பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தமிழக களஞ்சியம் மணவையார்


என்பதை டாக்டர் லலிதா காமேஸ்வரன், அவர்கள் கூறி யுள்ளார்கள்.

"மருத்துவப் பல்கலைக் கழகங்களும் வல்லுனர் குழுவும் செயல்பட்டு உருவாக்கப்பட வேண்டிய ஒரு 'கலைச் சொல் தொகுப்பு' நூலைத் தனியொருவராக முயன்று, பாராட்டத்தக்க முறையில் நிறைவேற்றியிருப்பது தமிழரனைவர்க்கும் மகிழ்ச்சி தரக்கூடியது. துறை வல்லுனர்கள்கூட அவரவர் துறைகளில் தான் சிந்தனையாளராகத் திகழ முடியும். ஆனால், பல மருத்துவப் பிரிவுகளுக்கு உரிய கலைச் சொல்லாக்கங்களைக் கண்டிருப்பதன் மூலம் இம்முயற்சியில் திரு. மணவை முஸ்தபா அவர்கள் தமிழறிவுடன் மருத்துவ அறிவையும் எவ்வளவு ஆழ்ந்து நுணுகிக் கற்றுத் தேர்வு பெற்றுள்ளார் என்பது அனைவரையும் வியக்க வைக்கிறது" என்று கூறி மணவையாரின் அறிவாற்றலையும் சொல்லாக்கத் திறனையும் மனம் திறந்து பேசுவதோடு மருத்துவக் கலைச் சொல் களஞ்சியத்தில் மொழிப் பயன்பாடு எத்தகையாதயமைந்துள்ளது என்பதை,

"மருத்துவச் சொற்களை திட்ப நுட்பத்துடன் தமிழில் சொல்ல முடியும் எனக் காட்டியிருப்பதுடன், சொற்சொட்டுடன் பொருட்செறிவும் ஒருசேர, அவற்றுடன் இலக்கிய மெருகும் ஏற்றி சுவைபட அறிவியல் செய்திகளைத் தமிழில் சொல்லலாம் என்பதற்கு இந்நூல் ஒரு எடுத்துக்காட்டு. மொழிக்கு மட்டும் முதன்மை தராமல் மருத்துவப் பொருளறிவை விளக்கவல்ல துணைக் கருவியாக மொழியைக் கையாளும் பாங்கால், மருத்துவச் செய்திகளை ஆற்றலுடன் ஆசிரியரால் விளக்க முடிகிறது. இதற்காகத் தவிர்க்க முடியாத இடங்களில் ஆசிரியர் தனித்தமிழ்ப் போக்கினைக்கூட நழுவவிட வேண்டிய நிலை உருவாகிறது" எனக் கூறி அறிவியலைப் பொருத்தவரை பொருளுக்கு உரிய இடம் என்ன