உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டை 423

கொட்டை 423 முறையில் கையாளுதல் ஆகியவற்றைக் கொட்டைகள் தாங்கவல்லவை. குறை வெப்ப நிலையில் சேமித்தால் வை கெட்டுப் போகா. பெருமளவில் புரதம் மற்றும் கொழுப்புச் சத்தைக் கொண்டுள்ள கொட்டைகள் குறையளவாகச் சர்க்கரை மற்றும் ஸ்டார்ச்சையும் கொண்டுள்ளன. மேலும், தாதுப் பொருள்களையும் பெருமளவில் கொண்டுள்ள கொட்டைகள் சம் விகித உணவு ஆகும். கொட்டைகளைச் சமை மைத்தோ சமைக் காமலோ உண்ணலாம். இவற்றிலிருந்து கொட்டை வெண்ணெய் கொட்டைப் பசை தயாரிக்கப்படும். சில இடங்களில், காஃபிப்பொடிக்குப் பதிலாகச் கொட்டைப் பொடியைப் பயன்படுத்துகின்றனர். கொட்டைகள் சிறந்த கால்நடைத் தீவனமாகத் தற்போது பயன்படுகின்றன. கொட்டை எளிதில் செரிக்காதெனவும் சிலர் தவறாகக் கருதுகின்றனர். ஆனால் மித வெப்ப நாடுகளில் - அரிதாகப் புலால் கிடைக்கும் பகுதிகளில் வாழும் பெரும்பாலோர் கொட்டைகளை மிகவும் விரும்பி உண்கின்றனர். கொட்டைகளைக் கனி உறையிலிருந்து நீக்கிய பிறகோ கனியுறையுடனோ விற்பனை செய்யலாம். அவ்வாறு கனியுறையுடன் லிற்பனைக்கு வரும் கொட்டைகளைச் சாயமிட்டோ, வெளுத்தோ, மெரு கூட்டியோ விடுவர். பொதுவாக, கொட்டைகளை அவற்றில் நிறைந் துள்ள சத்தின் அடிப்படையில் கொழுப்புச் சத்தைப் பெருமளவில் கொண்டவை; அதிக புரதத்தை காண்டவை: புரதச் சத்தைப் பெருமளவில் கொண்டவை என மூவகைப்படுத்தலாம். கொழுப்புச் சத்தைப் பெருமளவில் கொண்ட கொட்டைகள் பிரேசில் நட். தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் வளர்கிற பெர்தெல்லேஷியா எக்செல்சா எனும் ராட்சச மரம் தடித்த சொரசொரப்பான மரப்பட்டையைக் கொண்டுள்ளது. இம்மரம் 18- 24 உருண்டையான, தடித்த, பழுப்பு நிறக்கனிகளைத் தோற்றுவிக்கும். ஒவ்வொரு கனியும் 10-15 செ.மீ விட்டத்தையும், 1-2 கி.கி எடையையும் கொண்டது. மேலும் 12-24 விதைகள் இருக்கும். (படம்-1) விதையைச் சுற்றிலும் கடினமான எலும்பு போன்ற உறை சூழ்ந்திருக்கும். இவற்றையே பிரேசில் நட் அல்லது கிரீம் நட் அல்லது நிக்கர்டோஸ் (nigger- toes) என்பர். பல காலமாகத் தென் அமெரிக்கர்கள் இதைச் சிறந்த உணவாக மேற்கொண்டு வந்தனர். இக்கொட்டையில், கொழுப்புச் சத்து 65-70% உம் புரதம் குறைந்தது 17%உம் காணப்படும். முந்திரிக்கொட்டை (Anacardium occidentale). முந்திரி, பிரேசில் நாட்டில் தோன்றித் தற்போது உலகெங்கும் பரவலாகப் பயிரிடப்பட்டு வருகிறது. ФР 9 விதை பிரேசில் நட் களியின் குறுக்கு வெட்டுத்தோற்றம். 10 11 1.மலர்கள் 2. முந்திரி ஆப்பிள் 3. முந்திரிக்கொட்டை. 4. இளங்கனி. 5. மஞ்சரித்தண்டு. 6. சிறுகிளை. 7. இலை. 8.பெருங்கிளை/ தண்டு.