பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். பூவணணன்

97


அதை வாங்கிப் படித்துப் பார்த்துப் பாராட்டுகிறார். ஆனால், "அறிவானந்தம்! எப்போதும் தாயாருக்கு அருகே இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். வேறெங்கும் செல்லக் கூடாது" என்கிறார். அதனால் பேச்சுப் போட்டிக்கு பெயர் கொடுத்திருந்தும் அதற்குரிய பேச்சைத் தயார் செய்திருந்தும், அறிவானந்தம் பள்ளிவிழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

அறிவானந்தம் போட்டியில் கலந்து கொள்ள மாட்டான் என்பதை அறிந்து சிங்காரம் மகிழ்கிறான். அறிவானந்தம் இம்முறை பரிசு பெறமாட்டான் என்பதே மகிழ்ச்சிக்குக் காரணம். சிங்காரம் இதோடு நிற்காமல் அந்தப் பரிசை தான் பெற விரும்புகிறான். மருத்துவமனைக்குச் சென்று அறிவானந்தத்தைச் சந்திக்கும் சாக்கில், அவன் தயார் செய்த சேமிப்புப் பேச்சினைத் திருடிக் கொண்டு வந்து விடுகிறான்.

சிறுசேமிப்பு விழா நடக்கிறது. விழாவின் தலைவர் டாக்டர் நாதன். சிங்காரம், அறிவானந்தம் தயாரித்த பேச்சை தன் பேச்சாகப் பேசி கைத்தட்டல் பெறுகிறான்.

இறுதியாக டாக்டர் நாதன் பேசுகிறார். சிங்காரத்தின் பேச்சு, அறிவானந்தம் தயாரித்தது என்பதை உணர்ந்தவர் அவர். அதைத்தான் அவர் மருத்துவமனையிலேயே படித்திருக்கிறாரே. அதனால், சிங்காரத்தின் பேச்சு, அறிவானந்தம் எழுதியது என்பதைச் சொல்லுகிறார். அறிவானந்தம் தயாரித்த பேச்சே போட்டியில் முதல் பரிசு பெறுகிறது என்றும் அறிவிக்கிறார்.

அப்போதுதான் சிங்காரம் தன் தவறுகளை உணர்கிறான். அறிவானந்தம் எழுதிய பேச்சுக்காகத் தனக்குப் பரிசளிக்கப்பட்ட புத்தகங்களை, அறிவானந்தத்திடம் சேர்த்து,