98
சிறுவர் இலக்கியத்தில் மணவையார் பங்கு
மன்னிப்புக் கேட்கிறான். தீயவழியில் சென்ற சிங்காரம் சிறு சேமிப்பு விழாவில் விழிப்படைந்து திருந்தி தூயவனாகி விடுகிறான்.
இதுவே கதை.
இக்கதையில் சேமிக்கும் பழக்கத்தின் சிறப்பும், சிக்கன உணர்வின் தேவையும் உயிர்நாடியாக விளங்குகின்றன. இளம் வயதிலேயே சிறுவர்கள் இந்தப் பண்புகளைப் பெற வேண்டியதன் அவசியத்தை இந்த நாவல் சொல்கிறது.
சேமிப்பின் சிறப்பு என்ன ?
"மனிதனைவிட குறைந்த அறிவு படைத்த உயிரினங்களெல்லாம் தவறாமல் சேமித்து வைத்துப் பயனடைகின்றன. மழைக் காலத்துக்கு வேண்டும் என்று வெயில் காலத்தில் இரையைத் தேடி சேமிக்கின்றது எறும்பு. அதே போல் தேனீ, தேனைச் சேர்த்து வைத்துப் பயனடைகின்றது. ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் சம்பாதிக்கும் காலத்தில், வருங்காலத்திற்கு வேண்டுமே எனச் சேமிப்பதில்லை. வருமானம் இல்லாத வயதான காலத்தில், தடி ஊன்றித் தள்ளாடும் பருவத்தில் அமைதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ வசதி இன்றி வருந்தி நிற்கிறான். எதிர்கால வாழ்க்கையை எண்ணிப் பார்ப்பதில்லை. இளமையில் சேமிப்பு உணர்வு இருப்பதில்லை. ஆடம்பரமாக வாழ்ந்து விட்டு முதிய வயதில் கையேந்தி பிச்சை கேட்கும் கேவல நிலைக்கு ஆளாகிறான். அந்த நிலை ஏற்படாமல் இருக்க நாமெல்லாம் இளம் வயதிலிருந்தே - இன்று முதலே சிறுகச் சிறுக சேமிக்க வேண்டும்" (பக்கம் : 60 -61)
இது சிறுவன் அறிவானந்தம் தயாரித்து, சிங்காரம் பேசிய பேச்சின் ஒரு பகுதி.