பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

கலைச் சொல்லாக்கததில் மணவையாரின் பங்கும் பணியும்


அறிவியல் தகவல்களைத் துணுக்குச் செய்திகளாக வாசகர்களுக்கு வழங்க வேண்டுமென்பது எனது நோக்கமாகும்'

மூன்றாவதாக ஒரு தொகுதியினை, மணவையார் 1995இல் 'மருத்துவ, அறிவியல், தொழில் நுட்பக் கலைச் சொற் களஞ்சிய அகராதி' என்ற பெயரில் வெளியிட்டார். இந்நூலில் 68 அறிவியல் தொழில் நுட்ப மருத்துவப் பிரிவுகளுக்கான கலைச் சொற்களும் விளக்கங்களும் இடம் பெற்றன. முதல் இரண்டு தொகுதிகளுக்கும் இல்லாத சிறப்பு என்னவென்றால் அவர் இதனைப் படங்களுடன் வெளியிட்டதுதான். அறிவியல் செய்திகளைப் படத்துடன் தரும்போதே, வாசகர்கள் அச்செய்திகளை மிகத் தெளிவாகவும் விரைந்தும் படித்துணர முடியும் என்ற நோக்கத்தின் வெளிப்பாடே இப்பதிப்பு. இதில் ஏறத்தாழ 10,000 ஆங்கிலக் கலைச் சொற்கள், தமிழ்க் கலைச் சொற்களும் விளக்கங்களும் படங்களுடன் இடம்பெறுகின்றன.

மருத்துவக் கலைச் சொல் களஞ்சியம்

ஆங்கில மருத்துவத்தைத் தமிழில் கூறும் முயற்சி 1852இல் டாக்டர் ஃபிஷ் கிரீன் என்னும் அமெரிக்கப் பேராசிரியரால் துவங்கப் பெற்றது. அவர் காலத்தில் பல மருத்துவ நூல்கள் மூல நூல்களாகவும் மொழிபெயர்ப்பு நூல்களாகவும் வெளிவந்தன. அவர்தம் நூல்களின் கடைசிப் பக்கங்களில் அந்தந்த நூல்களில் பயன்படுத்தப் பெற்ற கலைச் சொல் பட்டியல்களும் இடம் பெற்றன. இக்கலைச் சொல் பட்டியல்களில் வடசொற்களே அதிகமாக இருந்தன. அவர் காலத்தில் வழக்கில் இருந்த அதிகமான வடமொழிச் சொற் கலப்பே இதற்குக் காரணம்.

'மருத்துவம், வேதியியல், தாவரவியல் தொடர்புடைய அறிவியல் என்னும் பெயருடன் கலைச் சொற்