கொண்டி 443
கொண்டி டி 443 வெளிப்பட்டபின் தாயும் தந்தையுமே இரை கொடுத்து வளர்க்கின்றன. சில சமயங்களில் முட்டை யிடப் பயன்படுத்தும் பொந்துகளை இலை, புல், கம்பளி நூல், இறகுகள் ஆகியவற்றையிட்டு மென் மையாக்கியபின் முட்டையிடுவதும் உண்டு. இதன் குஞ்சுகள் கூட்டை நெருங்குபவர்கள் மீது கெடு நாற்றம் வீசும் நீர்ம வடிவிலான எச்சதைப் பெய்து தற்காத்துக் கொள்ளும் இயல்பைப் பெற்றுள்ளன. கூட்டிலிருந்து வீசும் கெடுநாற்றமும் எதிரிகள் கூட்டை நெருங்காமல் இருக்க உதவும். இனப்பெருக்க காலத்தில் 'ஹொபொபொ ஹொபொபோ' என்றோ, 'கூட், கூட் கூட்' என்றோ ஆழ்ந்த குரலில் தொடர்ந்து 10-15 மணித்துளிகள் வரை சுத்தும். அப்போது தலையைத் தாழ்த்தி அலகை மார்போடு பொருத்திக் கூனிக் குறுகியவாறு உட்கார்ந்திருக்கும். மரக்கிளையோடு வாலையும் படிய வைத்துக் கொண்டு ஒடுங்கிய நிலையில் தோற்றம் தரும். சிலசமயங்களில் இமாலயக் குயில் போலக் குரல் கொடுத்துக் கத்தும் பழக்கமும் இதனிடம் உண்டு. . க. ரத்னம் நூலோதி. Ali Salim and S. Dillon Ripley, Hand Book of the Birds of India and Pakistan, (Vol. 1-10), Oxford University Press, Bombay, 1968. கொண்டி து ஒருவழிப் பல்சக்கரத் தடையமைவின் (ratchet), ஓட்டும் அல்லது பிடிக்கும் இணைப்பாகும். இது தாழ்ப்பாள் அல்லது இயக்கத்தைத் தடுக்கும் கொளுவி (detent) எனவும் வழங்கப்படுகிறது. படம் 1-இல் காட்டப்பட்டுள்ள ஒட்டும் காண்டி (pawi) அ, ஆ எனும் நெம்புகோலின் மூலம் மேல் நோக்கித் தள்ளப்பட்டு, ஒருவழிப் பல் சக்கரத் தடையமைலின் பற்களுடன் இணைக்கப்படுகிறது. பின்னர் அவ்வமைப்பை இடஞ்சுழியாகச் சுற்றுகிறது. அ எனும் கொண்டியின் மீள் வீச்சின் போது. பற்சக்கரம் வலஞ்சுழியாகச் சுற்றுவதை, இ என்னும் பிடிக்கும் கொண்டி தடுக்கிறது. கொண்டியும், ஒரு வழிப் பற்சக்கரத் தடையமைவும் திறந்த, உயர் ணையாகும். தானியங்கிகளில் உள்ள ஒருவழிப் பல்சக்கரத் துடன் அமைந்த தூக்கியின் குண்டலத்தில் (plunger) பிடிக்கும், இயக்கும் கொண்டிகள் பற்சட்டத்தை இணைக்கின்றன. பிடிக்கும் கொண்டி அமைப்புடன் கூடிய பல்சக்கரத் தடையமைவு சுமைதூக்கி, திருகு உருளை ஏற்றப்பொறி (winch) போன்ற ஏற்றப் பொறிகளில், பாதுகாப்பான நிறுத்தியாகச் (safety brake) செயல்படுகிறது. இத்தடையமைவு ஏற்றப் பொறிகளின் உருள்கலத்துடன் இணைக்கப்பட் டுள்ளது. 1 கொண்டி 2 2 ஒருவழிப் பல்சக்கரத் தடை 3கொண்டி படம் 1. ஒரு வழிப் பல்சக்கரத்துடன் இணைந்த கொண்டியின் பிடிக்கும், இயக்கும் அமைப்பு இரட்டைக் கொண்டிகள் இரு திசைகளிலும் யங்கக் கூடியவை (படம் 2 அ). அதன் பிடிக்கும் நிலை எளிதாகத் திருப்பப்படும் (படம் 2 ஆ). நெம்புருள் கொண்டி (cam pawl) சக்கரம், வலஞ் படம் 2.அ) இரட்டைச் செயல் கொண்டி (க) கூடிய கொண்டி (இ) நெம்புகுள் கொண்டி திருப்பக்