பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் பூவண்ணன்

105




குழந்தை இலக்கியக் கோமான்

ஓர் எழுத்தாளன் இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தாலும் ஒரு நூலை வெளியிடும்போதே நூலாசிரியர் என்னும் சிறப்புப் பெறுகிறான். நூல்களை எழுதுகின்ற ஓர் அகராதியைத் தயாரித்து வெளியிடுவது என்பது பத்துத் தரமான நூல்களை இயற்றியதற்குச் சமம். ஓர் எழுத்தாளன் ஒரு கலைக் களஞ்சியம் தயாரித்து வெளியிடுவது, அவன் நூறு நூல்களை எழுதி வெளியிடுவதற்குச் சமம். மணவை முஸ்தபா சிறுவர் இலக்கியத்துக்கு மட்டுமே மூன்று கலைக் களஞ்சியம் தயாரித்து வெளியிட்டிருக்கிறார் என்றால் அவரது சிறப்பை எண்ணிப் பாருங்கள்.

பதிப்பாசிரியர்

வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்

நூலாசிரியர்

கலைக் களஞ்சியம் உருவாக்கியவர்

இத்தனையும் குழந்தை இலக்கியத்துக்கு அவர் கொடுத்த கொடைகள். அவர் ஆற்றிய அரும்பணிகள். இந்தச் சாதனையாளரை 'குழந்தை இலக்கிய கோமான்' என்று வழங்குவது முற்றிலும் பொருத்தமாகும்.

குழந்தை இலக்கிய கோமான் நீடுழி வாழ்க! அவரது தொண்டு தொடர்வதாக.