உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 களிமம்‌

84 களிறம் கிறது. உயர் வெப்பநிலையில் எரிப்பதன் மூலம் புறப்பரப்பு கண்ணாடிபோல் மாறுகிறது. இவ்வகைக் கற்கள் கடினமானவை; நொறுங்காதவை; எளிதில் உறிஞ்சாதவை; இவை தளங்களில் பதிக்கப் பயன் படுகின்றன. கூரை ஓடுகள். கூரை ஓடுகளில் நாட்டு ஓடுகள், மங்களுர் ஓடுகள், தட்டோடுகள் ஆகியவை பெரும் பான்மையாகப் பயன்படுகின்றன. நாட்டு ஓடுகள் எந்திரக் கருவிகளின்றிக் கைத்தொழில் முறையிலே செய்யப்படுபவை. வை சிறு வீடுகளுக்கும். தற் காலிகக் கட்டடங்களுக்கும் பயன்படும். மங்களுர் ஓடுகள் ஒரு குறிப்பிட்ட அளவில் சுட்டெடுக்கப் படுகின்றன. அவற்றின் அளவுகள் ஒன்றுக்கொன்று கூடி அமையும் வகையில் வடிவமைக்கப்படும். நீர் தேங்கி ஒழுக்கு ஏற்படாவண்ணம் இருக்கும். இத்தகைய ஓடுகளின் அளவுகளுக்கேற்ப இறை வாரங்கள் (rafters) அமைத்தல் வேண்டும். தட்டோடு கள். கூரை ஓடுகளின் கீழ்ப் பகுதியில் அமைக்கப்படு கின்றன. இவை மழை ஒழுக்கைக் கட்டுப்படுத்தும். கூரையின் அடிப்புறத்திற்குச் சீரான பார்வையையும் அளிக்கும். மழை குழாய்கள்-கழிவு நீர்க் குழாய். இதில் நெருக்கமான களிமண் உருகி, புறப்பரப்பின் மேல் மெருகோடு உள்ளது. இவ்வகைக் குழாய்கள் ஒரு முனையில் மணிமுனை (bell end) கொண்டுள்ளன. இக்குழாய் கள் பொதுவாக, நீர், கழிவுநீர், தொழிலகக் கழிவுகள் போன்றவற்றை எடுத்துச் செல்லப் படுகின்றன. ஒரு வகை வடிகால் குழாய்கள் (drain pipe) பண்ணைகளில் நீரை எடுத்துச் செல்லப் பயன் படுகின்றன. இவை துளைகள் உடையனவாகவும் புறப்பரப்பு உருகாமலும் மணிமுனை இல்லாமலும் உள்ளன. பயன் உருவாரம். தகடுகளாகவும் (slab), தொகுதி களாகவும் (block), தனிப்பட்ட வடிவங்களான சுவர் முகப்புகள் (coping), கூரைமுடிவுகள் (cornices), சாள ரத்தளங்கள் (sills) போன்றவையாகவும் உள்ளன. வை கட்டங்களை அழகு படுத்தப் பயன்படுகின்றன. வை கவனமாகத் தெரிந்தெடுக்கப்பட்ட நுண்ணிய களிமண் அல்லது களிமண்கலவைகளிலிருந்து தேவைக் கேற்ற வண்ணங்களில் செய்யப்படுகின்றன. இவற்றின் மேல் ஒளிபுகாத சிறு தளம் (slip) பூசப்படுகிறது. வை இவ்வாறு பூசப்படுவதால் உருவாரத்திற்குக்குறிப் பிட்ட வண்ணம் கிடைக்கிறது. பின்னர் உருவம் மாறாமலும் வண்ணம் நீங்காமலும் கவன மாக எரிக்கப்படுகின்ற றன. சுவர்களுக்குப் பயன் படுத்தப்படும் எந்திரங்களில் செய்த, புனைவு நுட்ப உருவாரம் 8-16 அங்குல அளவுகளில் இருந்து 12-48 அங்குலம் வரை கிடைக்கிறது. இவை திண்மமாகவும் உட்குழிகளுடனும் உள்ளன. கையால் செய்யாத தகடுகள் 4-12 அங்குலப் பருமனிலும், 12-30 அங்குல அகலத்திலும் கிடைக்கின்றன. இவற்றின் நீளம் பல அளவுகளில் உள்ளது. இவை பெரும்பாலும் உட்குழிவாகவும் பின்புறம் திறந்தும் உள்ளமையால் செங்கல் சுவரோடு பொருத்த வாய்ப்பாக உள்ளன. கி.மு . மோகன் நூலோதி.H.C. Plummer, Brick and Tile Engineering, Second Edition, Tata-McGraw-Hill Book Company, New Delhi, 1962. களிமம் இது கூழ்மங்களில் ஒரு வகையாகும். இதில் பிரிகை ஊடகம் (dispersion medium) திண்மமாகவும் பிரிகை நிலைமைப் பொருள் (dispersed phase ) நீர்மமாகவும் இருக்கும். கார்ட்னர் என்பார் கூற்றுப்படி, களிமம் என்பது ஏறக்குறைய ஒரு நிலையான கூழ்ம அமைப் பாகும். எ.கா: தயிர், ஜெல்லி, திண்ம ஆல்கஹால் ஆகியவை. ஜெலேட்டின், அகர்-அகர் போன்ற சால் (sol) ஒன்று குளிர்விக்கப்படும்போது அப்பொருள் முழுதும் சீரான பகுதி- திண்மக் களிம மாக மாறுகிறது. இத்தன்மை களிமமாதல் (gelation) எனப்படும். களிமங்களைப் பின்வருமாறு பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம். பிரிகை ஊடக அடிப்படை. பிரிகை ஊடகம் நீராக இருப்பின் அக்களிமம் ஹைட்ரோஜெல் எனவும் ஆல்கஹாலாக இருப்பின் அக்களிமம் ஆல்காஜெல் எனவும் குறிக்கப்படும். வேதி இயைபு அடிப்படை. களிமங்கள் வேதி யைபின் அடிப்படையில் கனிமக் களிமங்கள் எனவும் கரிமக் களிமங்கள் எனவும் வகைப்படுத்தப்படு கின்றன. காட்டாக, கனிமக் கரைப்பான்கள் கொண்ட களிமங்கள் கனிமக் களிமங்கள் எனவும் கரிமக் கரைப்பான்கள் பயன்படுத்தப்பட்ட களிமங்கள் கரி மக் களிமங்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றன. துகள் அளவு களிமங்கள் கூழ்மத் வகைப்படுத்தப் அடிப்படை. இவ்வடிப்படையில் எனவும் கரடுமுரடானவை தன்மை கொண்டவை எனவும் படும். எ.கா: ஜெல்லிகள், அகர் - அகர் கரைசல். பண்பு அடிப்படை. களிமங்கள் அவற்றின் பண்பு களின் அடிப்படையில் மேலும் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை: மீள் களிமங்கள் (elastic gels).இவை வெப்ப மீள்வகைக் களிமங்கள் எனவும் பெயர் பெறும். களிமமாக்கப்படும் பொருளை வெப்பமான நீரில் கரைத்துப் பின் குளிரவைக்கும்போது இது களிமத் திண்மமாக மாறுகிறது. அகர் - அகர் மற்றும்