உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 கூம்பின்‌ வெட்டுமுகம்‌

270 கூம்பின் வெட்டுமுகம் தீவனமாகக் கொடுக்கலாம். பிறகு வெயில் காலத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறையும், மழைக் காலத்தில் 1} மாதங்களுக்கு ஒரு முறையும் தழைகளை வெட்டிப் பயன்படுத்தலாம். ஒரு ஹெக்டேரில் 100 டன் தழை கிடைக்கும். தழைகள் அளவுக்குமேலிருந் தால் நிழலில் காயவைத்து, பின்பு தேவைப்படும் போது பயன்படுத்தலாம். கூம்பின் வெட்டுமுகம் இராமன் கொடுத்துள்ள ஒரு தளவளைவரையை (plane curve) எப்போதும் வெட்டும்படியாகவும், அந்த வளைவரை தளத்தில் இல்லாத ஒரு புள்ளி( உச்சி) வழியாகச்செல் லும்படியாகவும் இயங்கும் ஒருநேர்கோடு தோற்று விக்கும்(generate) மேற்பரப்புக்குக் கூம்பின்மேற்பரப்பு (conical surface) என்று பெயர். கூம்பிள் தோற்றுவிக் குங் கோடுகள் உச்சிவழியாகச் செல்லும் இன்னொரு நேர்கோட்டுடன் சமகோணங்களை ஏற்படுத்தினால், {cone of revolution) எனப் கூப்பு சுற்றல் கூம்பு படுகிறது. அந்த நேர்கோடு கூம்பின் சுற்றச்சு (axis of revolution) எனவும், சமகோணம் அரை உச்சிக் கோணம் (semi vertical angle)a எனவும் குறிக்கப்படு கின்றன. சுற்றல் கூம்பை ஒரு தளம் வெட்டுவதால் கிடைக்கும் வளைவரைகளின் இனம் கூம்பின் வெட்டு முகம் (conic section) அல்லது கூம்புவளைவு எனப் படுகிறது. தொடக்க காலத்தில் கிரேக்கர்கள் கூம்பு வளைவைப் பற்றி விரிவாக ஆராய்ந்தறிந்துள்ளனர். கூம்பு வளைவின் வகைகள். மேற்காணும் வரை யறையில் வெட்டுத்தளம் கூம்பின் உச்சி வழியாகச் செல்லாவிடில், கிடைக்கும் வெட்டுமுகம் சிதைவிலாக் கூம்பு வளைவு (non degenerate cone) எனப்படுகிறது. வெட்டுத்தளம் உச்சிக்கு பக்கத்தில் உள்ள கூம்பின் ஒரு பகுதியை மட்டும் வெட்டினால் வெட்டுமுகம் ஒரு வட்டமாகவோ நீள்வட்ட மாகவோ (ellipse) பரவளைவாகவோ (parabola} இருக்கிறது. வெட்டுந்தளம் சுற்றச்சோடு ஏற்படுத்தும் கோணமாகிய 0 = 90' என்றால், வெட்டுமுகம் ஒரு வட்டமாகும் (படம் 1) . <0<90 என்றால், வெட்டுமுகம் ஒரு நீள்வட்டமாகும் (படம் 2), வெட் டுந்தளம் கூம்பின் ஏதேனும் ஒரு தோற்றுவிக்குங் கோட்டுக்கு இணையாக இருந்தால், அதாவது A=& என்றால், வெட்டுமுகம் ஒரு பரவளைவு ஆகும் (படம் 3). வெட்டுத்தளம் கூம்பின் உச்சிக்கு இரண்டு பக்கங்களிலும் உள்ள இரண்டு பகுதிகளையும் வெட்டினால், அதாவது A<a என்றால், வெட்டு முகம் ஓர் அதிபர வளைவு (hyperbola) ஆகும் (படம் 4. வெட்டுந்தளம் கூம்பின் உச்சிவழியாகச் சென் றால் கிடைக்கும் வெட்டுமுகம் சிதைந்த கூம்பு வளைவு (degenerate conic) எனப்படுகிறது. உச்சி வழியாகச் செல்லும் வெட்டுந்தளம் கூம்பின் வட்டம் படம் 1 நீள்வட்டம் படம் 2 பரவளைவு படம் 3 அதிபரவளைவு படம் 4