குட்டையில்லாதபோது நட்ட பயிருக்குப் போதிய நீர் கிடைக்குமா என்ற நிலை மாறிப் பாசனத்திற்குத் தேவையான நீர் கிடைக்கும் என்ற உறுதி ஏற்பட்ட மையால் முன்பருவத்தில் கேழ்வரகும் தொடர்ந்து பருத்திப் பயிரும் செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் பயிர் விளைவு கூடுதலாயிற்று. நாட்டின் நீர்வளம் மக்கள் தொகைப் பெருக்கத்தை ஒட்டி அமைவதில்லை. வானின்று பெய்யும் மழை நீரைக் குறிப்பாக நிலத்தில் தேக்க நீர்க்குட்டைகள் உறு துணையாகும். நீர்க்குட்டைகளின் கீழ்ப்பகுதிகளில் ஆயிரம் மீட்டர் தொலைவிற்கு அப்பாலும் கிணறு களில் ஊற்று நீர்ப் பெருக்கம் நிகழக்கூடும். இவ்வாறு ஊற்று நீர் பெருகுவது குட்டைகளின் அருகில் மிகுந்தும், தொலைவில் குறைந்தும் காணப்படும். . பயன்கள். நீர்க்குட்டைகள் ஏற்படுத்துவதால் நிலமற்ற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. வெள்ளப்பெருக்கு நிகழ்வது அரி தாகும். நீர்ப்பாசனக் கால்வாய், பெரும் நீர்த் தேக்கம் இவற்றில் வண்டல் படிவது தடுக்கப்படு கிறது. கால்நடைகளுக்குத் தேவையான நீர் கிடைக் கிறது. சுற்றுச் சூழல் சீரடையும். குட்டைகளில் படியும் வண்டல்மண் விளைநிலங்களுக்கு வளம் பெருக்கும். நீர்க்குட்டைகளில் நீலப்பச்சைப்பாசி,