உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களிக்‌ கனிமங்கள்‌ 5

கனிக் கனிமங்கள் 5 உடை இனத்தைச் சேர்ந்தவை. இவை அனைத்தும் Al,0, 2SiO, 2H,O எனும் ஒரே வேதி இயைபை யவை. ஆனால் அணு அமைப்பு முறையில் ஒன்றோ டொன்று மாறுபட்டவை. என்டலைட் எனும் கனிமம் இருமட உங்கு நீர் உடையது. அல்லோஃபேன் படிக மில்லாத ஒரு கனிமம் ஆகும். மாண்ட்மாரிலோனைட் கனிமங்கள். இனத்தைச் சேர்ந்த AlgSi, O, (OH), என்னும் வேதி இவற் யைபை அடிப்படையாகக் கொண்டுள்ளன. றில் மக்னீசியம். இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம் முதலியவை பல்வேறு அளவுகளில் உள்ளன. இயைபு மாறுபாடு உடைய பல கனிமங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மூன்றாம் இனத்தைச் சேர்ந்த கனிமங்கள் நீர் கலந்த அபிரசுங்கள் ஆகும். இவ்வகையைச் சேர்ந்த கனிமங்கள் தெளிவாக ஆராயப்படவில்லை. இவை பொட்டாசியத்தைக் கொண்டுள்ள மாண்ட்மாரிலோ னைட்டுக்கும். வெள்ளை அபிரகமாகிய மாஸ்க் கோவைட்டுக்கும் இடைப்பட்ட, இரண்டும் சேர்ந்த வேதிஇயைபைப் பெற்றுள்ளன. இவை அணு அமைப்பு முறையிலும் இவ்விரு கனிமங்களின் அணு அமைப்பு களிலும் காணப்படும் கூறுகளைக் கொண்டுள்ளன. களிக்கனிமத்திற்கான இப்பாகுபாடு சிறந்ததாக வும். பொருத்தமானதாகவும் கருதப்படவில்லை. ஆகையால் அண்மைக்காலத்தில் களிக்கனிமங்கள் வேறு வகையில் வகைப்படுத்தப்படுகின்றன. அண்மைக்காலப் பாகுபாட்டு முறையில் படிக அமைப்புடையவை, படிக் அமைப்பற்றவை என இரண்டு வகையாகக் களிக்கனிமங்கள் பிரிக்கப் பட்டுள்ளன. அல்லோஃபேன் எனும் கனிமம் படிக அமைப்பு இல்லாத வகையைச் சேர்ந்தது. படிக அமைப்புடைய கனிமங்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் வகையைச் சேர்ந்த கனிமங்கள் இரண்டு அடுக்குகளைக் கொண்ட அணு அமைப்பை உடையவை. இவற்றின் அணுஅமைப்பின் ஓர் அடுக்கில் சிலிக்கான் ஆக்சைடு நான்முக அமைப்பையும் மற்றோர் அடுக்கில் அலுமினியம் ஆக்சைடு எண்முக அமைப்பையும் கொண்டிருக் கின் றன. இவை மேலும் இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உருவத்தில் நீண்டிருப்பவை ஒருவகை, மூன்று திசைகளிலும் சமஅளவாக இருப் பவை வேறொரு வகையாகும். ஹல்லாய்சைட் முதலிய கனிமங்கள் நீண்டிருக்கும் வகையைச் சேர்ந் தவை. கயோலினைட் கனிமங்கள் சம அளவு வகையைச் சேர்ந்த கனிமங்கள் ஆகும். முதலான அணு அமைப்பில் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ள கனிமங்கள் இரண்டாம் வகை ஆகும். இவ்வகையைச் சேர்ந்த களிக்கனிமங்களின் அணு அமைப்பில் சிலிக்கான் ஆக்சைடு நான்முக