உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

சிறுவர் இலக்கியத்தில் மணவையார் பங்கு


னுக்குப் பணம் கிடைக்கும். அதனால் எப்போதுமே சிற்றுண்டி வாங்கித் தின்றுக் கொண்டே இருப்பான்.

அறிவானந்தம் என்று மற்றொரு மாணவன். இவன் உள்ளம் நல்ல பண்புகளின் இல்லம். ஆனால், ஏழை. தாயார் பலகாரம் சுட்டு விற்பவர். அவருக்கு உதவியாக, பல காரங்களைக் கடைகளுக்கு எடுத்துச் சென்று, அங்கே கொடுத்து முடித்த பின்னரே பள்ளிக்குப் போக முடியும். அதனால் தினமும் பள்ளி தொடங்கிய பின்னரே காலதாமத மாக வகுப்புக்கு வருவான். அதற்காக ஆசிரியர் தரும் தண்ட னையைப் பெறுவான். ஆனாலும் எல்லாப் பாடங்களிலும் முதலிடம் பெறும் புத்திசாலி, கெட்டிக்காரன். பாடம் தவிர சேமிப்பு, பேச்சு, கட்டுரைப் போட்டி முதலியவற்றிலும் கெட்டிக்காரன். அதனால் அவனை முருகு முதலிய மாணவர்கள் விரும்புகிறார்கள். புகழ்கிறார்கள்.

அறிவானந்தம் பெறும் புகழைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்காரம் எப்படியாவது, எதிலாவது அவனை வென்று புகழ் பெற விரும்புகிறான்.

சிங்காரம் எதிர்பார்த்த சந்தர்ப்பம் வருகிறது. அறிவா னந்தம் தனக்குக் கிடைக்கும் சிறுதொகையையும் சேமிப்பில் போட்டுச் சேர்த்து வந்தான். சேமிப்பில், அவனுக்கே முதலிடம்.

திடீரென்று அவன் தாயாருக்கு உடல் நலம் குறைந்து போயிற்று. மருத்துவமனையில் இருந்தார். அப்போது அறிவானந்தம் சேமித்த பணம் உதவியது. அதைக் கொண்டே மருந்து வாங்கினான். டாக்டர் நாதன் அவனது சேமிக்கும் பண்பைப் பாராட்டுகிறார். பள்ளியில் நடக்கும் சேமிப்பு விழாவில் ஒரு பேச்சுப் போட்டி நடக்க இருந்தது. அதற்குரிய பேச்சை அவன் எழுதி வைத்திருந்தான். டாக்டர் நாதன்