உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 கொட்டை

422 கொட்டை தசையிழை கர்முள் முடி நச்சுப்பை நியூக்ளியஸ் ஏதேனும் சிறிய உயிரிகள் விசைமுள்ளின் மீது மோதும்பொழுதோ உரசும்பொழுதோ ஏற்படும் உணர்ச்சியால் இந்த மூடி திறந்துகொள்கிறது. உள்ளி ருக்கும் நீண்ட கசையிழை வெளியே வீசப்படுகிறது. நீண்ட இவ்விழை இரையைச் சுற்றிக் கொள்கிறது. கூர்முள்கள் பையிலிருக்கும் நச்சு நீர்மத்தை மருத்து வரின் ஊசிபோல இரையின் உடலுக்குள் செலுத்தும். நீர்மத்தால் இரை உயிரி உணர்விழக்கிறது. பின் இரையை உணர்நீட்சிகள் வாய்க்குள் செலுத்து கின்றன. கொட்டும் செல்களை அவற்றின் அமைப்பு செயல்பாடுகளைக் கொண்டு ஒன்பது வகைகளாகப் பிரித்துள்ளனர். அவை துளைப்பான் வகை, சுற்றிக் கொள்ளும் வகை. ஹாலோட்ரைகஸ் ஐசோரிசா (Holotrichous isorhiza). ஏட்ரைகஸ் ஐசோரிசா Atrichous isorhiza), ஸ்பைரோசிஸ்ட் வகை, பேசிட் ரைகஸ் ஐசோரிசா (Basitrichous isorhiza), மைக்ரோ பேசிக் மேஸ்டிகோபேரா, ஹைடிரோட்ரைகஸ் மைக் ரோபாசின் யூரிடெலிஸ் என்பன. கொட்டும் செல்கள் ஒரு முறை ஓர் உயிரியைக் கொட்டியபின் அழிந்து விடுகின்றன. இவ்வாறு அடிக்கடி இவ்வகைச் செல்கள் அழிந்துவிடுவதால் புதிய கொட்டும் செல்கள் தோன்ற வேண்டியுள்ளது. இக்கொட்டும் செல்கள் புறப்படையில் காணப்படும் இடைச்செல்களிலிருந்து (interstitial cells) தோன்றுமென அறியப்பட்டுள்ளது. கோவி. இராமசுவாமி கோட்டை கொட்டை (nut) எனும் சொல். கெட்டியான கடின மான கனி உறை (hard pericarp) கொண்ட ஓர் அறையில் ஒரு விதை கொண்ட உலர் கனியையே குறிக்கும். ஆனால், கொட்டையைக் குறிக்கத் தாவரவியலில் வேறு சில சொற்களும் எளிமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கூறிய வரையறை சில தாவரங்களுக்கு, சான்றாக, குவர்கஸ் ஆல்பா (Quercus alba), கேஸ்ட்டேனியா டென்ட் டேட்டா (Castanea dentata), கொரைலஸ் மாக்சிமா (corylus maxima) இவற்றிற்குப் பயன்படும். புறவியல் தோற்றம் அதன் இயற்கை இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அனைத்துத் தாவரங்களின் கனி, விதை யாவற்றையுமே கொட்டை என்பர். உலகின் பல பகுதிகளில், பல காலமாகக் கொட்டைகளைச் சிறந்த உணவுப்பொருளாகப் பயன் படுத்தி வருகின்றனர்; எனினும், அமெரிக்கர்கள் மட்டும் அவற்றை உணவுப் பொருளாகப் பயன் படுத்துவதை விட இனிப்புத் தயாரித்தலுக்கே (confection) பெரிதும் பயன்படுத்துகின்றனர். கொட் டைகள் பெருமளவில் உருவாக்கப்படுவதால் அவை விலை குறைவாகவும், எளிதாகவும் கிடைக்கின்றன. கொட்டைகள் யாவும் குறைந்த நீரையே கொண்டிருத்தலால் உணவுச் சத்து மிகுந்திருக்கும். மிகக்குறைந்த வெப்பநிலை. போக்குவரத்து, தரமற்ற