அமைப் பைக் கொண்ட இரண்டு அடுக்குகளுக்கு இடையே எண்முக அமைப்பு அடுக்காக அமைந்துள்ளது. இம் மூன்று அடுக்குகளை உடைய வகையைச் சேர்ந்த கனி மங்கள் விரிவடையக்கூடிய அணு அமைப்பைக் கொண் விரிவடையாத அணு அமைப்புடையவை டவை, என இரண்டு பிரிவுகளாகக் கூறப்படுகின்றன. இவற்றில் விரிவடையக்கூடிய அணு அமைப்பு உடைய பிரிவைச் சேர்ந்த கனிமங்கள் நீளமாக இருப்பவை, சமஅளவின் வாக இருப்பவை என இரு சிறு பிரிவுகளாகவும் பிரிக் கப்படும். மாண்ட்மாரிலோனைட், சேன்கோனைட் வெர்மிகுலைட் முதலானவை விரிவடையும் அமைப் பை உடைய சமஅளவிலுள்ள வகையைச்சேர்ந்தவை. நான்ட்ரோனைட், சேப்போனைட், ஹெக்டோரைட் முதலான கனிமங்கள் விரிவடையக்கூடிய அமைப் புடைய நீண்ட உருவம் உடைய வகையைச் சேர்ந் தவை ஆகும். ல்லைட் முதலான கனிமங்கள் விரிவடையாத ணு அமைப்புடைய வகையைச் சேர்ந்தவை. களிக்கனிமங்களில் மூன்றாம் வகையைச் சேர்ந்த கனிமங்களில் வெவ்வேறு (அணு) அடுக்குகள் முறை யாகக் கலந்துள்ளன. குளோரைட் முதலிய கனி மங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. " சிலிக்கான் ஆக்சைடு நான்முக வடிவு அடுக்கு களாக இல்லாமல் சங்கிலித் தொடர் போன்று அமைந்திருக்கும் அணு அமைப்புடைய களிக்கனி மங்கள் நான்காம் வகையாகும். இவற்றின் அணு அமைப்பில் சிலிக்கான் ஆக்சைடு நான்முக அமைப்பு களாலான - சங்கிலித் தொடர்களுக்கு இடையே ஆக்சி ஜன், நீரியம் முதலிய கூட்டணுக்களாலான எண்முக அமைப்புகள் அமைந்திருக்கக் காணலாம். அட்டா புல்கைட், செப்பியோலைட், பலிஹோர்ஸ்கைட் முத லான களிக்கனிமங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை யாகும். களிக்கனிமங்கள் பலவகைப்பட்ட பாறைகளி லிருந்து உண்டான மண்களிலிருந்து பாறை மாற்றத் தின் விளைவாக உண்டாகின்றன. பாறையின் வகை, காலநிலை நில அமைப்பு, அங்குள்ள தாவரங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அங்கு உண்டாகும் களிக் சுனிமம் அமையும். களிக்கனிமங்களில் பெரும்பா வெப்பநீர்ப் படிவுகளாகவே உண்டா குறைவான வெப்பநிலையில் லானவை. கின்றன. அமிலத் தன்மை உள்ளபோது கயோலினைட் இனத்தைச் சேர்ந்த கனிமங்கள் உண்டாகின் றன. குறைவான வெப்பநிலையில் காரத் தன்மையுள்ளபோது மாண்ட் மாரிலோனைட் னத்தைச் சேர்ந்த கனிமங்கள் தோன்றுகின்றன. மேலும் சூழ்நிலை மாறும்போது களிக்கனிமங்களின் தன்மைகளும் மாறுகின்றன. ஆகை யால் களிக்கனிமங்களின் வேதி இயைபிலிருந்து அவை தோன்றிய படிவுகளின் நிலப்பொதியியல் வரலாற்றை அறியலாம். களிக்கனிமங்களில் தக்கலை கயோலினைட், சிறப்பாகக் குறிப்பிடத் மாண்ட்மாரிலோனைட்