364 கேவென்டிஷ், ஹென்றி
364 கேவெண்டிஷ், ஹென்றி சீமைப் பெருச்சாளி முதன் முதன் முதலில் பெரு நாட்டில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது காடுகளில் வாழும் விலங்கினமாகும். ஆனால் இய பொழுது நல்ல இனங்களைத் தேர்ந்தெடுத்து, வீட்டில் வளர்ப்பதற்கேற்ற இனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் சீமைப் பெருச்சாளி ஆய்வுக் கூடங்களில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இதன் வாழ் காலம் 3-5 ஆண்டாகும். நன்கு வளர்ச்சியடைந்த கேவியா 20-30 செ.மீ. நீளமும். 0.9 கி.கி.எடையும் கொண்டிருக்கும். ஆண்டிற்கு 2 அல்லது 3 முறை குஞ்சு ஈனும், ஒவ்வொரு பேறு காலத்திலும் 2-6 குஞ்சுகளை ஈனும். இக்குஞ்சுகள் மிகவும் அழகாகவும், மென்மையாகவும், தாயிட மிருந்து வேறுபட்டும் காணப்படும். இதன் தோல் நிறம்,மயிர் நீளம், உள் இனச் சேர்க்கையின் பாதிப்பு ஆகியவை தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளன. இதன் இனச் சேர்க்கையும் பழக்க வழக்கங்களும் மிகவும் சுவைக்கத்தக்கவை. பெரிய சீமைப் பெருச்சாளி மேரா அல்லது பெட்டகோனியன் கேவிசுடன் நெருங்கிய தொடர் புடையது. இது ஒரு பெரிய முயலைப்போன்றிருக்கும். இதன் உயரம் 1 அடியாகவும், நீளம் 2-3 அடியாகவும் இருக்கும். குழிதோண்டி வசிக்கும் இவை யாவுமே தாவர உண்ணிகளாகும். மேரா. பகல் நேரங்களில் சுறுசுறுப்பாகத் தன் இரையைத் தேடும். வேகமாக வும். தாவித் தாவியும் ஓடும். பாலைவனத்திலுள்ள கேவிஸ் மிசுவும் சிறியது. இதன் விலங்கியல் பெயர் பீடியோலாகஸ் சலினிகோலா ஆகும். இது பெரும் கேவியா அப்பேரியா பாலும் தெற்கு அர்ஜென்டைனாவிலுள்ள உவர் பாலைவனங்களில் காணப்படுகிறது. கொரிப்பனவற்றிலேயே உருவில் மிகப் பெரியது என்று கருதப்படுவது கேபிபாரா அல்லது கார்பின் கோவாகும். இது ஒரு சிறியபன்றியைப் போன்றேயிருக் கும். 1.2 மீ நீளமும் 5.4 கிகி. எடையும் கொண்ட நீர்வாழ் விலங்கான இது தென் அமெரிக்காவிலுள்ள பெரிய குளங்களிலும் ஆறுகளிலும் காணப்படுகிறது. இதை எளிதாகப் பிடித்து நல்ல இனங்களைத் தேர்ந் தெடுத்து இனப்பெருக்கம் செய்து, தரமான குஞ்சு களைப் பெறலாம். ஆண்டிற்கு இருமுறை சூல் கொள்ளும் பெண் கார்பின்கோ ரு முறையில் மட்டும் 8-10 குஞ்சுகளை ஈனும். கோ. இலட்சுமணன் கேவென்டிஷ், ஹென்றி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல், வேதி யியல் அறிஞரான ஹென்றி கேவென்டிஷ் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவராவர். இவர் பிரான்ஸிலுள்ள நைஸ் என்னுமிடத்தில் 1731 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 10 ஆம் நாள் பிறந்தார். 1810 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் லண்டனில் காலமானார். கேவெண்டிஷ் காற்றின் இயைபு, ஹைட்ரஜனின் இயைபு. சில பொருள்களின் தன்வெப்பம் (specific heat), நீரின் இயைபு, மின்சாரத்தின் பல்வேறு பண்புகள் ஆகிய பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் இவர் தற்போது கேவென்டிஷ் முறை என்று கூறப் படும் ஒரு முறையால் புவியின் நிறையையும், அடர்த் தியையும் கண்டுபிடித்தார். வர் கேவென்டிஷ் இரண்டு பாரம்பரியம் மிக்க மரபில் வந்தவராவார். டிவோன்ஷயர் கோமானும் கென்ட் கோமானும் இவரின் தாத்தாக்களாவர். 1733 இல் இவர் தாயார் காலமானார். 1742இல்லண்டனுக்கு அருகிலுள்ள ஹாக்னே பள்ளியிலும் 1749-53இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பீட்டா ஹவுஸ் கல்லூரியிலும் பயின்றாலும் பட்டம் பெறவில்லை. ஐரோப்பாக் கண்டத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பின்னர் 1783 முதல்,தந்தையுடன் லண்டனில் வசித்து வந்தார். இக்காலக் கட்டத்தில்தான் கேவென்டிஷ் பெஞ்சமின் ஃபிராங்க்ளினாலேயே புகழப்பட்ட தம் தந்தையிடம் உதவியாளராசு இருந்து பல்வேறு மின் மற்றும் வேதியியல் ஆய்வுகளை நடத்தினார். கேவென்டி ஷிற்கு வயது 40 ஆகும் போது இருவருமே செல் வந்தர் ஆயினர். இதனை அக்காலத்தில் வாழ்ந்த ஜீன் - பேப்டிஸிட் பயட் என்ற பிரான்ஸ் - நாட்டு படித்தவர்களிடையே இவர்கள் அறிவியலறிஞர்