812 கலை மான்
812 கலை மான் (அ) (ஆ) படம் 2. கலீனா படிகங்கள் (அ) கனசதுரம் (ஆ), (இ) எண்முகவடிவம் சேர்ந்து காணப்படுகிறது. முக்கியமான தாதுவாகும். இது காரீயத்தில் மிக சு.சந்திரசேகர் கலை மான் இதன் வேறுபெயர்கள் இரலை மான், முருகு மான், கருமான், கரைமான் என்பன. இம்மான்கள் பெயருக் கேற்ப மிக அழகிய நிறத்தையும், கொம்புகளையும் உடையவை. அழகிய கரும்பழுப்பு மென் நீல நிறமும் (violet) மார்பின்கீழ் முழு வெண்மையும் கொண்டு இருக்கும். ஆண் மானின் கொம்புகள் சுருள் சுருளாக வளைந்து கூறியனவாக உள்ளன. இவை 50 செ.மீ. நீளம்வரை வளரக்கூடியன. கால்கள் நீண்டு, மெலிந்து வலிமையுடன் மிக விரைவாக ஓடுவதற்கு ஏற்ப அமைந்துள்ளன. மானின் தசைகள் மிக விரைவாக இயங்கக் கூடியவை. கடினமில்லாக் குளம்புகளின் அமைப்பால் இம்மான்கள் மிக விரைவாக ஓடுகின்றன. மணிக்கு ஏறத்தாழ 65 கி மீ. வீதம் 15 கி.மீட்டருக்கு மேல் ஓடும் திறன் வாய்ந்தவை. குறுகிய தொலைவு இருப்பின் 90 கி. மீட்டர் வேகத்திற்கு மேல் பாய்ந்து செல்லத்தக்கவை. நன்கு வளர்ந்த ஒரு கலைமான் ஏறக்குறைய 80 செ.மீ. உயரம் இருக்கும்; வட இந்தியாவில் உள்ளவை சற்றுப் பெரியவை. வை கலைமான்கள் கூட்டமாக வாழ்கின்றன. பகற்பொழுதில் திரியக் கூடியன. இலைகளையும் புல்லையும் மேயும். கண்பார்வை மிகக்கூர்மையாக இருக்கும். கூட்டத்திலுள்ள பெண்மான்கள் அடிக்கடி தலையைத் தூக்கி ஏதாவது ஆபத்து வருகிறதா என்று தெரிந்து கொள்ளும். எதிரிகள் அவற்றை நெருங்கும்போது ஓடத்தொடங்கும். ஆனால் தொடக் கத்திலேயே விரைவாக ஓடுவதற்குப் பதிலாகப் பன் முறை குதிக்கின்றன. 6-10 அடி வரை தாவிக் குதிக்கும் ஆற்றல் வாய்ந்தவை. இவ்வாறு பலமுறை தாவிக் குதித்த பின்னரே விரைவாக, ஓடத்தொடங் கும். இப்பழக்கம் . சுலைமான்களிடம் மட்டுமே காணப்படும் பண்பாகும். ஆனால் இச்செயலே அவற்றிற்குத் தீங்கும் விளைவிக்கின்றன. இவை சூழ் நிலை அறிந்து கொள்ளவும் எதிரியின் இருப்பிடம் அறிந்து கொள்ளவும் உயரக் குதிப்பதுண்டு, இவ்வாறு உயரத் துள்ளுவதால் வேறு விலங்குகள் இவற்றின் இருப்பிடத்தை அறிந்து அவற்றைத் தாக்க முயலும். வேகமாக ஓடும்போது ஏறத்தாழ 20 அடி நீளத்திற்கு மேல் தாண்டிச் செல்லும் திறனும் இவற்றிற்கு உண்டு. புலி, சிறுத்தை, வேங்கை, நரி போன்றவையே இவற்றின் எதிரிகளாகும். இவற்றுள் வேங்கையே