பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மு அறிவானந்தம்

171


மையானதாகவும் சோதனைக்கள உரைகல்லாகவும் அமைந்துள்ளதெனலாம்.

'மருத்துவக் கலைச் சொல் களஞ்சியம்' உருவாக்க வேண்டும் என்பது இவரது நீண்டநாள் கனவு. அதில் எந்த அளவுக்கு வெற்றி பெற முடியும் என்பதை செயல்பூர்வமாக உணர்ந்து தெளிய தன் மூன்றாவது கலைச் சொல் களஞ்சிய அகராதியில் ஐந்து விழுக்காடு மருத்துவக் கலைச் சொற்களை உருவாக்கி வெளியிட்டார். மருத்துவக் கலைச் சொல்லாக்கமும் சொல், பொருள் விளக்கமும் தன்னால் உரிய முறையில் தர முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு வலுவாக ஏற்பட்டதன் விளைவாக இரண்டே ஆண்டுகளில் "மருத்துவக் கலைச் சொல் களஞ்சிய" நூலை வெளியிட்டார். மருத்துவத்துறையின் பதினைந்து பிரிவுகட்கான கலைச் சொற்களையும் பொருள் விளக்கங்களையும் படங்களோடு விளக்கும் பெரு நூலாக வெளிவந்து இவருக்கு புகழ் சேர்த்தது. சிறந்த அறிவியல் நூலுக்கான தமிழ்நாடு அரசின் பரிசையும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க, குன்றக்குடி அடிகளாரின் நினைவுப் பரிசையும் ஒரு சேரப் பெற்றுள்ளது. இந்நூல் தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளிலேயே முதலாவது நூல் என்பதை,

"ஆங்கிலத்தில் இவ்வகையான அகராதி, களஞ்சிய நூல்கள் பல இருப்பினும் இந்திய மொழிகளுள் இதுவே முதலாவதான முயற்சியாய் இருக்கக் கூடும் என்று நம்புகிறேன்" என இந்நூலை ஆய்வு செய்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர். லலிதா காமேஸ்வரன் கூறியிருப்பது முற்றிலும் சரியான கணிப்பாகும்.

அது மட்டுமல்ல, இம் மருத்துவக் கலைச் சொல் களஞ்சியத் தயாரிப்பு தனி மனிதனின் இமாலயச் சாதனை