பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மு.அறிவானந்தம்

173


என்பதையும் அப்பொருளை விளக்கப் பயன்படும் துணைக் கருவியான மொழிக்குரிய இடம் எது என்பதையும் மிகத் தெளிவாகச் சிந்தித்து, வரைமுறையான கொள்கை - கோட்பாடுகளை வகுத்துச் செயல்படும் அறிவியல் தமிழ் ஆக்கச் சிந்தனையாளராகச் செயல்பட்டு புது வரலாறு படைத்து வருகிறார்.

அரசும் பல்கலைக் கழகங்களும் செய்யத் தவறிய செய்ய முடியாதிருக்கும் பணியை தனியொரு மனிதராக, நண்பர்களின் உறுதுணையோடு நிறைவேற்றி சாதனை படைத்து வருகிறார்.

வளர் தமிழ்ச் செல்வர் மணவை முஸ்தபாவைப் பொருத்தவரை தனக்கென தனி வழி வகுத்துச் செயல்படுபவர். 'காலத்தின் போக்குக்கும் தேவைக்கும் ஏற்ப தமிழ்ப் பணி அமைய வேண்டும். தமிழில் எவை எவையெல்லாம் இல்லையோ அவைகளையெல்லாம் உருவாக்கித் தமிழுக்குத் தரவேண்டும்; எவையெல்லாம் தமிழில் சொல்ல இயலாது எனக் கூறப்படுகிறதோ அவையெல்லாம் தமிழால் சொல்ல முடியும் என எண்பிக்க வேண்டும்' என்பதில் அழுத்தமான மனப்போக்குடையவர்.

இதனை நிறைவேற்ற இவரொத்த அறிவாற்றலும் செயல்திறனுமிக்க நண்பர்களின் உறுதுணையைத் தேடிப்பெற இவர் தவறுவதே இல்லை. அவ்வகையில் இவருக்குப் பல்லாண்டுகளாக உறுதுணையாக அமைந்து வருபவர் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநராக இருந்த திரு. இரா. நடராசன் அவர்கள். மணவையாரின் கல்லூரிக் கல்வியின்போது வகுப்புத் தோழராக இருந்த திரு. இரா. நடராசன் இவருக்கு ஒருநாள் பிந்திப் பிறந்தவர். இவர் முயற்சிகளுக்கு உறுதுணையாயிருப்பதில் பெருமகிழ்வடைபவர். மணவையாரின் வாழ்க்கை வரலாற்றை "காலம்