கருச்சிதைவு 671
எதுவும் இல்லாமல் நிகழும் கருவியற் சிதைவிற்கான காரணங்கள் பல. கருவின் குறைகள், தாயின் நோய் கள். தந்தை வழிக் கேடுகள் என க்காரணங்களை மூவகையாகப் பகுக்கலாம். வளரும் கருவின் வளர்ச்சிக் குறைபாடுகளோ, நுண் கிருமித் தவறுகளோ அன்றி நச்சுக்கொடிக் குறைகளுங்கூட முதற் பகுப்பில் அடங்கும். இரண்டாம் பகுப்பில், தாயின்மூலம் ஏற் படக் கூடிய நோய்களாலும் கருச்சிதைவுகள் தோன்ற லாம். தாயைத் தாக்கக்கூடிய ஜெர்மானியம்மை (german measles) மேக நோய் போன்றவையும் கருக் கலைப்புச் செய்யக்கூடும். மேலும், தாய்க்கு இருக் கக் கூடிய உட்சுரப்புக் குறைகள், சூற்பைக் குறை பாடுகள், சூல் தசைக்கட்டிகள் ஆகியவற்றாலும், கரு வளர் காலத்தில் நிகழக்கூடிய விபத்து, கதிரி யக்கம் போன்றவற்றாலும் கருச்சிதைவு லாம். தந்தையின் விந்துகளில் உள்ள குறைபாடு களும் கருச்சிதைவை ஏற்படுத்தலாம் என்னும் கருத் தும் உள்ளது. உண்டாக கருச்சிதைவு 671 கருவியற் சிதைவுகளில் பல வகைகள் உண்டு. முழுக்கருச் சிதைவும் கருவுறுபயனும் நச்சும் முழுது மாகக் கருப்பையினின்று வெளித் தள்ளப்படுவதைக் குறிக்கும். (கருவும், அதன் பகுதிகளும், அதைச் சு சுற்றி யுள்ள சவ்வுகளும் சேர்ந்து கருவுறுபயன் எனப்படும்.) கருவளர் காலத்தில் இவ்வகை, முதல் பன்னிரண்டு வாரங்களுக்குள் கருச்சிதைவு நடப்பதால் நிகழ்வ தாகும். இவ்வாறின்றிக் கருவுறுபயனில் பகுதியோ, நச்சோ, கருப்பையின் உள்ளே தங்கிக் கொண்டு, பிற பகுதிகள் வெளியேற்றப்படுமாயின், அதுவே குறைக் கருச்சிதைவு ஆகும். பன்னிரண்டு வாரங்களுக்குப் பின் நிகழும் கருச்சிதைவுகள் பொதுவாக இவ்வகை யைச் சார்ந்தவையாகும். கருமருட்சிதைவில், சூலுற்ற பெண் சற்றே வலி யையும் உணர்கிறார்; சிறிதளவு இரத்தப் போக்கும் நிகழ்கிறது. கருப்பையின் இணைப்பினின்று கரு வில கிடும் ஆபத்து இதிலுண்டு. இரத்தப் போக்கைக் கண்ணுற்றவுடன், ஆழ்ந்த ஓய்வும் அமைதியும் தாய்க்கு அளிக்கப்பட்டால் இவ்வாபத்தைத் தடுக்க அ. கருப்பையில் கரு ஆ. கருமுமுச் சிதைவு குறைகருச் சிதைவு ஈ கருமருட் சிதைவு கூ. தவிராக் கருச்சிதைவு கருச்சிதைவு வகைகள்