670 கருச்சிதைவு
670 கருச்சிதைவு நீச்சல் குளம் என்றும் கூறுவதுண்டு. தன்னைச் சுற்றி லும் நீர்மம் சூழ்ந்துள்ள நிலையில் கருச்சவ்வுப் பைக்குள் கரு வளர்கிறது. கருவின் வளர்ச்சிக் கேற்பக் கருச்சவ்வுப் பையும் பெரிதாக வளர்ந்து நீர் மத்தில் கருவை அமிழ்த்தி வைத்துக் கொள்கிறது. வளரும் கரு நீர்மத்தால் தாங்கப்படுகிறது. எனவே, உறுப்புகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும் குறைபாடுகள் தோன்றா வண்ணம், சீராக வளர்ச்சி அடைகின்றன. பாலூட்டிகளில் கருச்சவ்வுப் பையும், அதைச் சூழ்ந்துள்ள புறச்சவ்வும் கொண்ட அமைப்பே பனிக்குடம் ( bag of waters) எனக் குறிப் பிடப்படுகிறது. பையின் உள்ளே தண்ணீர் போன்ற நீர்மம் இருப்பதால் இது இவ்விதம் பெயரிடப் பட்டது. கருச்சவ்வுப்பை உண்டாகும்போது அதைச் சுற்றிச் சவ்வாலான புறச்சுவர் (chorion or seros6 ) ஒன்றும், இரண்டிற்கும் இடையே ஓர் இடைவெளி யும் (படம்) உண்டாகின்றன. கருச்சவ்வுப்பை எனும் பாலூட்டிகளின் பனிக்குடம் கருவளர்ச்சிக் காலம் முழுதும் கருலைப் பேணுகிறது. முட்டைக்கு ஏற் படும் அதிர்ச்சிகளால் கரு பாதிக்கப்படாமல் அதிர்ச்சி ஏற்பியாகக் கருச்சவ்வுப்பை துணை செய்கிறது. புறச்சூழலில் உண்டாகும் வெப்ப மாற்றத்தாலும். காற்றாலும் கரு உலர்ந்து போய்விடாமல் காக்கிறது. அதாவது, மீன்கள், நில நீர் வாழ்வன ஆகியவற்றுக்கு நீர் எவ்வாறு துணை செய்கிறதோ, அவ்வாறு கருச் சவ்வுப்பையில் உள்ள நீர்மம் ஊர்வன, பறப்பன, பாலூட்டி என்னும் மூன்று இனங்களையும் சேர்ந்த முதுகெலும்புள்ளவற்றில் செயல்படுகிறது. கருச்சவ்ப்பை (திரவம் நிரம்பிய பை ) மஞ்சட் கருப்பை புறச்சவிவு அல்லவிட்டாய் பாலூட்டிகளில் பனிக்குடத்தின் பணி அளவிட ற் கரியது. ஊர்வன, பறவைகள் இவற்றின் முட்டை கள் நிலையாக ஓரிடத்தில் இடப்பட்டுக் கருவளர்ச்சி யுறுகின்றன. எனவே, இவற்றிற்கு அதிர்வுகள் மிகுதி யாக ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், பாலூட்டி களில் கருவுற்ற பெண் விலங்கு, வளரும் கருவைப் பல மாதங்கள் சுமந்து கொண்டு, தன் அன்றாட வாழ்க்கைத் தேவைக்காக அங்குமிங்கும் இயங்க வேண்டி உள்ளது. இவ்வாறு செல்லும்போது இடி படும் வாய்ப்புகள் மிகுதி. இதனால் உண்டாகும் அதிர்ச்சி கருவைத் தாக்காமல் கருச்சவ்வுப்பை காக்கிறது. கள் கருச்சவ்வுடையனவான ஊர்வனவும், பறவை களும், பாலூட்டிகளும் முதுகெலும்பு உள்ளவற்றின் படிமலர்ச்சியால் உயர்ந்த நிலையை அடைந்த உயிரி ஆகும். இவற்றின் சிறுநீரகங்கள் கருச்சவ்வு அற்றவையான மீன்கள், நிலநீர் வாழ்வன ஆகிய வற்றின் சிறுநீரகங்களினின்றும் பெரிதும் வேறுபடு கின்றன. சோம. பேச்சிமுத்து கருச்சிதைவு இது குழந்தை பிறப்பிற்கு முன்னதாகவே நிகழும் சூல் முடிவாகும். சில காலத்திற்கு முன் வரை, கரு வளர் காலத்தின் முதல் இருபத்தெட்டு வாரங்களில், தாயின் உடலை விட்டு வெளிவந்து தனியாக வாழக் கூடிய நிலையை ஒரு கரு அடையாத நிலையில், கருப்பையினின்று முதிர்கரு வெளியேற்றப்படுவதே கருச்சிதைவு எனக் கருதப்பட்டு வந்தது. இருபத் தெட்டு வாரக் கருவளர் காலத்திற்குப் பின் பிறக்கும் குழந்தைகளே உயிர் வாழக்கூடியவை என்னும் கருத்தும் இருந்தது. ஆயின், மருத்துவ வளர்ச்சி யினால், இருபது வாரங்களிலேயே பிறக்கும் சிசுக் களையுங்கூடத் தற்போது வீாழ வைக்க முடியும். எனவே, சூல்கொள் காலம் முதல் இருபது வாரங்களுக் குள் நிகழும் முதிர் கரு வெளியேற்றமே கருச்சிதைவு எனத் தற்போது வரையறுக்கப்பட்டுள்ளது. கருச்சிதைவு செயற்கை முறையாலன்றி இயல் பாகவே நிகழலாம். அன்றியும் மனித முயற்சிகளால் நிகழ்த்தவும் படலாம். பின் வகையான தூண்டுதற் கருச் சிதைவுகளில் மருத்துவ முறை, குற்ற முறை ஆகிய இருவகைக் கருச்சிதைவுகளும் அடங்கும். மொத்தத்தில், பதினைந்து சதவீத சூல்கள் இயல்பான கருச்சிதைவுகளாக முடிகின்றன. இத் தகைய கருவியற்சிதைவுகளுள் பெரும்பாலானவை கருவளர் காலத்தின் பன்னிரண்டாம் வாரத்தில் நிகழ்கின்றன. தானாகவே, செயற்கைத் தூண்டுதல்