உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களிமண்‌ பொருள்கள்‌, கட்டடக்‌ கலையில்‌ 13

கயோலினைட் மிகுந்துள்ள களிமண், வெண்மை நிறத்துடன் காணப்படுவதால் காகித மேற்பூச்சுப் பொருளாகப் பயன்படுகிறது. கரிமச் சேர்மங்களை ஒன்றிணைப்பதால் ரப்பரில் கூட்டுப்பொருளாகவும். உயர் உருகுநிலை பெற்றுள்ளமையால் வெப்பந்தாங் கும் பொருளாகவும் பயன்படுகிறது. செங்கல். வெங்களி. வார்ப்பு மணல் (moulding sand), சோப், நிறம்நீக்கி, மருந்து, பாண்டம், எடை குறைந்த பொருள்கள், ஒட்டுப்பொருள் (adhe- sive), நெய்வணம் (paints), உலர்த்துவதற்கு உதவும் துணைப் பொருள் (dessicants), மசகு நிறமி, நெகிழ்விப்பி plasticizing agent), பால்மமாக்கி, போன்றவற்றைத் தயாரிப்பதற்குக் களிமண் பயன் படுகிறது. சிலசமயம் தாதுப்படிவுகளில் களிமண் காணப்படுகிறது. மேலும் களிப்பாறையில் காணப் படம் 3. களிமண் பாண்டங்கள் செய்யப்படுதல் கனிமண் பொருள்கள். கட்டடக் கலையில் 13 படும் களிமண் பெட்ரோலிய உற்பத்தியில் பெரும் பங்கேற்கிறது. இரா. சரசவாணி நூலோதி.M.S. Krishnan, Geology of India and Burma, Sixth edition, CBS Publishers & distributors, New Delhi, 1982. களிமண் பொருள்கள், கட்டடக் கலையில் செங்கல், கூரை ஓடு, வடிகால் ஓ (drain tile ), குழாய், உருவாரம் (terracottu), உள்தரை மற்றும் வெளிச்சுவர் ஓடுகள், நலவாழ்வு அமைப்பு (sanitary fixtures). கழிப்பறைக் கட்டுமானம் (toilet sinks) ஆகியவை கட்டடக்கலையில் பயன்படும் களிமண் பொருள்கள் ஆகும். செங்கற்கள் திண்மமாகவும், இடைத்துளைப் புடனும் (cored) காணப்படுகின்றன. இவ்வகைச் செங்கற்களில் குறுக்குவெட்டுத் தோற்றத்தின் திண்மப் பரப்பு மொத்தப் பரப்பில் 75% இருக்க வேண்டும். செங்கற்கள் கறுப்பு,'வெள்ளை, சிவப்பு, மஞ்சள் முதலிய பல நிறங்களில் உள்ளன. பல நிறங்கள் கொண்ட ஒரேவகைச் செங்கற்களும் கிடைக்கின் றன. முகப்புச் செங்கற்களில் (face brick) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முகங்கள் பளபளப்பாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. இவை சுவர்களின் வெளிப் பரப்பிற்காகவே செய்யப்படுகின்றன. இவை மெரு கேற்றப்பட்டு அல்லது மெருகேற்றப்படாமல் உள்ளன. செங்கற்கள், கூர்மையான மூலைகளுடனும், சீரான பரப்புடனும் இருப்பதற்கு அவை மென்மண் முறை (soft mud process) அல்லது கடின மண் முறைகளில் {stiff mud process) மீண்டும் அழுத்தப்படுகின்றன. சீரற்ற பரப்பைக் கொண்ட செங்கற்களைச் சீர் செய் வதற்கு, அவற்றின் வெளிப்பரப்பு, கம்பியின் உதவி யால் தேய்க்கப்படுகிறது. 1 தீச்செங்கல் (fire brick). இவை எளிதில் உருகாத வகையைச் சார்ந்தவை. உலை, மாற்றி, புகை போக்கி, மூசை (crucible ) முதலிய கட்டுமானங் களில் இவை பயன்படுகின்றன. இவற்றில் அமிலத் தீக்கல், காரத் தீக்கல், நடுநிலைத் தீக்கல் என மூவகை உள்ளன. களம் பதிக்கும் செங்கற்கள் (paving bricks). வை கடின மண்' முறையில் ( stiff mud process தயாரிக்கப்படுகின்றன. பாறைக் களிமண், தூய நுண் களிமண், தேர்ந்தெடுக்கப்பட்ட மாக்கல் பாறைகள் முதலியவற்றிலிருந்து செய்யப்படுகின்றன. மிகு அடர்த்தியுள்ள செங்கற்கள் செய்வதற்குக் காற்றெ டுக்கும் முறை (de-airing process)'கையாளப்படு