226 குறை கடத்தி-படிகம்
226 குறை கடத்தி - படிகம் இப்பட்டை நிரப்பப்படாமல் இருப்பதால் தன்னியல் பாக நகர்ந்து மின்னோட்டத்தில் ஈடுபட முடியும். இவ்விரண்டுக்குமிடையே ஓர் இடைவெளி இருக் கிறது. இது தடுக்கப்பட்ட இடைவெளி எனப்படும் படம் 1,2,3 இல் குறை கடத்திகள், நல்ல கடத்தி கள், தூய குறை கட -த்திகளின் ஆற்றல் மட்டங்கள் காட்டப்பட்டுள்ளன. உலோகங்களில் இந்த ஓர் இடைவெளியின் பகுதி நிரம்பிய பட்டையாக இருக்கும். மின்கடத்தாப் பொருள்களில் இந்த இடைவெளி அகன்று இருக்கும். ஏறத்தாழ AE =5eV, அல்லது அதற்கு அதிகமாக இருக்கலாம். குறைகடத்திப் பொருள்களில் இந்த இடைவெளி குறுகியதாக இருக்கும். AE ஏறத்தாழ 1 eV இருக்கும். ஓர் எலெக்ட்ரானுக்கு இந்த AEev ஆற்றலை வெப்ப எழுச்சி மூலமோ, ஒளி மூலமோ, வேறு முறையிலோ கொடுக்கலாம். இவ்வாறு எலெக்ட் ரான்கள் அமைந்துள்ள மட்டத்திலிருந்து அவை அமையாத மேல் ஆற்றல் மட்டத்திற்குக் கீழ் ஆற்றல் மாற்றப்படும். இம்மேல் மட்டத்தில் அவை தன்னியல்பாக இயங்கத் தேவையான இடத்தைப் பெறுகின்றன இதன் விளைவாக மின்னோட்டம் ஏற்படுகிறது. அதாவது இணைதிறன் பட்டையி லுள்ள எலெக்ட்ரான்களுக்கிடையே உள்ள இணை திறப் பிணைப்பு உடைந்து, எலெக்ட்ரான்கள் விடு பட்டு அதனால் மின்னூட்டம், தோன்றுகிறது என்று குவாண்டம் இயக்கவியல் அடிப்படையில் விளக்கப் பட்டுள்ளது. ஓர் இணைதிறன் பிணைப்பை உடைப் பதற்குத் தேவையான ஆற்றல் ஒவ்வொரு குறை கடத்திப் பொருளையும் பொறுத்திருக்கும். இது ஜெர் துளை Gé Ge E மேனியத்திற்கு 0. 75 eV, சிலிகானுக்கு 1.12eV வைரத்திற்கு 7eV ஆகும். கீழ்மட்ட ஆற்றல்பட்டை யிலிருந்து ஓர் எலெக்ட் ரானை வெளியேற்றிவிட்டால்,அவ்விடம்வெறுமையாக ருக்கும். ஒரு படிக அமைப்பில் இந்தக் காலியான இடம் துளை எனப்படும். படம் 4 இல் ஜெர்மேனியப் படிக அணிக்கோவை யின் சிறிய பகுதி காட்டப்பட்டுள்ளது. இயல்பான நிலையில் கோவையின் இந்தப் பகுதி மின்னூட்ட மற்றதாயிருக்கும். எலெக்ட்ரான் வெளியேற்றப்பட்டு உண்டான துளைகள் கீழ் ஆற்றல் மட்டத்திலேயே இயங்குகின்றன. எலெக்ட்ரான் ஓர் எதிர் மின் னூட்டத்தைப் பெற்றிருக்கிறது. எனவே இது துளை நேர் மின்னோட்டத்தைப் பெற்றிருப்பதற்கு ஒப் பாகும். துளைகளின் இயக்கத்திற்கும் எலெக்ட்ரான் களின் இயக்கத்திற்கும் வேறுபாடு உள்ளது. எனவே ஒரு துளை என்பது நேர் மின்னூட்டம் போலச் செயல்பட்டுப் படிக அணுக்கோவையில் ஊடுருவிச் சல்வதாகக் கொள்ளலாம். தூய குறைகடத்திகளில் மின்னோட்டம். கடத்தும் பட்டையிலுள்ள எலெக்ட்ரான்களும், இணைதிறன் பட்டையிலுள்ள துளைகளும் சேர்ந்து மின்னோட் டத்தில் பங்கு பெறுகின்றன. அதாவது குறை கடத்தி யிலுள்ள மின்னோட்டத்தின் ஒரு பகுதி கடத்தும் பட்டையிலுள்ள எலெக்ட்ரான்களின் ஓட்டத்தாலும் மறுபகுதி இணைதிறன் பட்டையிலுள்ள துளைகளின் ஓட்டத்தாலும் தோற்றுவிக்கப்படும் எனலாம். Ge தனி எலெக்ட்ரான் E படம் 4. ஜெர்மேனியத்தின் இணைதிறன் பிணைப்பு உடைதல் E₁ VE (m. -q) கடத்தும்பட்டை மின்புலத்திசை துளை இணைதிறப்பட்டை E படம் 5