14 கசையிழையுயிரிகள்
அசையிழையுயிரிகள் அஸ்ஸோலா போன்றவற்றை வளர்ததுக் குறைந்த செலவில் தழைச்சத்தும் பெருக்கலாம். விறகுக்கு உதவும் மரங்களை நீர்க்குட்டைகளில் நடலாம். நீர்க்குட்டைகளில் நீர் ஆறுமாதம் தேங்குமானால் மீன்களை வளர்த்து வருமானம் பெறலாம். குட்டை களில் சுற்றுப்புறப் பகுதியில் மண் வெப்பம் குறைவ தால் பயிர்களின் நீர்த்தேவை குறைகிறது. இப்பகுதி களில் பறவையினங்கள் பெருகும். ஊற்று நீர்க் குட்டைகளை உழவுக்குப் பயன் படாத தரிசாகக் கிடக்கும் பகுதிகளில் அமைக்க லாம். தனால் விளைநிலங்கள் பாதிக்கப்படா. இராபின்சன் தாமஸ் தசையிழையிரிகள் ஓரிரு நீளமான அல்லது குட்டையான கசைகளை (flageila) இடப்பெயர்ச்சி உறுப்புகளாகத் தனது ஒரே செல்லினாலான உடலில் கொண்ட ஒரு-செல் களே உயிரி (flagellates) சுசையிழையுயிரிகள் ஆகும். சாட்டை போன்ற இவ்வுறுப்புக்கு ஃபிளஜெல்லம் (flagellum) என்று பெயர். ஆகவே, இவை தொகுதி- புரோட்டோசோவாவின் கீழ், ஃபிளஜெல்லேட்டா வகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன. பிளஜெல்லேட்டா என்ற பெயர் ஃபிளஜெல்லம் என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது. அம்மொழியில் இது கசை அல்லது சாட்டை என்று பொருள்படும். மாஸ்டிகோஃபோரா என்று உயிரியல் அறிஞர்களால் இவ்வகுப்பு குறிப்பிடப்படுகிறது. இப்பெயர் மாஸ் டிக்ஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது, மாஸ்டிக்ஸ் என்றால் கசை என்று பொருள். கசை யிழையுரிகள் என்பதற்கு இதுவே காரணம் ஆகும். ஒரு செல் உயிரிகளின் தொகுதியிலேயே படி மலர்ச்சியில் வை மிகவும் தொன்மை வாய்ந்தவை என்று உயிரியல் வல்லுநர்களால் கணிக்கப்பட் டுள்ளது. கசையிழையுயிரிகளில் பல பேரினங்கள் தாவரங்கள் போலவும்,வேறு பல் பேரினங்கள் விலங்குகள் போலவும் தகவமைப்பையும், பழக்க வழக்கங்களையும் கொண்டுள்ளன. ஆகவே, தாவரங் அளையும் விலங்குகளையும் மிகவும் தாழ்மட்டத்தில் படிமலர்ச்சியின் அடிப்படையில் இணைக்கும் உயிரி களாக இவற்றைக் கொள்ளலாம். படிமலர்ச்சியில் முன்னேறிய தாவரங்கள் இவ்வகையான அமைப் புடைய அடிப்படை உயிரிகளிலிருந்தே தோன்றி யிருக்க வேண்டும் என்பது தாவரவியல் வல்லுநர் களின் முடிவாகும். கசையிழையுயிரியின் உடல் ஒரு மெல்லிய உறை யால் மூடப்பட்டிருக்கும். இவ்வுறைக்குப் பெனிக்கிள் என்று பெயர். உடலில் ஒன்று அல்லது பல கசைகள் போன்ற இழைகள் காணப்படும். வை பெயர்ச்சியிலும், உணவு தேடும் போதும் உதவும் வகை யில் உள்ளன. இதன் உடல் ஒரே செல்லால் ஆனது. ஆகையால் பிளாஸ்மா சவ்வுக்குள் சைட்டோ பிளாசமும் அதன் நடுவில் நியூக்ளியசும் காணப் படும். நியூக்ளியசினுள் ஓர் உட்கருமணி (nucleolus) உண்டு. எண்டோசோம் எனப்படும் சைட்டோ பிளாசம் வெளிப்பிளாசம், உட்பிளாசம் என்று பாகு பாடு இல்லாமல் ஒரே சீரான தன்மையதாக இருக்கும். சில வகைக் கசையிழையுயிரிகளில் பிளாஸ்மா சவ்வுக்கு வெளியே சில பாதுகாப்பு உறைகள் காணப் படுகின்றன. சில இனங்களில் சவ்வினாலான ஓடாகவும், சிலவற்றில் இப்பகுதி கைட்டின், சிலிக்கா அல்லது செல்லுலோஸ் போன்ற வேதிக் கலவை களால் வலிவூட்டப்பெற்றதாகவும் இருக்கும். கலவா இனப்பெருக்கத்தில் இவை மிகவும் எளிய நீட்டுப்போக்கில் பிளத்தல் முறையையே கையாளு கின்றன. கலவி முறை னப்பெருக்கம் இவற்றில் அரிது. கசையிழையுயிரிகளில் சில் வேறெந்த உயிரி களையும் அண்டி வாழாமல் தன்னிச்சையாக வாழ் கின்றன. இவை தவிர இணையுயிரிகளாகப் பல ஒற்றை உயிரிகள் ஒருங்கிணைந்து தொகுதியாகக் காணப்படுகின்றன. கசையிழையுயிரிகளில் விலங்கு களுக்கும் மனிதனுக்கும் தீங்கு விளைப்பவை உண்டு. ஆனால் 60 al, தாம் ஒட்டுண்ணியாக வாழும் விலங்கின் உடலிலுள்ள செல்களைத் துளைத்து தமது இருப்பிடமாக்கிக் கொள்வதில்லை. பல் உணவுப் பழக்க அடிப்படையில் கசையிழை உயிரிகளை இரு பெருங்கிளை வகுப்புகளாகப் பிரிக்க லாம். தாவரம் போல் உணவு தயாரிக்கும் தன்மை யுடையலை தாவரக் கசையிழையுயிரி(phytomastigina ) என்றும், விலங்குபோல் உணவு தேடும் தன்மையுடை யவை விலங்குக் கசையிழையுயிரி (zoomastigina) என்றும் பெயரிடப்பட்டுள்ளன. கசையிழையுயிரி களில் சுமார் இரண்டாயிரம் னங்கள் அடங்கும். அவை மேற்குறிப்பிட்டுள்ள இரு துணை வகுப்புகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள பல கணங்களுக்குள் அடங்கும். தாவரக் கசையிழையுயிரியில் பலவகை நிறமிகள், குறிப்பாகப் பசுங்கணிகங்கள் நிரம்பிய நிறமிகள் காணப்படுகின்றன. இவற்றிலுள்ள பச்சையத்தின் (chloropbyli) உதவியால் ஒளிச்சேர்க்கை முறையில் இவை தமது உணவைத் தயாரிக்கும். இவற்றில் பல சாறுண்ணிகளாகவும் செயலாற்றுகின்றன. கசை யிழை ஒன்று அல்லது இரண்டு மட்டுமே உண்டு. ஒளிச்சேர்க்கையின்போது தயாரித்த, தேவை போக எஞ்சிய மாவுப்பொருளைச்சிறிது மாறுபட்ட பொருளாக மாற்றி அதைத் துணுக்கு வடிவத்தில் தனது சைட்டோபிளாசத்தில் பின்னர் பயன்படுத்து