பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

மொழி பெயர்ப்புப் பணியில் பரவையார்


னிட்டு அச்சிடுவதில் நூலாசிரியர்க்கு உடன்பாடில்லை. அவர் டிரஸ்ட் தலைவரிடம் இதைப் புலப்படுத்த, டிரஸ்ட் தலைவர் மணவை முஸ்தபா திறமையுடையவர் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் திரு. பி.ஆர். சீனிவாசனுக்குத் திருப்தி ஏற்படவில்லை. இறுதியில் முஸ்தபாவை சந்தித்துப் பேசும்படி கேட்டுக் கொள்ளவே, அவர் முஸ்தபாவைச் சந்தித்து அதுவரை செப்பனிட்ட மொழி பெயர்ப்புப் பகுதிகளை ஆராய்ந்து பார்த்தபோது, அஃது மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ந்து போனார். டிரஸ்ட் தலைவரிடம் தன் திருப்தியைத் தெரிவித்துவிட்டுச் சென்றார். முழு நூல் அச்சிட்டு வெளிவந்தவுடன் தனது நூல் சமயச் சார்பான நூலாக இருந்தபோதிலும் எப்படியெல்லாம் மொழிபெயர்ப்பு செப்பனிடப்பட்டு, தன் நூலுக்குப் புதுமெருகூட்டப்பட்டிருக்கிறது என்பதையும் மொழி பெயர்ப்பு என்ற உணர்வே இல்லாமல் தமிழில் மூலமாக எழுதப்பட்ட நூலாகத் திறம்பட சீரமைத்துச் செப்பமாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் விவரித்து நீண்ட கடிதம் டிரஸ்ட் தலைவருக்கு அனுப்பியிருந்தார். அந்தக் கடிதம் மணவையாரின் மொழிபெயர்ப்புத் திறனையும் செப்பனிட்டு அச்சிடும் ஆற்றலையும் முழுமையாக உணர்த்தியது. இதன் மூலம் மொழி பெயர்ப்புத் திறனாளர் என்ற முத்திரை இவர் மீது விழுந்தது.

டிரஸ்ட் அதிகாரிகளுக்குத் தன் மீது ஏற்பட்டுள்ள நல்லெண்ணத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள விழைந்தார். மொழி பெயர்ப்புப் பணியையே உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கும் டிரஸ்ட், மொழி பெயர்ப்புத் திறனை வளர்க்கும் பொருட்டு தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளில் மூன்று மாத மொழி பெயர்ப்புக் கருத்தரங்கு பயிற்சிப் பட்டறை நடத்த வேண்டும் என புது