உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 களிக்‌ கனிமங்கள்‌

6 களிக் கனிமங்கள் தில்லை. இவை தட்டையான படிகங்களாக ஒளிபுகுந் தன்மையுடன் காணப்படுகின்றன. கயோலினைட்டி லிருந்து ஒருசில தன்மைகளிலேயே இவை மாறுபட்டு விளங்குகின்றன. மறைகோணம் கயோலினைட்டில் மிகக் குறைவாக உள்ளது. ஆனால் இக்கோணம் நேக்ரைட்டில் 100-120 ஆகவும், டிக்கைட்டில் 15°-20 ஆகவும் உள்ளது. இத்தன்மை கொண்டே கனிமங் கள் பிரித்து அறியப்படுகின்றன. படம் 2. களிமண் படிவில் கயோலினைட் இல்லைட், குளோரைட் முதலியனவாகும். கயோலினைட் ஒரு சாய்சதுரப் படிகத் தொகுதியைச் சேர்ந்த கனிமம். இக்கனிமம் மெல்லிய சாய்சதுர வடிவம் அல்லது அறுகோண வடிவத்தில் செதில்கள் போன்று தட்டையான உருவத்தில் காணப்படும். இது பெரும்பாலும் களிமண்ணாக எளிதில் நொறுங்கக் கூடிய மாவு போன்று கிடைக்கின்றது. இதன் வேதி இயைபு Al,O,SiO, 2H,0 ஆகும். இக்கனிமத்தில் அடி இணை வடிவுக்கு இணையான கனிமப்பிளவு தெளிவாக உள்ளது. இக்கனிமம் வளையக்கூடியது; நெகிழும் தன்மையுடையது. இதன் கடினத்தன்மை 2-2.5: ஒப்படர்த்தி 2.60-2.63. இதில் முத்து மிளிர்வு அல்லது மண் மிளிர்வு காணப்படும். கனிமம் பொதுவாக வெண்மை நிறம் உடையது. வெளிறிய சாம்பல் நிறம், மஞ்சள், நீலம், சிவப்பு அல்லது சருகின் நிறமாகக் காணப்படும். இக்கனிமம் ஈரொளி அச்சுகளைக் கொண்டது. எதிரொளி (-) சுழற்றும் தன்மை கொண்டது. இதன் ஒளி அச்சுத் தளம் (010) தளத்திற்குச் செங்குத்தாக அமைந் துள்ளது. இதன் Z-அதிர்வு திசை b-படிக அச்சுக்கு இணையாக உள்ளது. இதன் ஒளிவிலகல் எண்கள் &= 1.557-1.561; 8=1.662-1.565; Y = 1.563-1.566. இக் கனிமத்தில் ஊதா ஒளியைவிடச் சிவப்பு ஒளியில் ஒளி பிரிதல் மிகுதியாக இருக்கும் (P>w). நேக்ரைட், டிக்கைட் ஆகிய கனிமங்கள் சுயோலி னைட் கனிமத்தை ஒத்துள்ளன. இவை இரண்டும் கயோலினைட்டைப்போல் மாவுப்பொருளாக இருப்ப களிக்கனிமம் அனாக்சைட் எனும் பெரிதும் சுயோவினைட்டின் தன்மைகளைப் பெற்றுள்ளது. இதிலுள்ள சிலிக்கான் டைஆக்சைடு, அலுமினியம் ஆக்சைடு ஆகியவற்றின் அளவு, கயோலினைட்டில் இருப்பதைவிட மாறுபட்டிருக்கும். இக்கனிமம் ஒரு தனிக்கனிமம் அன்று என்பதும், கயோலினைட்டும் பளிங்கும் சேர்ந்த கலவையே என்பதும் எக்ஸ் கதிர் ஆய்வினால் தெரிய வந்தது. மாண்ட்மாரிலோனைட், மக்னீசியமும் கால்சி யமும் கலந்த ஓர் அலுமினியம் சிலிக்கேட் ஆகும். இது நீர் கலந்துள்ள ஒரு கனிமம். இதன் வேதி இயைபு (Mg, Ca)O Al,0, 5SiO, nH,0 எனக் 5sionH,0 கருதப்படுகிறது. இக்கனிமத்தில் இருக்கும் அலு மினியம் ஆக்சைடு ஆறில் ஒரு பங்கு மக்னீசியத்தால் கவரப்பட்டுள்ளது. இக்கனிமம் திண்மமாகக் காணப் படுகிறது. இது வெண்மை, சாம்பல் நிறம், வெளிர் சிவப்பு, நீலம் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். இதன் ஒப்படர்த்தி 2; ஒளிவிலகல் எண் 1,49-1.56.