334 கேசோலின் நிலையம்
334 கேசோலின் நிலையம் பெறும் அமைப்பையும் கேசோலின் (பயனுறு) நிலையம் (gasoline plant) என்று கூறலாம். வரை பெட்ரோலியத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்களைப் பிரித்தெடுத்தோ, தொகுத்துத் தயாரித்தோ பெறலாம் என்றாலும், இன்றும் பெட் ரோல் மட்டுமே இவற்றுள் முக்கியமானதாகக் கருதப் படுகிறது. கச்சா பெட்ரோலிய எண்ணெயைப் பின்னக் -20% காய்ச்சி வடித்தலுக்குட்படுத்தினால் 16 பெட்ரோல் கிடைக்கக் கூடும். உலகின் பெட்ரோல் தேவையைக் கணக்கில் கொண்டால் தயார் ரிக்கப்படும் பெட்ரோவின் அளவு மிகக்குறைவே ஆகும். எனவே, பெட்ரோல் தயாரிப்பு அமைப்பில், குறிப்பிட்ட அளவு கச்சா எண்ணெயிலிருந்து கூடுதலான அளவில் பெட் ரோலைப் பெறுவதற்குப் பிற பெட்ரோலிய வழிப் பொருள்களாக டீசல் எண்ணெய், எரி எண்ணெய், மண்ணெண்ணெய், நீர்மமாக்கவல்ல ஆகியவற்றைப் பெட்ரோலாக மாற்றும்வழிமுறைகள் விரிவாக அறியப்பட்டுள்ளன. பிற பெட்ரோலிய வழிப் பொருள்களை 5-12 வரை கார்பன் அணுக்கள் கொண்ட ஹைட்ரோகார்பன் பின்னமாக மாற்று தலே இவ்வழி முறை அனைத்திற்கும் அடிப்படை யாகும். வளிமங்கள் பிளத்தல் (cracking) மூலமாக 12 கார்பன் அணுக் களுக்கு மேற்பட்ட அடக்கம் கொண்ட மூலக்கூறு சளான டீசல், கெரோசின் ஆகியவற்றைப்பெட்ரோல் மூலக்கூறுகளாக மாற்றலாம். இப்பிளத்தல் வினையை வெப்பத்தாலோ, வெப்பம்.லினையூக்கி ஆகியவற்றின் கூட்டுத் தாக்கத்தாலோ நிகழ்த்தலாம். பிளத்தல் நிலையத்தில் இரு உட்பிரிவுகள் உள்ளன. உள்ளன. அவை, பிளத்தல் நிகழும் அறை, வினையூக்கி புதுப்பிக்கப்படும் அறை ஆகும். அமிலத்தால் கழுவப்பட்ட களிமண் வகை வினையூக்கியை நுண்ணிய தூள்வடிவில் பிளத்த லுக்குள்ளாகும் ஆவியுடன் கலந்து வினைக் கலத்தில் சூடேற்றி ஆவியைச் சிதைவுறச் செய்யலாம். இச் சிதைவின் உடன் விளைவாக வினையூக்கித் தூளின் மீது படியும் கரியை மற்றொரு கலத்தில் மேலும் உயர் வெப்பநிலையில் எரிக்கலாம். இதனால் வினையூக்கி தூய்மையுறுகிறது. பெட்ரோலிய வழி வினைக் கலவையில் பெட் ரோலின் சதவீதத்தைக் கூடுதலாக்குவதற்குப் பலபடி யாக்கமும் பயனாகிறது. மூன்று அல்லது நான்கு கார்பன் அணுக்களைக் கொண்ட ஹைட்ரோகார்பன் களை, சல்ஃப்யூரிக் அமில வினையூக்கியின் முன்னிலை யில் இருபடியாக்கம் அல்லது முப்படியாக்கம் செய்து பெட்ரோல் ஹைட்ரோகார்பன்களைப் பெறலாம். பெட்ரோல் தயாரிப்பு நிலையத்தில் பெட்ரோ லின் அளவை மட்டுமன்றி, தரத்தையும் கூடுதலாக்கு வதற்குச் செயல் முறைகள் உள்ளன. பிளாட்டின வினையூக்கியைஈடுபடுத்தி வினையூக்கத் திருத்தமுறை (catalytic reforming), நீள் சங்கிலி ஹைட்ரோகார்பன் களை வளைய ஹைட்ரோகார்பன்களாக்கும் வளைய மாக்கல் cyclisation), அரோமாடிக் ஹைட்ரோ கார்பன்களின் சதவீதத்தை உயர்த்துதல் (aromatisa- tion), நீள்சங்கிலி ஹைட்ரோகார்பன்களைக் கிளை மிகு சங்கிலி ஹைட்ரோகார்பன்களாக மாற்றுதல் (isomerisation), ஐசோ ஆக்டேனை ஹைட்ரஜ னேற்றம் செய்து ஆக்டேனாக மாற்றுதல், நிறைவுற்ற ஹைட்ரோகார்பன்களை ஹைட்ரஜன் நீக்க செய்து வாயிலாக ஒலிஃபீன்களாக்குதல், ஐசோபியூட்டீனை ஐசோபியூட்டேனையும் வினையுறச் யும் ஜசோ அக்டேனை நேரடியாகப் பெறுதல் (ஆல்கைலேற்றம்) ஆகியவை வேதிவகைத் திருத்த முறைகளுள் முதன்மையானவை. ஒரு பெட்ரோல் தயாரிப்பு நிலையத்தில் பெட்ரோலை மாசுநீக்கம் செய்வது கட்டாயத் தேவையாகும். பெட்ரோலில் ஒலிஃபீன்களின் சதவீதம் கூடுதலாக இருப்பின், அப்பெட்ரோலின் ஆக்டேன் எண் (இடித்தல் எதிர்ப்புத்திறன்) கூடுதலாக இருக்கும். எனினும், உட்கனல் பொறியில் பயன்படும்போது பலபடியாக்கம் நிகழ்ந்து கோந்து போன்ற பொருள் உட்சுவரில் படியக்கூடும். இதைத் தடுப்பதற்கு. பெட்ரோலை அடர்சல்ஃப்யூரிக் அமிலத்துடன் கலந்து ஒலிஃபீனைப் பலபடியாக்கி விளையும் கோந்தை வடிகட்டி அகற்ற வேண்டும். பெட்ரோலில் கந்தகப் பொருள்களான மெர்காப்டன் (mercaptan). ஹைட் ரஜன் சல்பைடு ஆகியவை மலிந்திருப்பின் டாக்டர் கரைசல் (சோடியம் பிளம்பைட்), தாமிர குளோ ரைடு ஆக்சிஜன் கவவை, சோடியம் ஹைப்போ குளோரைட், ஆக்சிஜன் கோபால்ட்டு அணைவு வகை வினையூக்கி - NaOH கலவை. காரம் கலந்த மெதனால், காரம் கலந்த சோடியம் ஐசோ பியூட்டி ரேட், காரம் கலந்த நாப்தீனிக் அமிலம் ஆகிய வற்றுள் ஏதேனும் ஒரு வேதிப்பொருள் கலவை யிலிட்டு அகற்றலாம். ஈரம் கலந்த பெட்ரோல், உட்கனல் பொறியினுள் அரிமானத்தைத் தோற்று விக்கும். இதைத் தடுக்க துருவேற்றத் தடுப்பான்கள் (rust - inhibitors) எனும் குறைப்பி வகைப் பொருள் கள் பயன்படுகின்றன. விரி வான திருத்தங்களுக்கும், தூய்மையாக் கலுக்கும் உட்படுத்தப்படும் பெட்ரோல் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படும்போது எளிதில் அடை யாளம் காண வெவ்வேறு சாயங்களைக் கலந்து இவற்றில் நிறமேற்றம் செய்யப்படும். கேசோலினைப் (பெட்ரோல் பயன்படுத்தி மின்னாற்றலைத் தோற்றுவிக்கும் அமைப்புகளும் கேசோலின் நிலையங்கள் எனப்படுகின்றன. பொது மின் பகிர்வு அமைப்பில் தடங்கல் நேரும்போது, மின் தேவை கட்டாயமாகும் துறைகளில் பயள் படுத்தத்தக்க எளிய, சிறிய மின்னாக்கிகள் (generator) பெரும்பாலும் பெட்ரோலால் பொறித் தொடக்கம்