பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதன் அடிகள்

111
ஆக்கமாக அமைந்த புதுமைக் கருத்தரங்கு

இஸ்லாமிய இலக்கியமாகிய சீறாவின் சிறப்பினைப் பிற சமய அறிஞர்களின் துணைகொண்டு விளக்கிய மணவையார், அடுத்து வேறொரு முயற்சியில் ஈடுபட்டார். சிறுபான்மையினராகிய சமணரும் பெளத்தரும் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் இயற்றிய இலக்கியங்களைத் தமிழகத்துக்கு அறிமுகம் செய்யும் வகையில் ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்தார். அவர் சமண இலக்கியம் பற்றி இஸ்லாமியராகிய கவிஞர். மு. மேத்தாவும், பெளத்த இலக்கியம் பற்றி கிறிஸ்தவராகிய பேரா.வள்ளுவன் கிளாரன்சும், கிறிஸ்துவ இலக்கியம் பற்றி இந்து சமயத்தவராகிய முனைவர் க.ப.அறவாணனும், இஸ்லாமிய இலக்கியம்பற்றி இந்து சமயத்தவராகிய முனைவர் சிலம்பொலி க. செல்லப்பனாரும் அக்கருத்தரங்கில் உரையாற்றினர்.

பின்னர் இவ்வுரைகள் நூல்வடிவம் பெற்றபோது கிறிஸ்தவராகிய முனைவர் தயானந்தன் பிரான்சசின் அணிந் துரையும் சமணராகிய ஸ்ரீபால் அவர்களின் வாழ்த்துரையும் அதில் இடம்பெற்றுச் சிறப்புச் சேர்த்தன.

இவ்வாறு கருத்தரங்கங்கள் மூலமும் நூல்கள் மூலமும் மணவையார் ஆற்றிவரும் சமய நல்லிணக்கப் பணி குறிப்பிடத் தக்கது என்பது மட்டுமல்ல, இன்றையத் தமிழகச் சூழ்நிலைக்கு இன்றியமையாததும் ஆகும்.

உண்மை உணர்த்தும் உன்னதப் பணி

மணவையாரின் மற்றொரு பணியையும் இங்குக் குறித்துக் காட்டுதல் தேவையாகிறது. பிற சமயத்திதவரிடையே இஸ்லாத்தையும் இஸ்லாமியரையும்பற்றி ஏற்பட்டிருக்கும் தவறான கருத்துகளை அகற்ற அவர் ஆற்றிவரும் பணியே அது. 'இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்', 'பெரு