பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தமிழக களஞ்சியம் மணவையார


தேடிய தமிழனின் அறிவியல் தமிழ் வரலாறு" என்ற பெயரில் நூல் எழுதியதன் வாயிலாக மிகுபுகழ் பெற்றவர். மற்றும் ராஜாராம் மோகன்ராய் நூலகத்திட்ட அலுவலர் திரு.இரா. இராமசாமி மணவையாருக்கு உறுதுணையாக இருந்து வரும் மற்றொரு நண்பர். மற்றும் தான் உருவாக்கும் பல்வேறு துறை சார்ந்த அறிவியல் நூல்களுக்கேற்ப அறிவியல் வல்லுநர்கள் பலரையும் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ள தயங்கியதே இல்லை.

எத்துறைத் தொடர்பான நூலாயினும் அந்நூல் தவ றின்றிச் செம்மையாக அமைய வேண்டும் என்பதில் என்றுமே கண்ணுங் கருத்துமாக இருந்து வருபவர் திரு. மணவை முஸ்தபா என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாக அமைந்துள்ளன.