பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

சிறுவர் இலகசியததில் மணவையார் பங்கு




மணவையாரின் ‘விழா தந்த விழிப்பு’, திருப்பு முனை, தெளிவு பிறந்தது ஆகியவை புனைக் கதைகள் என்றால் 'சிறுவர்க்குச் சுதந்திரம்' ஒரு Faction கருத்துகள் பொதிந்த கதையாகும் என்பது என் முடிவு.

மேலே கண்ட நான்கு நூல்களுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.

1. இவை முதலில் நாடகமாக எழுதப்பட்டு நாவல் ஆனவை.

2. இவை முதலில் வானொலியில் இடம் பெற்று, பின்னர் நூல்களானது.

3. இவை நான்கும் பள்ளி மாணவர்களை தலைமை மாந்தராகப் பெற்றவை.

முதல் மூன்றில் மாணவர்களை மட்டுமே இணைத்துக் கதைப் படைத்த மணவையார், நான்காவது நூலில் கோமதி என்னும் மாணவியை இணைத்து, சிறுமியர்க்கும் இடமளித்து சிறப்புப் பெறுகிறார். இந்த நூல்கள் மணவையார் குழந்தை எழுத்தாளர் என்னும் கூற்றை நிலை நாட்டப் போதுமானவை.

மணவையார் இத்துடன் சிறுவர் இலக்கிய பணியை நிறுத்திக் கொள்ளவில்லை.

சிறுவர் கலைக் களஞ்சியம்

இளைஞர்,இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்

இளையர் அறிவியல் கலைக் களஞ்சியம்

என்னும் இணையற்ற மூன்று கலைக் களஞ்சியங்களை சிறுவர் இலக்கியத்துக்கு வழங்கி சிறப்பித்துள்ளார். இவற்றின் இயல்புகளையும் சிறப்புகளையும் வேறொரு தனிக் கட்டுரை மூலமே ஆய்தல் வேண்டும்.