354 கேலியம்
354 கேலியற் சுண்ணாம்பு CO. சோடியம் அலுமினேட் கரைசல் (பாக்சைட்டிலிருந்து) கலவை வடிகட்டல் ↓ கால்சியம் அலுமினேட் சோடியம் அலுமினேட் (கேலியச்செறிவுமிக்கது) கார்போனிக் அமிலமேற்றம் அலுமினா (கேலியச் செறிவுமிக்கது) படம் 1 ரிக்கப்படுகிறது. இதற்கான வழிமுறைகள் படம் 1 இல் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. பேயர் முறை, பெஜா முறை. ஃப்ரேரி முறை எனப் பல முறைகள் பின்பற்றப்படுகின்றன. அலுமினியத்தின் முதன்மை ஆக்சைடு கனிமமான பாக்சைட்டில் மில்லி யனில் ஒரு பங்கு அளவுக்கே கேலியத்தின் செறிவு உள்ளது. பேயர் முறையில் எரிகாரத்தில் கரைந்த பாக்சைட் சுரைசலில் அலுமினியம் ஹைட்ராக்சைடு படிகங்களைப் புகுத்திக் கரைசலைக் குளிர்வித்தால், கரைசலிலுள்ள அலுமினியம் ஹைட்ராக்சைடு திண்ம மாக வீழ்படியும். இம்முறையை மீண்டும் மீண்டும் நிகழ்த்தினால், வீழ்படிவு தவிர்த்த எஞ்சிய கரை சலில் கேலியத்தின் செறிவு ஒரு லிட்டருக்கு 0.1 கி என்ற அளவுக்கு உயர்கிறது. இந்நீர்மம் கேலியத் தயாரிப்புக்குச் சிறந்த மூலப்பொருளாகிறது. கேலிய உப்புகள் அலுமினிய உப்புகளைவிட அமிலத் தன்மை கூடுதலாகப் பெற்றவை என்ற உண்மை கேலி யத்தை அலுமினியத்திலிருந்து பிரித்தெடுப்பதற்கு உதவும். 3' சுண் அலுமினா நீர்மத்திலிருந்து Al,O 3H,O படிகங் களை அகற்றியபின், எஞ்சிய நீர்மத்துடன் ணாம்பு நீரைச் சேர்த்து எஞ்சிய அலுமினாவையும் வீழ்படியச் செய்யலாம். கரைசலில் கேலியம் எஞ்சி யிருக்கும். இப்போது க்கரைசலில் கார்பன் டை ஆக்சைடு வளிமத்தைச் செலுத்தினால், நுண்ணிய அளவிலுள்ள அலுமினியத்துடன் கேலியம் முழுதும் வீழ்படியும். அலுமினியம் ஆக்சைடை மாசாகக் காண்ட இக்கேலியத்தை எரிகாரத்தில் கரைத்து, சோடியம் சல்ஃபைடு கொண்டு சுன உலோகங்களை அகற்றி, மின்னாற் பகுத்தல் மூலம் தூய கேலியத் தைப் பெறலாம். இம்மின்கலத்தில் காரீயம், இண்டி யம், வெள்ளீயம், கேவியம் உலோகக் கலவை, துத்த நாகம், காரிய வெள்ளீயக் கேலிய உலோகக் கலவை ஆகியன எதிர் மின்முனைகளாகப் பயன்படுகின்றன. ஒரு லிட்டர் கரைசலுக்கு 320 கி. கேலியம் கொண்ட கரைசலை மின்னாற்பகுப்புக்குட்படுத்த 0.3.மி.மி. தடிமன் கொண்ட வெள்ளிய எதிர் மின்முனையும். 41°C வெப்பநிலையும், 0.22 ஆம்பியர்/செ.மீ' மின் னோட்டச் செறிவும் தேவை. இச்சூழ்நிலையில் 33% கேலியம் பிரிக்கப்படுகிறது. வெள்ளீய எதிர்மின் முனைப்பரப்பில் 30 மைக்ரோ மீட்டர் தடிமன் கொண்டதும், 1.4% கேவியம் உள்ளதுமான ஒரு படலம் தோன்றுகிறது. உருக்கிய சோடியம் ஹைட் ராக்சைடுடன் வினைப்படுத்தி இந்தக் கேலியத்தைப் பிரித்தெடுக்கலாம். இங்கிலாந்திலும், ஐரோப்பாவின் பிற பகுதிகளி லும் கேலியம் நிலக்கரிச் சாம்பலிலிருந்து பிரித் தெடுக்கப்படுகிறது. இச்சாம்பல் அல்லது அனல் தூசியை எரிகாரம், சோடியம் கார்பனேட், பொட்டா சியம் கார்பனேட் அல்லது பொட்டாசியம் நைட் ரேட்டுடன் சேர்த்து உருக்கி, உருகிய பொருளை நீரிலிட்டுக் கரைத்தல் வேண்டும். பெரும்பாலான அலுமினாவையும் சிலிக்காவையும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சேர்த்து வீழ்படியச் செய்யலாம். GN செறிவுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலக் கரைசலி லிருந்து கேலியத்தை அமைல் அசெட்டேட்டைக் கரைப்பானாகப் பயன்படுத்திப் பிரிக்கலாம். வாறு பிரிக்கப்பட்ட கேலியத்தின் தூய்மை நிலையை ரோடமின் B என்ற வேதிப்பொருள்களைப் பயன் படுத்தி வண்ணப் பகுப்பாய்வு செய்யலாம். ஜெர்மா னைட் கனிமத்திலிருந்து ஜெர்மானியத்தை எளிதில் ஆவியாக்கி ஹாலைடாக வெளியேற்றியபின் எஞ்சிய கசடை 4-5 M ஹைட்ரோகுளோரிக் அமிலக் கரை சலில் கரைத்து 0 1-0.5M ஆக்சைடில் அமின் அல்லது N ஆக்டைல் அமீன் - பென்சீன் கலவையில் கேலியத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். அமீன் கரை சலையும், 2-5% எரிகாரக் கரைசலையும் எதிரெதிரே செலுத்திக் கேலியத்தைப் பெறலாம். கேலியம் அயனியை அலுமினியம். கால்சியம் முதலிய பிற அயனிகளுடன் எதிர் மின் அயனிப் பரி மாற்ற ரெசின்களில் உறிஞ்சி, கேலியம் அயனியை மட்டும் தனித்துக் (அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைப் பயன்படுத்தி) கரைத்து வெளிக் கொணர்தல் மற்றொரு முறையாகும். ஸ்ஃபலரைட் எனும் துத்தநாகக் கனிமத்தில் நுண்ணிய அளவே இடம் பெறும் கேலியத்தை உருகிய துத்தநாகத்தில் கரைத்துப் பிரிக்கலாம். தயோபாசிலஸ் ஃபெர்ராக் சிடன்ஸ் எனும் நுண்ணுயிர் அமிலக் கரைசலில்