காற்றாலை 539
படுத்தலாம். இம்முறைகளில் குணமாகாவிட்டால், ஊசி மூலம் காற்றறையின் உள்ளே இருக்கும் சளியை வெளியேற்றி, தூய உப்பு நீரால் கழுவுதல் சிறந்தது. முனைப்பான முன் தலை சைனஸ் அழற்சி. எத் மாய்டு எலும்பு, கன்ன எலும்பு ஆகியவற்றிலுள்ள சீழ் இதனுள் பரவுகிறது. இது இருபக்கமும் வரலாம். முன்தலையின் கீழ், கண்ணின் மேலே தாங்க முடியாத வலி இருக்கும். எலும்பைத் தொட்டால் வலி மிகுதி யாகும். மூக்குத் தண்டு எலும்பு வளைந்துள்ளவர் களுக்கு ஒருபக்கத்தில் பலமுறை அழற்சி வரலாம். கண்ணின் மேல்பட்டை வீங்கியிருக்கும்; மூக்கினுள் மஞ்சள் சீழ் தெரியும். வலி மிகுதியாக இருந்தால் எலும்பின் அடிப்பகுதியில் தலை மயக்க போட்டுச் சீழை அகற்றி, பிற மருத்துவங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். ஊளசி பறவை எலும்பு. ஏனைய காற்றறை அழற்சியுடன் கலந்த அழற்சி இதிலும் இருக்கும். இங்குள்ள அழற்சி யால் வருகிற வலி இரு கண்களிடையே இருக்கும். மூக்கைச் சிந்தும்போது முன் பக்கமும், உறிஞ்சும் போது பின்பக்கமும் சளி வழியும். ஸ்பி னாய்டு அழற்சி, மற்றெல்லா சைனஸ்களுடன் இதிலும் அழற்சி ஏற்படுகிறது. தலையின் உச்சி, நடுத் தலை, பிள் தலை ஆகிய இடங்களிலும், சில சமயம் காதின் பக்கமும் வலி தெரியும். மூக்கின் பின் வழி யாகச் சளி வெளியே இறங்கி விழுங்கப்படுகிறது.கன்ன எலும்புக் காற்றறை மருத்துவமே இதற்குப் போதும். நாட்பட்ட காற்றறை அழற்சி. ஒவ்வாமை, மூக்குத் தண்டு வளைந்திருத்தல், மேல்தாடையின் இறுதி 4 பற்களில் நோய் மற்றும் உடல் நலம் குன்றிய நிலை யில் தீவிரக் காற்றறை அழற்சி குறைந்தாலும், மீண்டும் வரலாம் அல்லது நாட்பட்ட அழற்சியாக வும் தொடர்ந்திருக்கலாம். தீவிர அழற்சி, மருத்து வத்தில் நலமடையாவிட்டால், மேற்காணும் குறை களைச் சரி செய்ய வேண்டும் அல்லது அறுவை மருத்துவம் செய்து அகற்றி மீண்டும் சீழ் சேராமல் வகை செய்ய வேண்டும். காற்றாலை டி.எம்.பரமேஸ்வரன் இது காற்றின் ஆற்றல் மாற்றத்திற்கு (energy conver- sion) உதவும் பொறியாகும். காற்றுச் சுழலி (wind. turbine) காற்று அசைவினால் உண்டாகும் இயக்க ஆற்றலை (kinetic energy) எந்திர ஆற்றலாசு(mechani- cal energy) மாற்றுகிறது. இது ஒரு தண்டின் (shaft) மூலம் கடத்தப்படுகிறது. ஒரு மின்னாக்கி (generator ) இந்த எந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகிறது. காற்றாலை 539 இவ்வாறு காற்றாலையின் (wind mill) மூலம் மின் சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றிலிருந்து பெறப்படும் ஆற்றல், இயக்கவியல் (kinetics) கோட்பாட்டின் மூலம் பெறப்படுகிறது. திறன் (power) என்பது ஓர் அலகு நேரத்திற்கான (unit time) ஆற்றலைக் குறிக்கும். பொதுவாக ஒரு பொருளின் இயக்க ஆற்றல் 1 MV' ஆகும். இதில் M என்பது நிறை. V என்பது அதன் திசைவேகம் ஆகும். நிறை (M) = PAV. இதில் P என்பது காற்றின் அடர்த்தியாகும். M என்பது A என்ற பரப்பின் வழியாகச் செல்லும் காற்றின் நிறையாகும். ஆகவே, இயக்க ஆற்றல் = +PAV ஆகும். காற்றின் திறன் p = | PAV3Cp Cp என்பது திறன் கெழு ஆகும். Cp கிடைக்கும் ஆற்றல் உள்ளீட்டு ஆற்றல் காற்றாலைகளின் மூலமாகப் பெறப்படும் ஆற்றல் V Ha 10 P = 0.37 என்ற சமன்பாட்டின் மூலம் பெறப் படுகிறது. இவ்வாறாக மாற்றக்கூடிய திறன் அல்லது மடங்குகளைப் ஆற்றல் காற்று வேகத்தின் மூன்று பொறுத்திருக்கும். எனவே காற்றின் வேகம் 20% ஆகக் குறையும் போது வெளிப்படும் திறன் தோரா யமாக 50% குறையக்கூடும். காற்றின் வேகம் நாளுக்கு நாள், பருவத்திற்குப்பருவம் மாறக்கூடியது. காற்றின் பண்புகளைப் பற்றிய குறிப்புகள் பல வழிகளில் பெறப்படுகின்றன. நிலப்பரப்பை ஒட்டி வீசும் காற்றின் பண்புகள், அவ்விடத்தின் குறுக்கை யளவு (latitude), உயரம் (altitude), இடவியல்பு விளக்க விவரம் (topography), மணி, மாதம் அல்லது ஆண்டு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த அளவுகள் ஆகியவற்றைப் பொறுத்தவையாகும். மணியின் அடிப்படையில் (based on scale of the hour) பெறப் பட்ட காற்றின் பண்புகளைப் பற்றிய குறிப்புகள். வடிவமைப்பின் எந்திரவியல் பிரிவிற்குப் பயன்படு கின்றன. இக்குறிப்புகளைத் தவிர, குறைந்த காற்று வேசும், வன்காற்றலை (gusts) ஆகியவற்றைப் பற்றிய விவரங்களும் காற்றாலைகளின் வடிவமைப்பிற்கு மிகவும் முக்கியமானவை. காற்றாலை வடிவமைப்பில் முதன்மையான அம்சம் அது நிறுவப்படும் இடத்தைத் தீர்மானிப்ப தாகும். நிலப்பரப்பிற்கு அருகில் வீசும் காற்றின் வேகம் வீடுகள், மரங்கள் போன்றவற்றால் பாதிக்கப் படுகிறது. நிலப்பரப்பிலிருந்து உயரம் அதிகரிக்க, அதிகரிக்கக் காற்றின் வேகமும் அதிகரிக்கிறது. இவ் வாறு அதிகரிக்கும் வீதம் (rate) எல்லா இடங்களிலும்